நர்சுகளுக்கு முகக்கவசம் அவசியம்!

பதிவு செய்த நாள் : ஏப் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நர்சுகளுக்கு முகக்கவசம் அவசியம்!

செவிலியர்கள் உடல் நலத்தை காக்க வழி கூறும், பொது மருத்துவர் தனகீர்த்தி: செவிலியர்கள், கை சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். நோயாளிக்கு என்ன மாதிரியான சேவை செய்தாலும், உடனடியாக அவர்கள் நன்றாக கைகளை கழுவ வேண்டும். தொற்று நோயாளிகள் மத்தியில் பணியாற்றுபவர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.அறுவை சிகிச்சை கூடங்களில் ரசாயனங்கள், நச்சுப் பொருட்கள் போன்வற்றை கையாளும்போது, கையுறையை அவசியம் அணிய வேண்டும். 'எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன்' மற்றும் கதிர்வீச்சு துறை ஆகியவற்றில் பணியாற்றும் செவிலியர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, தங்கள் உடலில் கதிர்வீச்சு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை, பரிசோதித்து கொள்ள வேண்டும். கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருந்தால், உடனடியாக விடுப்பு எடுத்து, மருத்துவர் ஆலோசனையுடன், அதன் தாக்கத்தை குறைக்க வேண்டும்.இரண்டு, 'ஷிப்ட்' மற்றும் விடுப்பு எடுக்காமல் பணி செய்வது என்று, தங்களை தாங்களே வருத்திக் கொள்ளக் கூடாது. போதிய அளவு ஓய்வு, உறக்கம் இருந்தால் தான், நோயாளிகளிடம், செவிலியர்களால் கனிவுடன் பணியாற்ற முடியும்.நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை அடங்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்களை, உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். -அதிக நேரம் நின்றபடியே பணியாற்றுபவர்களுக்கு, நரம்பு சுருள் நோய் பாதிப்பு ஏற்படும் என்பதால், பணி நேரங்களில், சிறிய இடைவெளி எடுத்து, கால்களுக்கான, 'ஸ்ட்ரெச்சிங்' உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.பணிக்கு நடுவே, அவ்வப்போது சிறிய இடைவெளி எடுத்து, மனதை இலகுவாக்கும் வகையில், குடும்பத்தினர் அல்லது சக பணியாளர்களுடன் சேர்ந்து, 'பிக்னிக்' மற்றும் சுற்றுலா செல்லலாம். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்வது, மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJ - chennai,இந்தியா
16-ஏப்-201908:53:14 IST Report Abuse
RAJ Haven't seen
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X