கர்ப்பிணிகள் பயப்பட தேவையில்லை!

பதிவு செய்த நாள் : ஏப் 07, 2019
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கர்ப்பிணிகள் பயப்பட தேவையில்லை!

கர்ப்பகால உடல் வீக்கம் குறித்து கூறும், மகப்பேறு மருத்துவர், கீதா ஹரிப்ரியா:
கர்ப்ப காலத்தின் ஐந்தாவது மாதத்திலிருந்து, சில பெண்களுக்கு, கை, முகம், பாதம் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படலாம்; இது இயல்பானது. இதனால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமோ என, கர்ப்பிணிகள் பயப்பட தேவையில்லை.சீரான நடைப்பயிற்சி மற்றும் சரிவிகித உணவுகளின் மூலமே, இதை, சரி செய்து விடலாம். கர்ப்பிணிகளின் உடலின் தன்மையை பொறுத்து, வீக்கத்துக்கான காரணங்களும், தீர்வுகளும் வேறுபடும். பொதுவாக, கர்ப்ப காலத்தில், உடலின் ரத்த ஓட்டம் மற்றும் நீர்ச்சத்து, வழக்கத்தைவிட, 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும். இது, உடல் உறுப்புகள் வீக்கமடைய, காரணமாக அமையலாம்.கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் எடை அதிகரிக்கும்போது, கர்ப்பப் பை விரிவடையும். அதனால், அதன் அருகில் உள்ள ரத்தக்குழாய் அழுத்தத்துக்கு உள்ளாகி, ரத்த ஓட்டம் சீரின்றி இருக்கும். ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, சருமத்தின் அடியில் நீர் கோர்த்து, வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம். அதிகப்படியான ரத்த அழுத்தம் காரணமாகவும், வீக்கம் ஏற்படலாம்.கர்ப்பிணிகளின் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பு சத்தும், வீக்கத்தை ஏற்படுத்தலாம். அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, கை, கால்களை அசைக்காமல் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதாலும், வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு, உடலில் ஏற்படும் புரதம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளும், வீக்கத்துக்கு காரணமாகின்றன.ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம், மெதுவான நடைப்பயிற்சி அவசியம். இறுக்கமான ஆடை மற்றும் காலணிகளை தவிர்க்கலாம். உடலை விட, கால்களை சற்று உயர்த்தி வைத்து கொண்டால், ரத்த ஓட்ட சீரின்மையால் கால்களில் ஏற்படும் வீக்கம் குறையும். தொடர் வீக்கம் இருந்தால், மருத்துவ ஆலோசனைபடி, ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்யலாம்.புரதச்சத்து நிறைந்த மீன், முட்டை, நட்ஸ், பயறு வகைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளலாம். கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், ஊறுகாய், வற்றல் போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், கீரைகள், சர்க்கரை வள்ளிக் கிழங்கை சேர்த்து கொள்ளலாம்.பால், தண்ணீர், பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை, பருக வேண்டும். சீரான இடைவெளியில் சிறுநீர் வெளியேற்றமும் அவசியம். இதய கோளாறு, சிறுநீரக பிரச்னை உள்ளோர், கர்ப்ப காலத்தின் துவக்கத்திலிருந்தே, மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.மகிழ்ச்சி கொடுப்பவருக்கும் திருப்தி!'வெட்டிங் விஷ் லிஸ்ட்' நிறுவனத்தைச் சேர்ந்த சதீஷ்: திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்றதும், நாம் உடனே யோசிப்பது, என்ன பரிசு வாங்கித் தருவது என்பது தான். 10 சுவர்க் கடிகாரங்கள் பரிசாக கிடைத்தால், கடை தான் ஆரம்பிக்க வேண்டும்.பல நேரங்களில், 'ஷோகேஸ்' பொம்மைகளையே நண்பர்கள், ஆளுக்கு ஒன்று என வாங்கித் தருவர். எதற்கும் இவை பயன்படுவதில்லை.அதே சமயம், அவர்களுக்கான சில தேவைகள், அதே விலையில் இருந்தாலும், அவற்றை யாரும் வாங்கித் தந்திருக்க மாட்டார்கள். இந்த நிலைமையை சரிசெய்யும் விஷயம் தான், 'வெட்டிங் ரிஜிஸ்ட்ரி!'பொதுவாக, 'கார்ப்பரேட் கம்பெனி'கள் ஏதாவது விழா, பார்ட்டி என்றால், தங்களின் பணியாளர்களுக்கு பரிசு பொருள் வழங்குவர்.இதற்காக அவர்கள், ஒவ்வொரு பரிசையும் தேடி வாங்கவும், அனைத்தையும், 'பேக்' செய்து, பெயர் எழுதித் தரவும் முடியாது. அந்த வேலையை, 'கான்ட்ராக்ட்' எடுத்து செய்து தருவதற்காக தான், ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒரு கம்பெனி ஆரம்பித்தோம்.கொஞ்ச நாள் கழித்த பின், திருமணத்திற்கான பரிசு பொருள் தருவதையும், சேர்த்து செய்யலாம் என தோன்றியது. மேற்கத்திய நாடுகளில் இருக்கும் இந்த விஷயம், நம்மூருக்கும் தேவைப்படுவதாக இருந்தது. நம்மூரில், ஒரு திருமணம் எனில், நாமே தேடிப்போய் பரிசு பொருள் வாங்குவது தான் வழக்கம். அதனால், இப்படி ஒரு பிசினசை நாங்கள் ஆரம்பித்த போது, கொஞ்சம் தடுமாற்றமாகத்தான் இருந்தது. பலருக்கும் இருக்கும் நேரமின்மைதான், எங்கள் பிசினசின் பலம் என்பதும் புரிந்தது. இதனால், இப்போது எங்கள் பிசினஸ் நன்றாக போகிறது. 'வெட்டிங் ரிஜிஸ்ட்ரி' என்பது, மணமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை, 'ஆன்லைன் பர்ச்சேஸ்' மூலமாக, இந்த பக்கத்தில் பட்டியலிடுவர். அந்த, 'லிங்க்'கை , திருமண அழைப்பிதழுடன் சேர்த்து இணைத்து விடுவோம்.அந்த திருமணத்திற்கு வருபவர்கள், மணமக்களுக்கு கொடுக்கும் பரிசுக்கு பதிலாக, அந்த பட்டியலில் உள்ள பொருட்களில், தன் பட்ஜெட்டுக்கு பொருந்தும் பரிசு பொருளை தேர்வு செய்து கொள்ளலாம்.அதற்கான பணம் அல்லது தாங்கள் கொடுக்க நினைக்கும் பணத்தை அந்தப் பொருளின் படத்தை தேர்வு செய்து, ஆன்லைனில், பணத்தை டிரான்ஸ்பர் செய்து விடலாம்.இதனால், மணமக்களுக்கும் தேவையானது கிடைத்த மகிழ்ச்சி; பரிசு பொருள் கொடுப்பவர்களுக்கும் உபயோ கமாக கொடுத்த திருப்தி கிடைக்கும்.மேலும் விபரங்களை, info@weddingwishlist.com என்ற இணையதளத்திலும், 87545 50002 என்ற மொபைல் எண்ணிலும் அறிந்துகொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X