என் குழந்தைகள் வளர்ந்து சாதிப்பர்!

பதிவு செய்த நாள் : ஏப் 08, 2021 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 என் குழந்தைகள் வளர்ந்து சாதிப்பர்!

என் குழந்தைகள் வளர்ந்து சாதிப்பர்!
மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்றால் என்ன; யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நிற்கலாம் என்று, தனி மனுஷியாக, அவர்களை வளர்த்து ஆளாக்கி வருவது பற்றி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஆட்டோ ஓட்டி வரும் அமுதயாழினி: திருச்செங்கோடு தான் சொந்த ஊர். செங்கல் சூளையில், அம்மாவும், அப்பாவும் வேலை பார்த்தனர். கஷ்டப்பட்டு படித்து, பிளஸ் 2வில் நல்ல மார்க் எடுத்தேன். சென்னையில ஒரு காலேஜ்ல சேர்ந்தேன். காலேஜ்ல என்கூட படிச்ச வெங்கடேசனும், நானும் காதலிச்சு, கல்யாணம் செய்துகிட்டோம். அவருக்கு சென்னையிலேயே தனியார் கம்பெனியில வேலை கிடைச்சது.
ஒரு வருஷத்துல, எங்களுக்கு ரெட்டை பொம்பளப் புள்ளங்க பொறந்தாங்க. எனக்கும், வீட்டுக்காரருக்கும் ரொம்ப சந்தோஷம்.வாழ்க்கையில குறைனு எதுவும் இல்லைன்னாலும், ஒரு ஆம்பளப் புள்ள இல்லையேனு எனக்கும், என் வீட்டுக்காரருக்கும் ஒரு வருத்தம் இருந்துச்சு. அடுத்து கர்ப்பமானேன்; ஆனா, அதுவும் பொண்ணா பொறந்ததாலே, அந்த எண்ணமெல்லாம் விலகிப் போயிடுச்சு. 'இனி இதுக தான் நம்ம புள்ளைகள், இதுகள எல்லாருக்கும் முன்னால ஆளாக்கிக் காட்டணும்'ங்கிறது மட்டும் தான் மனசுல வந்துச்சு. ஆனா, என் வீட்டுக்காரரு, மூணும் பொண்ணா போச்சேனு புலம்பிட்டே இருந்தாரு; குடிக்கவும் ஆரம்பிச்சுட்டாரு.என் வீட்டுக்காரர்கிட்ட எவ்வளவு மன்றாடியும் அவர் குடியை நிறுத்தல. 'ஆம்பளப் புள்ள, பொம்பளப் புள்ள வித்தியாசமெல்லாம் இனி இல்ல. நம்ம புள்ளைகள நாம நல்லா படிக்க வெப்போம்; அவங்க நம்ம பேர் சொல்ற மாதிரி வாழ்வாங்க'னு அவர்கிட்ட நான் எவ்ளோ சொல்லியும் பலனில்ல.
ஒரு கட்டத்துல ஆபீசுக்கும் குடிச்சுட்டுப் போக, அவரை வேலையை விட்டு நிறுத்திட்டாங்க; வருமானம் இல்லாம வீடு இருண்டு போச்சு.என் கணவர்கிட்ட மன்றாடுறதைவிட, குடும்பத்தைக் காப்பாத்த நான் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறது தான் தீர்வுனு புரிஞ்சது. படிச்ச படிப்புக்கு வேலை எதுவும் கிடைக்கல; அது கிடைக்கிற வரை தேடுற நிலையில என் வீடும் இல்ல. 'டிரைவிங்' கத்துக்கிட்டு, ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன். தினமும், 8 மணி நேரம் ஆட்டோ ஓட்டினா தான், குடும்பத்தை ஓட்ட முடியும். கடினமான வேல தான்; ஆனா, என் பொண்ணுங்களை நினைச்சா, எனக்கு முன்னால எந்தக் கஷ்டமும் பெருசா நிக்காது. என் வீட்டுக்காரர், நான் சம்பாதிக்கிற காசையும் வாங்கிட்டுப் போய், குடிச்சுட்டு வந்து என்னையே அடிப்பார்; இப்ப பிரிஞ்சுட்டோம். என் மூணு பொண்ணுங்களும் நாளைக்கு நல்ல நிலைமைக்கு வந்து, எல்லாத்துக்கும் பதில் சொல்லுவாங்க. அதுவரை நான் அவங்களுக்கு, அப்பாவாவும், அம்மாவாவும் ஓடிட்டே இருப்பேன்!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raj82 - chennai,இந்தியா
08-ஏப்-202117:35:57 IST Report Abuse
raj82 what will be there life if lockdown imposed? share contact number or only account number so that any one can support
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
08-ஏப்-202117:33:22 IST Report Abuse
Dr. Suriya இதுல ஒண்ணா பார்த்தீங்கன்னா அந்த அம்மாவை வாழ்த்தணும்... தனியா எதிர்த்து நின்னு வாழ்க்கையை ஜெயிக்க போராடுறாங்க.... அதே சமையம் இவங்க இளம் வயதில் செய்த தவறு.... காதலித்தது... இப்போ இரு பக்க உறவினர்களும் காப்பாற்ற வர மாட்டார்கள் என்பது தான் உண்மை.... இப்ப இந்த காதல்களை ஆதரிக்கிற இந்த சொடலை குருமா போன்றவர்கள் பக்க எட்டி கூட பார்க்க மாட்டார்கள் என்பது தான் உண்மை....ஆதலினால் பெற்றோர் சம்மதம் இல்லை என்றால் காதலிக்காதீர்கள் சகோதர சகோதரிகளே.....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஏப்-202116:42:50 IST Report Abuse
J.V. Iyer ஆட்டோ அமுதயாழினிக்கும், மகள்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்க பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X