சிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு உண்டு!

பதிவு செய்த நாள் : ஜூன் 12, 2019
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு உண்டு!

ஆண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு தொடர்பாக கூறும், சிறுநீரகவியல் மருத்துவர் சேகர்: சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடு இல்லாத நிலையை, சிறுநீர் கசிவு பிரச்னை அல்லது சிறுநீரை அடக்க இயலாமை என்கிறோம். சொட்டு சொட்டாக பிரியும் சிறுநீர், அதன் பாதை வழியாக, சிறுநீர்ப் பையை சென்றடையும். ஒருவரின் சிறுநீர்ப் பையில், 400 - 600 மி.லி., வரை தேக்க முடியும். இந்த பை, சுருங்கி விரியும் தன்மையுடையது என்பதால், அதிகபட்சம், 850 மி.லி., வரை தாங்கும். சிறுநீர், 400 மி.லி.,யை தாண்டியதும், சிறுநீர்ப் பையின் தசைகள் சுருங்கி, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தகவலை, நரம்புகள் வழியாக மூளைக்கு கடத்தும். நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால், மூளைக்கு செல்லும் தகவல் தொடர்பு தடைபடும். இதை, 'நியூரோஜெனிக் பிளாடர்' என்பர்.அதேபோல், சிலருக்கு வயோதிகம், நோய் காரணமாக சிறுநீர் நிரம்பாமலேயே, சிறுநீர்ப் பையில் தசைச் சுருக்கம் ஏற்படும். இதை, அதீத செயல்பாடு கொண்ட சிறுநீர்ப்பை என்பர். இது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். இவர்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆண்களுக்கு, 'புராஸ்டேட்' சுரப்பி வீக்கம், பிறப்பிலேயே சிறுநீரக பாதை உள்ளிட்ட சிறுநீரக மண்டலம் வளர்ச்சியடையாமல் இருப்பது, புராஸ்டேட் பகுதியில், புற்றுநோய் பாதிப்பு போன்ற காரணங்களால், சிறுநீர் கசிவு பிரச்னை ஏற்படலாம். நாள்பட்ட இருமல், மன அழுத்தம், உடல் பருமன், 'அல்சைமர்' எனும் ஞாபக மறதி நோய் உள்ளவர்கள் மற்றும் கனமான பொருட்களை துாக்கும்போது, அடிவயிற்றில் அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீர்ப்பை அழுத்தப்பட்டு, சிறுநீர் கசிவு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகள், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்பதால், அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது, சிறுநீரை அடக்குவர். அப்போது, சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரை வெளியேற்ற அனுமதிக்கும் வால்வு அழுத்தப்பட்டு, வலுவிழந்து விடும். இதனால், சிறுநீர் கசிவு பிரச்னை ஏற்படும்.

சிறுநீரக தொற்று அல்லது பிற நோய் காரணமாக, சிறுநீர் கசிவு ஏற்படுகிறதா என்பதை, சிறுநீர் பரிசோதனை மற்றும் 'அல்ட்ரா சவுண்ட்' பரிசோதனை மூலம் கண்டறியலாம். ஆரம்ப நிலையில் இருந்தால், மருந்து, மாத்திரையில் குணப்படுத்தலாம். முற்றிய நிலையில், அறுவை சிகிச்சை தேவைப்படலாம். உளவியல் காரணங்கள் கண்டறியப்பட்டால், மன அழுத்தத்தை தவிர்க்க, மனதை எப்போதும் அமைதியாக வைத்து கொள்ள வேண்டும். யோகா, தியானம், நடைபயிற்சி செய்வது நல்லது. எட்டு வயதை தாண்டியும், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X