சிறப்பு பகுதிகள் செய்தி

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பதிவு செய்த நாள் : செப் 22, 2019
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'உங்க மேலயும், உங்க குடும்பத்தினர் மேலயும் உள்ள முறைகேடுகளை, கவர்னர் காட்டியதாகவும், அதற்கு பயந்து தான், போராட்டத்தை நீங்கள் வாபஸ் பெற்றதாகவும், சமூக ஊடகங்களில் காரசாரமாக பேசப்படுகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேச்சு: அமித் ஷாவின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, தி.மு.க., நடத்த இருந்த போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்தோம். இதை சில ஊடகங்கள், திட்டமிட்டு, தவறாக செய்தி பரப்பி வருகின்றன. நாங்கள் சரணடைந்து விட்டது போலவும், பயந்து போய் ஒதுங்கிக் கொண்டது போலவும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் பனங்காட்டு நரி; எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம்.'அட, அப்படியா... தவறு திருத்தப்பட வேண்டும்' என, கூறத் தோன்றும் வகையில், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலரும், திருநங்கையுமான, அபர்ணா ரெட்டி: மத்திய அரசின், தேசிய குடிமக்கள் பதிவேட்டில், ஆண், பெண் என, பாலினத்தை குறிப்பிடும் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. என்னைப் போன்ற திருநங்கையருக்கு, பிறர் அல்லது மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிடும் வாய்ப்பு இல்லை. இது, மோடி அரசு, திருநங்கையருக்கு எதிரானது என்பதை உணர்த்துகிறது.
'பிறகு ஏன், உங்களைப் பார்த்து, திராவிட அமைப்புகள் பயப்படுகின்றன...' என, கேட்கத் துாண்டும் வகையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தென் மாநில தலைவர் வன்னியராஜன் பேச்சு: உடல், மனம், அறிவு மூன்றையும் ஒருங்கே இணைத்து பயிற்சி அளிக்கும் இயக்கம், ஆர்.எஸ்.எஸ்., பயத்திற்கான அடிப்படை காரணம் அறியாமை. பயப்படுபவர்களுக்கு பயப்படாதவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இந்த இயக்கத்தில், நாட்டு நலனும், சமூகப்பணியையும் முன்னெடுத்து செல்கிறோம்.'புதுக்கருத்தா இருக்கே... காஷ்மீர் காரங்க கேட்டா, ரொம்ப சந்தோஷப்படுவாங்க' என, கூறும் வகையில், மார்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர், டி.கே.ரங்கராஜன் பேச்சு: காஷ்மீர் மாநில மக்கள், கல்வி அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குபவர்கள். மிகவும் சுகாதாரமான பகுதி அது. அதை, காவிமயமாக்க வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது.

'உங்க கட்சியும், காங்கிரசும், இப்படித் தான், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புகார் கூறுவீங்க' என, கூறும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, கேரள முதல்வர், பினராயி விஜயன் பேச்சு: மூன்றே கால் ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்த கேரளா அல்ல இப்போதுள்ளது. லஞ்சம், ஊழல், முறைகேடுகள் ஒடுக்கப்பட்ட மாநிலமாக கேரளா மாறியுள்ளது. யார் ஊழல் செய்தாலும், முறைகேடு செய்தாலும், தண்டிக்கப்படுவர் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம்.
'பொருளாதார நிபுணர் போல, பொருளாதார விவகாரங்களை அடிக்கடி, 'டச்' பண்றீங்க. காங்., ஆட்சிக்கு வந்தால், நீங்க தான், நிதியமைச்சரோ...' என, எண்ணும் வகையில், காங்கிரஸ் பொதுச் செயலரும், அக்கட்சியின் தலைவர், சோனியாவின் மகளுமான, பிரியங்கா அறிக்கை: ஆயுள் காப்பீட்டு கழகமான, எல்.ஐ.சி.,யின் பல ஆயிரம் கோடி ரூபாபை, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, லாபம் சம்பாதிக்காத நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இதனால், எல்.ஐ.சி.,க்கு, கடந்த, இரண்டு மாதங்களில், ௫௭ ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
'இதைப் படித்தால், ஆளும் தரப்பினர் மகிழ்ச்சி அடைவர்' என, கூறத் தோன்றும் வகையில், செயல்முறை பொருளாதார ஆராய்ச்சிகளுக்கான தேசிய கவுன்சில் அறிக்கை: டில்லிக்கு அடுத்தபடியாக முதலீட்டாளர்களை கவரும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும், மருத்துவம், கல்வி, கார் உற்பத்தி போன்ற முக்கிய துறைகளிலும் முன்னிலையில் உள்ளது. அதிக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ள மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது.


'இந்த குழப்பமான நேரத்திலா, நீங்க கோரிக்கை வைக்கணும்' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர், கரண் சிங் பேட்டி: என் தந்தை, மஹாராஜா ஹரி சிங், 1947 அக்டோபர் 26ல், காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார்.1929ம் ஆண்டிலேயே, காஷ்மீரில் உள்ள கோவில்களில், தலித் சமூகத்தினர் வழிபட அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அவர் பிறந்த நாளான, செப்டம்பர், 23 ஐ, பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.


'தமிழகத்தில் சுற்றுச்சூழல் விரைவில் மேம்பாடு அடையும்னு சொல்லுங்க...' என நம்பும் வகையில், தமிழக, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு: வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில், 23 ஆயிரம் பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகின்றன. புவி வெப்பமமாதலை தடுக்கும் வகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க, 'சி - 40' என்ற அமைப்பில், முதல்வர் பழனிசாமி, முதன் முறையாக கையழுத்திட்டுள்ளார். அதன் மூலம் தமிழகத்துக்கு, 2,000 மின்சார பஸ்கள் வழங்க, ஜெர்மன் வங்கி குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது.


'எல்லா கட்சிகளும் தான், இலவச அறிவிப்பை வெளியிடுறாங்க. உங்களுக்கு, ஆம் ஆத்மி கட்சி முதல்வர், கெஜ்ரிவால் மீது என்ன காண்டு' என, சொல்லும் வகையில், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஹர்தீப் சிங் பூரி பேச்சு: தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அனைத்தையும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்றால், டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், அனைத்தையும் இலவசமாக கொடுத்து விடுவார். அவரே பின், லஞ்சம், ஊழல் என, குற்றம் கூறுவார். டில்லி மெட்ரோவில், பெண்களுக்கு இலவச பயணம் அனுமதித்துள்ளதால், அந்த நிறுவனம் பாதிப்படையும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X