சிறப்பு பகுதிகள் செய்தி

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பதிவு செய்த நாள் : பிப் 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்க, தி.மு.க.,வுக்கு ஆதரவா பேசிட்டு இருக்கீங்க... லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, என்ன நடக்குமோ, யார் கண்டனர்... பாவம் தான் நீங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழக, காங்., முன்னாள் தலைவர், இளங்கோவன் பேச்சு: தமிழகத்தில், பா.ஜ., - அ.தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும். சசிகலா ஜெயிலுக்கு போய் விட்டார். அ.தி.மு.க.,வினர் எப்போது போவர் என, தெரியவில்லை. காங்., ஆட்சியில், நெசவாளர்களுக்கு, 'சென்வாட்' வரியை நீக்கினோம். இந்திராவின் முகவரியாக, பிரியங்கா வந்துள்ளார். காங்., - தி.மு.க., கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.'கூட்டணி போடலாமா...' என்ற கணக்குடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் பேட்டி: அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரனின் வெளிப்படையான பேச்சும், நடவடிக்கைகளும், மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. அ.தி.மு.க.,வில் ஒரு தரப்பை, தன் ஆதரவாளர்களாக மாற்றி வைத்திருக்கிறார். ஆனால், அ.தி.மு.க., அல்லாத பொதுமக்களிடம், எந்த அளவுக்குச் செல்வாக்கு பெற்றிருக்கிறார் என்பதை, யூகிக்க முடியவில்லை.காது பிய்ந்து போகும் அளவுக்கு, 'ஜிங்சாக்' கொட்டும் வகையில், தமிழக கைத்தறி துறை அமைச்சர், மணியன் பேட்டி: 'இ.பி.எஸ்., தலைமையில் நடக்கும், அ.தி.மு.க., ஆட்சி, ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் கவிழ்ந்து விடும், நீடிக்காது' என, பலரும் நினைக்கின்றனர். ஆனால், அவர்களின் கனவுகள் தகர்ந்து போகும் அளவுக்கு, வளமிக்க, வளர்ச்சிமிக்க, மக்கள் வரவேற்போடு ஆட்சியை வழி நடத்துகிறார் முதல்வர். இந்த ஆட்சி, இன்னும் நீடிக்கும், நிலைத்திருக்கும்.'நீடூடி வாழ்க' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் பேச்சு: நான் இறப்பதற்குள், காட்பாடி சட்டசபை தொகுதியில், தனியார் மருத்துவமனைக்கு நிகராக, சிறப்பு மருத்துவமனை கொண்டு வர வேண்டும். சேலத்தில், இதுபோன்ற மருத்துவமனை உள்ளது. அதேபோல், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தலைமையில், ஆட்சி அமையும் போது, காட்பாடி தொகுதிக்கு, நான் தனியாருக்கு நிகரான, நவீன மருத்துவமனையை கொண்டு வருவேன்; இதுவே, என் லட்சியம்.'ஜெயா, 'டிவி'யில் நிகழ்ச்சி தொகுத்துக் கொடுப்பதில் துவங்கி, அங்கிருந்து, தி.மு.க., பின், காங்கிரஸ் என, அணி மாறி வரும், காங்., செய்தி தொடர்பாளரும், நடிகையுமான, குஷ்பூ பேச்சு: மக்கள் பிரச்னைகளை கேட்பவர், ராகுல். நாட்டின் வடக்கே, மூன்று மாநிலங்களில், காங்கிரஸ் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்று நினைப்பவர், பிரதமர் மோடி. பா.ஜ.,வை பார்த்து, காங்கிரஸ் பயப்படவில்லை; அவர்கள் தான், எங்களை கண்டு அஞ்சுகின்றனர். கமல் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம்.

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X