சிறப்பு பகுதிகள் செய்தி

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பதிவு செய்த நாள் : ஏப் 21, 2021
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஏன் இவ்வளவு சந்தேகம்... அப்படி எதுவும் நடக்கலேன்னு தேர்தல் கமிஷன் சொல்லுதே... அதை மீறி சந்தேகம் இருக்குன்னா, முன்கூட்டியே, 'ரிகர்சல்' ஏதும் பார்த்து, அனுபவம் ஆகி இருக்கோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், கரூர் மாவட்ட, தி.மு.க., செயலர் செந்தில் பாலாஜி பேட்டி: ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லுாரி அறைக்கு அருகில், ரகசியமாக கணினி செயல்பாடுகள் உள்ளன. ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, அருகில் உள்ள அறைகளில் கணினி மற்றும் இணையதளம் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது.


'அதுபோல, இந்தியாவிலும் எப்போது நிலை மாறுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
இஸ்ரேல் நாட்டில், பாதிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.


'அதனால் என்ன; மக்கள்தொகையை தோற்கடிக்கும் வகையில் தான் அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் உள்ளனவே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: உ
லகில், 50 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 150. மேலும், 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 140. ஆனால், இந்தியாவில் பல மாவட்டங்களின் மக்கள் தொகையே, 50 லட்சத்திற்கும் அதிகம்.


'பூட்டிய அறைக்குள் இருக்கும் இயந்திரங்களை, வெளியே இருந்து யாராவது நோண்டக் கூடும் என்ற எச்சரிக்கையில், இவ்வாறு கூறுகிறீர்களோ என்ற, சந்தேகம் வருகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
செய்யூர் சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டு இயந்திரங்கள், நெல்வாய் என்ற இடத்தில், கல்லுாரி ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் சர்ச்சைக்குரிய நடமாட்டம் உள்ளது. 'வைபை' இணையதள வசதி, அங்கு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.


'நோய் எதிர்ப்பு சக்திக்காக, உடலை வருத்திக் கொள்வர் போலிருக்கிறதே...' என, கவலை ஏற்படுத்தத் தோன்றும் வகையில், டில்லி மருத்துவ வல்லுனர் எஸ்.கே.சரின் பேட்டி:
கொரோனாவிலிருந்து தப்பிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, பலர், கையில் கிடைத்த, எவ்வித ஆராய்ச்சிகளாலும் நிரூபிக்கப்படாத சில மருந்துகளை சாப்பிடுகின்றனர். இதனால், கல்லீரல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


'கேட்டது தான் கேட்கிறீர்கள்; பத்தாயிரம் ரூபாயாக கேட்டால், குறைந்தா போய் விடுவீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை:
கொரோனா இரண்டாவது அலையால் வேலைவாய்ப்பை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, தலா, 7,500 ரூபாய் வழங்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X