சிறப்பு பகுதிகள் செய்தி

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பதிவு செய்த நாள் : ஜூன் 12, 2019
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'சீனாவில் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை சற்று விளக்குங்களேன் ஐயா...'எனக் கேட்கத் தோன்றும் வகையில், இ.கம்யூ., மாநில செயலர், முத்தரசன் பேட்டி: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, மாநில அரசு மவுனம் சாதிப்பது, மத்திய அரசுக்கு உடந்தையாக இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதை, மாநில அரசு தெளிவுப்படுத்த வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், காவிரி டெல்டா பாசன மாவட்டங்கள் மட்டுமின்றி, விழுப்புரம், ராமநாதபுரம், கடலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் வெகுவாக பாதிக்கப்படும். மாவட்ட மக்கள் வேலைவாய்ப்பை இழந்து, வெளி மாநிலங்களுக்கு புலம்பெயரும் அபாய நிலை ஏற்படும்.'நம்ம தாய் கட்சியாச்சே...' என்ற ஆதங்கத்துடன், தமிழக, காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் பேட்டி: அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா அல்லது ஐந்து பேர் கொண்ட கமிட்டியின் தலைமையா என்பது குறித்து, அக்கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். அதில், நான் கருத்து சொல்ல முடியாது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி, அ.தி.மு.க.,வின் இரட்டை தலைமை மற்றும் உட்கட்சி பூசலால் கிடைக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்,அ.தி.மு.க.,பலவீனமாகி விட்டது. அ.தி.மு.க.,விற்கு, இனிமேல் வெற்றி வாய்ப்பு இல்லை.'இவ்வளவு நாள், இந்தக் கருத்துகளை நீங்க சொல்லவே இல்லையே... பா.ஜ.,வுடன் சண்டை ஏற்பட்டதும், பொன்மொழி உதிர்க்கத் தோணுதா சார்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், பீஹார் முதல்வர், நிதிஷ் குமார் பேட்டி: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள, 370வது பிரிவு நீக்கப்படக் கூடாது. நாட்டில், பொது சிவில்சட்டம் அமல்படுத்தப்படக் கூடாது. ராமர் கோவில் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவின் படியோ, பேச்சு நடத்தியோ தான் தீர்வு காணப்பட வேண்டும்.'கடந்த ஐந்தாண்டு காலமா, என்ன செய்துட்டிருந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், மத்திய வர்த்தக அமைச்சர், பியுஷ் கோயல் பேட்டி: உலக அளவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் சுணக்க நிலை காணப்படுகிறது. இது, பொருளாதார வளர்ச்சியை மட்டுமின்றி, வேலை வாய்ப்பு உருவாக்கம், மேம்பாடு ஆகியவற்றை மிகவும் மோசமாக பாதிக்கும். எனவே, வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை மட்டுப்படுத்துவதுடன், விதிகள் சார்ந்த பன்முக வர்த்தக அமைப்பில், நம்பிக்கையை மீட்டெடுப்பதும் மிக முக்கியம்; அதற்கு, நாம் தயாராக வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X