பெட்ரோல், டீசல் விலை, சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, லிட்டர் பெட்ரோல் விலை, 92.59 ரூபாய்; டீசல் விலை, 85.98 ரூபாய். கடந்த, 12 நாட்களில் மட்டும், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 2.63; டீசல் விலை லிட்டருக்கு, 3.08 ...
கடந்த, 2013ம் ஆண்டில் உத்தரகண்ட் மாநிலம், பெரும் வெள்ளப் பெருக்கை எதிர்கொண்டது; அதில், 3,000த்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர்; ஏராளமானோர் காணாமல் போயினர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.தற்போது, அதே மாநிலம், சமோலி மாவட்டத்தில், நந்தாதேவி மலைச்சிகரத்தில் இருந்த பனிப்பாறையின் ஒரு பகுதி, கடந்த, 7ம் ...
'ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., தலைமையிலான அரசு பதவியேற்றால், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; மாணவர்கள் வாங்கிய கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும்' என, மாவட்ட வாரியாக நடத்தி வரும், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற ...
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், 22ம் தேதி டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், கட்சிக்கு முழு நேர தலைவரை, ஜூன் மாதத்திற்குள் தேர்ந்தெடுப்பது என முடிவாகியுள்ளது. அத்துடன் அசாம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்ததும், மே 15 மற்றும் 30ம் தேதிகளில், கட்சியின் ...
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, சில நாட்களாக, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், இதில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு சமீபத்தில் நடத்திய பேச்சில், ஓரிரு ...
தமிழகத்தில், ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன. தற்போது, இந்த கணக்கெடுப்பு தொடர்பான புள்ளி விபரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில், பிரத்யேக ...
தமிழகத்தில், ஒரு காலக்கட்டத்தில், லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறந்தது. லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள், லாட்டரி வாங்கி பாதித்து, நடுத்தெருவுக்கு வந்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அதன் விற்பனைக்கு, 2003ல், அதிரடியாக தடை விதித்தார்.இருப்பினும், வெளிமாநில லாட்டரிகளை திருட்டுத்தனமாக ...
தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு, ஒருவழியாக, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்து விட்டார்.கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த செய்தி, அரசு பள்ளிகளில் படித்து, 'நீட்' தேர்வு எழுதிஇருந்த மாணவர்கள் நெஞ்சில் பால் ...
பீஹார் மாநிலத்தில், வரும், 28 நவம்பர், 3 மற்றும் 7ம் தேதிகளில், மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது, நவ., 10ம் தேதி தெரிந்து விடும். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், தற்போதைய பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார், பா.ஜ., உடன் கூட்டணி ...
சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., 2017 ம் ஆண்டு அறிமுகமான போது, அதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை, ஐந்து ஆண்டுகளுக்கு வழங்குவதாக, மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. அதன்படி, கடந்த நிதிஆண்டில், 1.65 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரண மாக, ...
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, இந்த ஆண்டின் முற்பகுதியில், டில்லி ஷாகீன் பாக் பகுதியில், பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு அமலாகும் வரை, இந்தப் போராட்டம் நீடித்தது. சாலைகளை மறித்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். இதுதொடர்பான ...
நாடு முழுதும், 60 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் உருவான, பீதி குறையாத நிலையில், பீஹார் மாநிலத்தில், அக்டோபர், 28, நவம்பர், 3, 7ம் தேதிகளில், மூன்று கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும்; நவம்பர், 10ல் ஓட்டு எண்ணிக்கை என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தொற்றுநோய் பரவலுக்கு ...
விவசாய விளைபொருட்கள் உற்பத்தி மற்றும் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க, உத்தரவாதம் அளிப்பது மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா என, மூன்று சட்ட மசோதாக்கள், சமீபத்தில், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான ...
கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கு எதிராக, மத்திய, மாநில அரசுகள், ஏப்ரல் முதல் தீவிரமாக போராடி வரும் நிலையில், தமிழக அரசுக்கு ஒரு தலைவலியாக, பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடு, சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கொரோனா ஊரடங்கு நேரத்தில், தமிழகத்தின் பல மாவட்டங்களில், ...
---இந்திய - சீன எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், நான்கு மாதங்களுக்கு முன், இந்திய - - சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தது நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து, இந்தியாவுக்கு எதிராக வன்மம் ...
கலை, அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், பொறியியல் கல்லுாரிகளில் முதலாண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாவது ஆண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும்.அதன் பிறகே பட்டம் ...
ஆண்களுக்கான திருமண வயது, 21; பெண்களுக்கான திருமண வயது, 18 ஆக தற்போது உள்ளது. இதில், பெண்களுக்கான திருமண வயதை, 18ல் இருந்து உயர்த்த, மத்திய அரசு தீர்மானித்திருப்பதாகவும், இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் ஜெயா ஜெட்லி தலைமையில், 10 பேர் குழு நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், ...
கடந்த சில நாட்களாக, நாடு முழுதும், சர்ச்சையை கிளப்பியுள்ள விஷயம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை -- 2020' தான். கடந்த, 2006ல் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மாற்றாக, தற்போதைய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை ...
இம்மாதம், 5ல், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த ஆண்டு, இதே நாளில் தான், ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, அந்த ...
கடந்த, 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, புதிய கல்வி கொள்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. 34 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டுள்ள, இந்த கல்வி கொள்கையில், ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி அல்லது பிராந்திய மொழி பயிற்று மொழியாக இருக்கும் எனக் ...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிய மாநிலங்களில், மஹாராஷ்டிராவுக்கு அடுத்ததாக, தற்போது, தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், இறப்பு எண்ணிக்கையில், மஹாராஷ்டிரா, டில்லிக்கு அடுத்ததாக, மூன்றாவதாக வந்துள்ளது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 0.27 ...
ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே, நீண்ட நாட்களாக, நீருபூத்த நெருப்பாக இருந்த மோதல், தற்போது, பகிரங்கமாக வெடித்துள்ளது.கெலாட்டிற்கு எதிராக, சச்சின் போர்க்கொடி துாக்கியதால், அவரின் துணை முதல்வர் பதவியும், மாநில, காங்., தலைவர் ...
உலக நாடுகள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியா, அதிலும் குறிப்பாக தமிழகம் இனி எப்படி, என்ற கேள்வி இன்று அதிகம்.ஏப்ரல் முழுதும், 'கோவிட் - 19' தொற்று பீதி, மற்ற எல்லாவற்றையும் மிஞ்சி நின்றது. இனி மே, 15ம் தேதிக்கு பின்பாவது, நிலை திருந்துமா என்பது அடுத்த கேள்வி.பிரதமர் ...
பகுதி பகுதியாக, 'லாக் டவுன்' நீங்கப் போகிறது என்ற மகிழ்ச்சி செய்தி வருவதற்கு பதிலாக, வரும் புதன் வரை ஊரடங்கு அமலாகி விட்டது.சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சேலம் மாநகரங்களில் உள்ள மக்கள் தொகை கிட்டத்தட்ட, 2.5 கோடிக்கு அதிகம். தமிழக மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட, 40 சதவீதம் பேர். இது தவிர பல்வேறு ...
இந்திய ஜனநாயக வரலாற்றில் காணாத வகையில், இப்பெரிய தேசம், ஊரடங்கு என்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கட்டுண்டுகிடக்கிறது.ஆனாலும், தமிழகம் உட்பட சில மாநிலங்களில், 10 சதவீத செயலாக்கம் துவங்கி விட்டது. கேரளத்தில் பாதிப்பு வேகம் காட்டாத கொரோனாவை, சீரியசாக கருதாமல், உணவகங்களை திறந்து விட்டு, பின் ...
தமிழகம் சந்தித்து வரும், 'கொரோனா' அபாயம், அண்டை மாநிலங்களை விட சற்று குறைவு என்றாலும், இந்த நோய்க்கு எதிரான போரை நடத்த, 9,000 கோடி ரூபாய் தேவை என, தமிழக முதல்வர், பிரதமரிடம் கோரியுள்ளார்.இன்றைய சூழ்நிலையில் மொத்த வளர்ச்சி எவ்வளவு இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில், இதைப் பற்றிய சிந்தனையை ...
கடந்த மூன்று வாரங்களாக நம் நாடு சந்திக்கிற, 'கொரோனா' நோய் தொற்று, முற்றிலும் அகலும் காலம், விரைவில் வரலாம்.சீனாவைப் போல, நம் நாடு கொண்டுள்ள மக்கள் தொகை பெருக்கம், அந்த நாட்டிற்கு கொரோனா ஏற்படுத்திய அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை, தற்போது துளிர் விடுகிறது.ஒரு வார ...
இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில், அரசியல் கட்சிகளின் கொள்கைப் பிடிப்பு என்பது, எந்த அளவுக்கு இருக்கிறது; அதன் தலைவர்கள், கொள்கைகளில் தோய்ந்து செயல்படுபவர்களாக உள்ளனரா என்ற மதிப்பீடு அர்த்தமற்றது.அரசியலில் நிகழும் மாற்றங்கள், கால சூழ்நிலைகளை அனுசரித்தவை. நாட்டின் இரு பெரிய அரசியல் கட்சிகளில், ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.