பெண்களுக்கான நீளும் பிரச்னைகளில், மாதவிடாய் ஒரு இயற்கை நிகழ்வு மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள யுகங்கள் கடந்திருக்கிறோம். மாதவிடாய் பற்றி ஆதி காலத்திலிருந்து, புனைவு பார்வையும், அறிவியல் நோக்கும் மாறி மாறி ஒலித்திருக்கிறது. தற்சமயம், இதை யாரும் பெரும் பேசுப் பொருளாகக் கொள்வதில்லை. எனினும், 'ஆண்ட்ராய்டு' உலகில் பெண்களின் மாதவிடாய் கால கவனிப்பை, சரியான கால இடைவெளியை சோதிக்க, பல, 'ஆப்'கள் உருவாகி வருகின்றன. உள்ளங்கைக்குள் ஒரு டிஜிட்டல் நாப்கினாக வலம் வரும் இவ்வகை ஆப்களில் ஒன்று தான், இந்த பீரியட் டிராக்கர். உங்கள் மாதவிடாய் சுழற்சி தேதியை, இதில் பதிவு செய்து கொண்டால், சரியான சுழற்சி காலத்தில் இது உங்களுக்கு நினைவூட்டல்களை வழங்கும். கருத்தரிப்பு கட்டுப்பாடு, சுய உடல் சோதனை பற்றிய பதிவுகளை ஒரு டேடா பேஸாக நீங்க பதிந்து கொண்டால், அதிவிரைவு வாழ்க்கையில்
பயணிக்கும் உங்களை இந்த ஆப் வழி நடத்தும். மறதி இருப்போருக்கு ஏற்றது இந்த ஆப். உங்க உடல் பற்றி எப்போதும் ஒரு சிந்தனை இருப்பதை மறந்து, மற்ற வேலைகளில் கவனம் வையுங்கள்.