ஓ..அப்படியா?
'செல்லுலாய்டு பிம்பங்களின் தேவதை' என வர்ணிக்கப்படும், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, தன் இரண்டு மார்பகங்களையும் இழந்தவர் என்றால், எவரும் நம்ப மாட்டார்கள். தனக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயங்கள் இருப்பதை கண்டுபிடித்த ஜோலி, அந்த ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக, மார்பக அறுவை சிகிச்சை செய்தார். கடந்த ஆண்டில், தன் கர்ப்பப்பையையும், கருமுட்டை குழாய்களையும், அறுவை
சிகிச்சை மூலம் அகற்றினார். அதை கூச்சப்படாமல், வெளி உலகத்துக்கும் கூறினார். அவரைப் பார்த்து பல பெண்கள், மார்பக புற்றுநோய் தொடர்பாக, வெளியில் பேசினர். சிலர் அறுவை சிகிச்சைக்கு முன் வந்தனர். இப்போது, தான் செல்லும் இடங்களில் எல்லாம், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். திரையில் மட்டுமே தேவதையாக தெரிந்த ஜோலி, பலரின் குடும்பங்களிலும், இன்று தேவதையாக போற்றப்படுகிறார்.