இந்த நிலை மாறி விடும்!
- சார்லி சாப்ளின்
இந்த உலகில் நிலையானது எதுவுமில்லை. இன்பமும், துன்பமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒருமுறை துன்பம் ஏற்பட்டால், அடுத்து நிச்சயம் இன்பம் வரும். துன்பம் வந்து விட்டது என்று சோர்ந்து போனால், இன்பம் வருவது அரிதாகி விடும். துன்பமில்லாமல் இன்பம் ஏது... தனக்கு பெரும் துன்பம் நேர்ந்த போதெல்லாம், இந்த வார்த்தையை சொல்லித் தான், சார்லி சாப்ளின் தன்னை தானே மீட்டெடுத்துக் கொண்டார். வாழ்வின் சிக்கலான தருணங்களில், இந்த வார்த்தையை உங்களுக்குள் ஒரு முறை சொல்லிக் கொண்டால், உடனே, மனதில் பெரும் திருப்தி ஒன்று ஏற்படும். அது தான், இந்த வார்த்தையின் வலிமை.