சிறகு தரும் சித்திரத்தையல்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2017
00:00

இதுக்கு நான் செலவு பண்ணினதுன்னு பார்த்தா, 100 ரூபாய்க்குள்ளே தான் இருக்கும். ஆனா, 5,000 ரூபாய் கட்டணம் வாங்குனேன். 4,900 ரூபாய் லாபம்' - ஸர்தோசி பில்லிங், எம்போஸ்டு த்ரெட் , தாம்பூர் வேலைப்பாடுகளுடன் கூடிய, ஆரி எம்ப்ராய்டரி செய்யப்பட்ட வசீகர ரவிக்கையை காண்பித்து அந்தப் பெண் சொல்ல, ஆச்சரியம் என் புருவம் உயர்த்தியது.

சித்திரத்தையல் எனும் இந்த எம்ப்ராய்டரியில் இவ்வளவு வருமானமா?

இதென்ன பிரமாதம். கற்பனை வளமும் தொழில் நேர்த்தியும் இருந்தால், மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் இத்தொழிலில் வருமானம் ஈட்ட முடியுமாம்!

ஆரி சித்திரத்தையல்
உறுதியான ஸரி நூல்/ மின்னும் பட்டு நூல், முத்து, மணிகள், உலோகப்பட்டை, இறகு மற்றும் ஜமிக்கி கொண்டு ரவிக்கை, சேலை உள்ளிட்ட உடைகளின் மீதும், விரும்பும் துணிகளின் மீதும் செய்யப்படும் கலைநயமிக்க வேலைப்பாடே ஆரி சித்திரத்தையல்.

ஆரி - முதல்நிலை
செயின் ஸ்டிச், 'பா' தையல் எனும் பட்டன் ஹோல் ஸ்டிச், ப்ளை ஸ்டிச், பெதர் ஸ்டிச், லீப் ஸ்டிச், சேடின் ஸ்டிச், ஸ்டிரிப்டு பட்டன் ஹோல் ஸ்டிச், ஸ்டிரிப்டு லீப் ஸ்டிச், கற்கள் பதித்து பின்னும் காட்டா ஸ்டிச், நெருக்கமான வேலைப்பாடுகள் கொண்ட வாட்டர் பில்லிங் ஸ்டிச், தாம்பூர் ஸ்டிச், ஜமிக்கி ஒர்க், சுகர்பீடு ஒர்க், ஹாப் பீடு ஒர்க் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்டது இப்பிரிவு.
பயிற்சி கட்டணம்: 4,000 ரூபாய்
கால அளவு: 10 மணி நேரம்

ஆரி - இரண்டாம் நிலை
குந்தன் ஸ்டோன் ஒர்க், எம்போஸ்டு த்ரெட் ஒர்க், எம்போஸ்டு பீட்ஸ் ஒர்க், ஸர்தோசி லேசி அண்ட் டெய்சி ஒர்க், எம்போஸ்டு ஸர்தோசி ஒர்க், கட் ஒர்க், ரோப் ஸர்தோசி ஸ்டிச், ஸர்தோசி செயின் ஸ்டிச், லுாப்பிங் செயின் ஸர்தோசி ஸ்டிச், சீடிங் ஸ்டிச், ஸர்தோசி லீப் ஸ்டிச், லீப் ஸ்டிச் இன் பீட்ஸ், எம்போஸ்டு ஸர்தோசி லீப் ஸ்டிச், ஸர்தோசி பில்லிங், பிரெஞ்ச் நாட், ஜமிக்கி பிரெஞ்ச் நாட், ஸர்தோசி பிரெஞ்ச் நாட் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட வகைகள் இப்பிரிவில் உண்டு.
பயிற்சி கட்டணம்: 3,000 ரூபாய்
கால அளவு: 10 மணி நேரம்

பயிற்சிக்குப் பின்...
மேற்சொன்ன ஸரி நூல், பட்டு நூல், முத்து, மணிகள் உள்ளிட்டவையோடு ஆரி ஊசி, 18 அங்குல அளவுள்ள ஸ்டாண்ட் மற்றும் ப்ரேம் தேவை! இவற்றுக்கான அதிகபட்ச செலவு ரூ. 500 மட்டுமே! அனைத்து பேன்சி ஸ்டோர்களிலும் இப்பொருட்கள் கிடைக்கும்.

முந்தானை புதையல்
ஆரி சித்திரத்தையலோடு சேர்த்து புடவை முந்தானைக்கு வசீகரம் சேர்க்கும் சில்க் த்ரெட் ஒர்க், ஸரி த்ரெட் ஒர்க், கொச்சு ஒர்க், க்ரோஷா ஒர்க் பயிற்சியையும் முடித்துவிட்டால், புடவைக்கு ரூ.300 முதல் ரூ.2,000 வரை சம்பாதிக்கலாம். ஆரி வேலைப்பாட்டில் ஸ்ர்தோசி ஒர்க் இரட்டிப்பு வருமானத்தை தருவது போல, இதில் க்ரோஷா வித் பீட்ஸ் ஒர்க் தரும்.
எல்லாம் சரி. ஆனா...

என்ன... நம்மால முடியுமான்னு யோசிக்கிறீங்களா? வானமே எல்லைன்னு ஆனதுக்கப்புறம் மேகமெல்லாம் ஒரு தூரமா?

தகவல் உதவி: பிரபாஸ் டிசைனர், சென்னை. 96770 03313

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pechimuthu Sakthivel - Chennai,இந்தியா
10-மே-201707:56:14 IST Report Abuse
Pechimuthu Sakthivel வேலைப்பாடுகள் மிகவும் அழகாக இருக்கின்றன. மேலும் விபரங்களுக்கு www.Facebook .com/Designblouses மற்றும் www,prabhasdesigns,com பார்க்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X