நான் ராஷ்மி; ஓட்டப் பந்தய வீராங்கனை!
இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்கப் போற போட்டியில 3 மாத கருவை சுமந்தபடி நான் ஓடப் போறேன். அதுக்கு முன்னாடி... என் கர்ப்பப்பையில வளர்ற அந்த உயிரோட இப்போ பேசப் போறேன்.
'செல்லம்... நான் பெண்ணே இல்லைன்னு ஆய்வு முடிவுகள் வந்தப்போ என் ஓட்டப் பந்தய வாழ்க்கை முடிவுக்கு வந்திருச்சு. அப்போதான் நீ என் வாழ்க்கைக்குள்ளே வந்தே; ஆரோக்கியமான என்னை ஒரு பெண்ணா எல்லாருக்கும் அடையாளம் காட்டினே! என் மேலான நீதிமன்ற தடை நீங்குச்சு! இப்போ, உன்னை சுமந்திருக்கிற நிலையில நான் பந்தயத்துக்கு தயாராயிட்டேன்.
'இந்த சூழல்ல எனக்கு சுமையா இருக்கிறதா நீ நினைக்கலாம்; ஆனா, நீ என் சுமை இல்லை... பலம்! உன்னை சுமந்து ஓடுறதுக்கான அனுமதியை உன்கிட்டே கேட்காததுக்காக என்னை மன்னிச்சிடு. அம்மா உன்கிட்டே கேட்கிறது ஒண்ணே ஒண்ணுதான்... வெறும் 13 வினாடிகள் மட்டும் எனக்கு ஒத்துழைப்பு கொடு; அதுபோதும்; அதுக்கப்புறம் இந்த நாளை ஒரு வரலாற்று கதையா அம்மா உனக்கு சொல்வேன்!'
இந்தநேரத்துல எங்கப்பா என்கிட்டே சொன்னார்...
'ராஷ்மி... ஜெயிக்கிறதும், தோற்குறதும் ஒரு செயலோட விளைவுகள்; நீ கவனம் செலுத்த வேண்டியது செயல்ல மட்டும்தான்!'
ராஷ்மியோட வெற்றிக்கான பார்முலா இதுதான்!
படம்: ராஷ்மி ராக்கெட் (ஹிந்தி)