கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
00:00

கேள்வி: புதிய போல்டர்களை உருவாக்க ஷார்ட் கட் கீ ஏதேனும் உள்ளதா? ஒவ்வொரு முறையும் மெனு பெற்று, நியூ கிளிக் செய்த பின்னர், போல்டர் தேர்ந்தெடுத்து அதன்பின் பெயர் கொடுத்து உருவாக்க வேண்டியுள்ளது. இதற்கான நேரத்தை மிச்சப்படுத்த முடியுமா?
-சா. கமல்ராஜ், புதுச்சேரி.
பதில்: அதிவிரைவாக செயல்படத் தான் கம்ப்யூட்டர் உள்ளது. நீங்கள் கேட்கும் வசதி பெற, விண்டோஸ் 7 உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும். இதில் புதிய போல்டரை உருவாக்க, எந்த டைரக்டரியில் அமைக்க வேண்டுமோ, அந்த டைரக்டரி செல்லவும். பின் கண்ட்ரோல் + ஷிப்ட் + என் கீகளை அழுத்தவும். புதிய போல்டர் உருவாகும். அதற்குப் பெயர் ஒன்று சூட்டவேண்டுவதுதான் உங்களின் வேலை.
இந்த ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப்பிலும் போல்டரை உருவாக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேற்கொள்ளும் தேடல் சொற்களை அல்லது சொற்கோவைகளை பதிந்து வைத்துப் பயன்படுத்த முடியுமா? ஒவ்வொரு முறையும் டைப் செய்வதில் நேரம் வீணாவதுடன், சில வேளைகளில் தவறுகளும் ஏற்படுகின்றன.
-இரா. தமிழ்நேசன், பொள்ளாச்சி.
பதில்: சரியான கேள்வி. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் நாம் பயன்படுத்தும் எந்த தேடல் சொற்களையும் (search string) சேவ் செய்து, பின்னர் மீண்டும் பயன்படுத்தலாம். எனவே ஒரே தேடல் சொற்களை மீண்டும் மீண்டும் டைப் செய்து உள்ளீடு செய்ய வேண்டியதில்லை. கீழ்க்கண்டபடி இதற்கு செயல்பட வேண்டும். முதலில் Windows Explorer திறக்கவும். இதற்கு Start>Computer பயன்படுத்தலாம். அல்லது Windows Explorer என ஸ்டார் பட்டன் மேலாக உள்ள சர்ச் பாக்ஸில் டைப் செய்திடலாம். இப்போது கிடைக்கும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவின் மேல் வலது மூலைப் பகுதியில் ஒரு சிறிய தேடல் கட்டம் கிடைக்கும். இதில் நீங்கள் டைப் செய்வதற்கான வசதி கிடைக்கும். இதில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை டைப் செய்திடவும். எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டர் ட்ரைவில் உள்ள ஜேபெக் பட பைல்களைத் தேடி அறிய jpeg என டைப் செய்திடலாம். இதற்கான முடிவுகள் பாப் ஆகி எழுந்து வந்த பின்னர், Save search பட்டனில் கிளிக் செய்திடவும். இது விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இடது புறம் இருக்கும். இப்போது இன்னொரு விண்டோ எழுந்து உங்கள் தேடலை எந்த பெயரில் சேவ் செய்திட என்று கேட்கும். பெயரினைக் கொடுத்து Save பட்டனை கிளிக் செய்திட்டால், இது சேவ் செய்யப்படும்.
நீங்கள் இது போல சேவ் செய்தவை எல்லாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரின் இடதுபுறமாக உள்ள Favorites பிரிவில் இருக்கும். அதில் கிளிக் செய்து, முன்பு சேவ் செய்த சொற்களைக் காணலாம். அதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்தால், தானாகவே தேடல் வேலை தொடங்கி உங்களுக்கு முடிவுகள் காட்டப்படும்.

கேள்வி: அனைத்து விண்டோஸ் சிஸ்டத்திலும் இயங்கக் கூடிய இலவச பயர்வால் புரோகிராம் இணையத்தில் எங்கு கிடைக்கும்?
- ஆ.ஸ்வேதா லஷ்மி, கோவை.
பதில்: பல இணையதளங்களில் இலவச பயர்வால் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில் சிறப்பானவை என்று நான் கருதும் தளங்களை இங்கு தருகிறேன். முதலாவதாக ஸோன் அலார்ம் (Zone Alarm). இதனை Zone Labs என்ற நிறுவனம் தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறது. இதன் இணைய தளம் சென்று, கவனமாக இலவச பதிப்பினை தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்ட ரில் பதிந்து எளிதாக இயக்கலாம். கட்டணம் செலுத்தி கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பதிப்பினையும் பெறலாம். அடுத்ததாக, சன்பெல்ட் கெரியோ (Sunbelt Kerio). இதனை http://www. sunbeltsoftware.com/Kerio.cfm என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். Sunbelt software என்ற நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது. இந்த பயர்வால், முதல் 30 நாட்களுக்கு கூடுதல் வசதிகளுடன் இயங்கும். இவை தேவை எனில் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லை எனில் சில வசதிகள் குறைக்கப்பட்டு இலவசமாக இயங்கும்.
கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் இரண்டு தசமஸ்தானங்களில் பண மதிப்பு மற்றும் சில வேல்யூக்களை அமைக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் தசமஸ்தானத்திற்கான புள்ளியை அமைப்பது சிரமமாக உள்ளது. இதற்கென ஏதேனும் ஷார்ட்கட் உள்ளதா?
- என்.கே. ஷ்யாம் சுந்தர், திருப்பூர்.
பதில்: ஷார்ட்கட் இல்லை. எக்ஸெல் புரோகிராமில் இதனை செட் செய்திடலாம். நீங்கள் எக்ஸெல் எந்த புரோகிராம் பயன் படுத்துகிறீர்கள் என எழுதவில்லை. எக்ஸெல் 2003 எனில், எக்ஸெல் புரோகிரா மினை இயக்கியபின்னர், Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் கிடைக்கும் டேப்களில், Edit என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் நான்காவதாக Fixed Decimal Places என்ற பிரிவு இருக்கும். இதன் எதிரே எத்தனை டெசிமல் பிளேஸ் இருக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், இங்கும் ஆப்ஷன்ஸ் மெனு செல்லவும். ஆப்ஷன்ஸ் விண்டோவில், இடது பக்கம் உள்ள “Advanced” என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். வலது பக்கமாக உள்ள “Editing options” என்ற பிரிவில், “Automatically insert a decimal point” என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். தேவைப்பட்டால், “Places” என்பதில், நீங்கள் எத்தனை தசம ஸ்தானங்களில் அமைக்க விரும்புகிறீர்களோ, அதனை செட் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
மேலே கூறிய செட்டிங்ஸை எப்போது வேண்டுமானாலும் உங்கள் தேவைப்படி மாற்றி அமைத்துக் கொண்டு செயல்படலாம். இதன் பின்னர் நீங்கள் ரூபாய் அல்லது வேறு வேல்யு மதிப்பினை இரண்டு தசம ஸ்தானங்களில் அமைக்க, எடுத்துக் காட்டாக 234.34 என டைப் செய்திட வேண்டியதில்லை. 23434 என டைப் செய்தால் போதும். எக்ஸெல் தானாக இரண்டு தசம ஸ்தானங்களில் வேல்யுவினை அமைத்துக் கொள்ளும்.

கேள்வி: ஜிமெயில் தளத்தில் என்னதான் அதிக இடம் கொடுத்தாலும், நான் தேவைப்படாத மெயில்களை ட்ரேஷ் பெட்டியிலிருந்தும் நீக்க விரும்புகிறேன். இதற்கான வழி என்ன?
-என். கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
பதில்: உங்களைப் போல பலர் இந்த நீக்கத்தினை விரும்புகின்றனர். எத்தனை கிகா பைட்ஸ் இடத்தினை கூகுள் தன் ஜிமெயில் பயனாளர்களுக்குக் கொடுத்தாலும், தாங்கள் அழித்த மெயில்கள் ஏன் என் பெட்டியில் தங்க வேண்டும் என அவற்றை நீக்க முயற்சிப்பவர்களும் உண்டு. நீங்கள் உங்கள் மெயில் தளத்தின் இன்பாக்ஸிலிருந்து நீக்கும் அனைத்து மெயில்களும், அதன் ட்ரேஷ் பெட்டியில் (“trash can”) தங்கும். 30 நாட்களில் அவை தானாகவே நீக்கப்படும் என்றாலும், ஏன் அதுவரை தங்க வேண்டும். “Trash” என்னும் லிங்க்கில் கிளிக் செய்தால் ட்ரேஷ் பெட்டியைக் காணலாம். இங்கு நீங்கள் படிக்காமலேயே நீக்கிய மெயில்கள் போல்டாகவும், படித்து நீக்கிய மெயில்கள் சற்று மங்கியதாகவும் காட்டப்படும். இவற்றில் எதனை நீக்க விரும்புகிறீர்களோ, அதில் கர்சரைக் கொண்டு சென்று அருகில் உள்ள பாக்ஸில் டிக் செய்திடவும். தொடர்ந்து, மேலாகக் காட்டப்படும் “Delete Forever” என்ற பாக்ஸில் கிளிக் செய்தால், மெயில்கள் நீக்கப்படும். ட்ரேஷ் பெட்டியில் உள்ள அனைத்தையும் நீக்க வேண்டும் எனில், “All” என்ற லிங்க்கில் கிளிக் செய்து முதலில் அனைத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இது “Select:” என்ற லிங்க்கின் அருகே இருக்கும். அதன்பின் அருகே உள்ள “Delete Forever” என்ற பட்டனில் கிளிக் செய்தால், அனைத்து மெயில்களும் நீக்கப்படும். இந்த பட்டன்கள் அனைத்தும் அருகருகே மேல் கீழாக அமைக்கப் பட்டிருப்பதனைக் காணலாம்.

கேள்வி: பிரவுசர்களில் இணைய தளத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கையில், தள முகவரிகள் அல்லது வேறு சிறிய குறிப்புகளை அமைத்துக் கொள்ள, பிரவுசரிலிருந்து விலகி நோட்பேட் அல்லது ஸ்டிக்கி நோட் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதற்குப் பதிலாக, பிரவுசரிலேயே ஏதேனும் உதவி உள்ளதா?
-சா. கார்த்திக் ராஜ், திண்டிவனம்.
பதில்: நல்ல தகவலைப் பெறும் சிறந்த கேள்வி. உங்கள் கேள்விக்குப் பின்னரே இதற்கான உதவி அல்லது சாதனம் உள்ளதா என்று தேடிப் பார்த்தேன். கூகுள் குரோம் பிரவுசரில் நீங்கள் கேட்கும் வசதியைத்தரும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. இதற்கு குரோம் பேட் (Chromepad) என்று பெயர். இதனை https://chrome.google.com/extensions/detail/kodgendbhboaendecabighpnngpodeij என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். குரோம் பிரவுசர் வழியாக இந்த தளம் செல்லவும். இந்த தளத்தில் உள்ள “Install” பட்டனில் கிளிக் செய்தால், மீண்டும் ஒருமுறை “Confirm Installation” என்ற டயலாக் பாக்ஸ் தரப்பட்டு அனுமதி கேட்கப்படும். மீண்டும் “Install” பட்டனில் கிளிக் செய்திட குரோம்பேட் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படும். உடன் அட்ரஸ் பாரை அடுத்து ஒரு ஐகான் இதற்கென அமையும். இதில் கிளிக் செய்தால், ஒரு சிறிய கட்டம் காட்டப்படும். இதில் எந்த டெக்ஸ்ட்டையும் அமைத்து எடிட் செய்து கொள்ளலாம். இதனால், சிறிய குறிப்புகளை அமைக்க, இணைய பிரவுசரி லிருந்து விலகி, நோட்பேட் அல்லது வேர்ட் ப்ராசசரை இயக்க வேண்டியதில்லை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Govindaswamy - Coimbatore,இந்தியா
29-ஏப்-201210:57:49 IST Report Abuse
S.Govindaswamy வேர்ட் 2003 ல் டைப் செய்யும் போது பாதி பக்கத்தில் கர்ஸர் தானாக அடுத்த வரிக்குப் போய்விடுகிறது. Right Tab வலது ஓரத்தில் தான் உள்ளது. கோவிந்தசாமி கோயம்புத்தூர்
Rate this:
Share this comment
Cancel
Dan - USA,இந்தியா
26-ஏப்-201202:37:00 IST Report Abuse
Dan Amazing work Dinamalar. please do this continuously
Rate this:
Share this comment
Cancel
venkatesan - Tenkasi,இந்தியா
24-ஏப்-201212:25:16 IST Report Abuse
venkatesan I wish all success to Dinamalar for the very best services given in my language!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X