கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2012
00:00

கேள்வி: சில இணைய தளங்கள் வித்தியாசமாக https: என்ற முன் ஒட்டுடன் கிடைக்கின்றன. இதற்கு வழக்கமான http: என்பதற்கும் என்ன வேறுபாடு?
-காயத்ரி ராஜகோபால், மதுரை
பதில்: இது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய வேறுபாடு. குறிப்பாக உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை மற்றவர் களிடமிருந்து காப்பாற்றும் செயல்பாட்டில் இந்த வேறுபாடு கட்டாயம் தெரிந்திருக்கப் பட வேண்டும். ஏனென்றால், இணையத் தில் இப்போது எதுவுமே பத்திரமாக இருக்காது என்ற நிலை உருவாகி வருகிறது. http: என்பதன் விரிவாக்கம் Hyper Text Transfer Protocol ஆகும். இன்டர்நெட் தன் தகவல்களைப் பிறர் அறியப்படுத்த, அது கையாளும் ஒருவகை மொழியே அது. இந்த மொழியை நாம் மாற்றலாம்; காப்பி செய்திடலாம். எனவே இதன் மூலம் நாம் நம் ரகசிய தகவல்களைக் கொண்டு செல்ல முடியாது. எனவே தான் அடுத்த வகை இணைய மொழி https உருவானது. இதில் secure என்பதன் அடையாளமே s என்ற எழுத்து இணைந்ததாகும். இந்த முன்னொட்டுடன் உள்ள முகவரிக்கான தளங்கள், உங்களையும், இணைய தள நிர்வாகியையும் தவிர்த்து, அதில் உள்ள தகவல்களை வேறு யாரும் கையாள முடியாது. வங்கிகளின் இணைய தளங்கள், கூகுள் மெயில் மற்றும் பல தளங்களில் இதனைக் காணலாம். உங்கள் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் தகவல்களைத் தரும் முன், நீங்கள் தரும் அந்தத் தளம் s என்ற எழுத்து இணைந்த முன்னொட்டு உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளவும்.

கேள்வி: விஸ்டா ஹோம் பிரிமியம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன். இதுவரை 18 மாதங்களாக மைக்ரோசாப்ட் சைட் பர் தளத்திலிருந்து டவுண்லோட் செய்த கடிகாரம் ஒன்றைப் பயன்படுத்தி வந்தேன். திடீரென இது செயல்படவில்லை. மற்ற கடிகாரங்களைப் பயன்படுத்திப் பார்த்தாலும், அவையும் இயங்கவில்லை. முதலில் நன்றாக இன்ஸ்டால் ஆகிறது. சில நேரம் இயங்கிய பின்னர் நின்று விடுகிறது. என்ன பிரச்னையாக இருக்கும்?
- ஏ. அருண் பிரகாஷ், சென்னை.
பதில்: அருண், இது உங்கள் பிரச்னை மட்டுமல்ல; பலரின் பிரச்னையாகும். விஸ்டாவில் ஓரப் பகுதி சாதனங்கள் (sidebar gadgets) அனைத்திற்கும் இந்த பிரச்னை உள்ளது.குறிப்பாக கடிகாரங்களுக்கு. இதற்குக் காரணம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8. இந்த பிரவுசர் தன்னை அப்டேட் செய்து கொள்கையில், விஸ்டாவில் இயங்கும் இந்த வகை சாதனங்களுக்குத் தொல்லை தருகிறது. எனவே, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 இருந்தால், அதனை அன் இன்ஸ்டால் செய்துவிடவும். அதற்குப் பதிலாக, இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 9, அல்லது மற்ற பிரவுசர் களை இன்ஸ்டால் செய்திடவும். பயர் பாக்ஸ, குரோம் அல்லது ஆப்பராவினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து இயக்கவும்.ஏற்கனவே உள்ளதை நீக்க, Control Panel செல்லவும். அங்கே Programs பகுதியில், Uninstall a Program என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுக்குக் காட்சி தரும் கண்ட்ரோல் பேனலில் இதற்கான வசதி இல்லை என்றால், மேலாக இடது பக்கம் உள்ள Control Panel Home என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம் இடது பக்கம் உள்ள பிரிவில் (Tasks pane) Programs and Features விண்டோ கிடைத்தவுடன், View installed updates என்று உள்ள லிங்க் மீது கிளிக் செய்திடவும். இப்போது அப்டேட் செய்யப்பட்டவற்றின் பட்டியல் கிடைக்கும். இதில் Windows Internet Explorer 8 என்பதனைத் தேடிக் காணவும். பட்டியல் ஆங்கில அகர வரிசைப்படி இருப்பதால், கண்டறிவது எளிதாக இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்திடவும். இதன் பின்னர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8னை அன் இன்ஸ்டால் செய்திடலாம். இனி மீண்டும் இதனை ரீ இன்ஸ்டால் செய்து பார்த்து, கடிகாரம் இயங்குகிறதா எனக் கவனிக்கவும். இயங்கவில்லை எனில், வேறு பிரவுசர் ஒன்றினைப் பயன்படுத்தவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 னையும் பயன்படுத்திப் பார்க்கலாம்.

கேள்வி: நான் ஒரு சில் புரோகிராம்களை அடிக்கடி இயக்குகிறேன். இவற்றிற்கு கீ போர்ட் ஷார்ட் கட் உருவாக்கி, அவை மூலம் இயக்க முடியுமா?
- சி.கே. பிரேமா ராணி, திருப்பூர்
பதில்: நல்ல கேள்வி. இந்தத் தேவையை அநேகமாக கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருமே உணர்ந்திருப்போம். உங்கள் கடிதத்தில் அடிக்கடி WinRAR பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதற்கு ஷார்ட்கட் கீ அமைப்போம். முதலில் Start பட்டன் லெப்ட் கிளிக் செய்து, All Programs தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் பட்டியலில் WinRAR தேர்ந்தெடுத்து அதில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Properties என்பதில் லெப்ட் கிளிக் செய்திட வும். இப்போதும் ஒரு பாக்ஸ் பாப் அப் ஆகும். இதில் பாதி கீழே உருட்டினால் Shortcut key என்று ஒரு வரி சிறிய பாக்ஸுடன் கிடைக்கும். இதில் பாக்ஸை அடுத்து None என்று காட்டப்படும். இதன் வலது பக்கம் ஒரு சிறிய கர்சர் துடித்துக் கொண்டிருக்கும். இப்போது புரோகிராமிற்கு ஒரு ஷார்ட் கட் எழுத்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இங்கு W தேர்ந்தெடுக்கலாம். இதில் துடித்துக் கொண்டிருக்கும் கர்சருக்கு வலது புறத்தில் W என டைப் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டர் தானாக, Ctrl + Alt என்பதை இந்த எழுத்திற்கு முன்னால் சேர்க்கும். இப்போது துடித்துக் கொண்டிருந்த கர்சர் கோடு, இதற்கு வலது புறம் இருக்கும். அடுத்து Apply என்பதிலும், OK என்பதிலும் கிளிக் செய்து வெளியேறவும். இனி அடுத்து, எப்போதெல்லாம் WinRAR பயன்படுத்த எண்ணுகிறீர்களோ, அப்போது Ctrl + Alt + W என்ற கீகளை அழுத்தினால் போதும். புரோகிராம் இயக்கத்திற்கு வரும். இவ்வாறு நீங்கள் விரும்பும் புரோகிராம்களுக்கான ஷார்ட்கட் கீ தொகுப்பினை அமைக்கலாம்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், செல்லில் கொடுத்துள்ள டேட்டாவினை என்னால் செல்லுக்குள் வைத்து எடிட் செய்திட முடியவில்லை. பார்முலா பார் சென்றுதான் எடிட் செய்திட முடிகிறது. என் கம்ப்யூட்டரில் மட்டும் ஏன் இது ஏற்படுகிறது?
-எஸ். ரேணுகா சிவராஜ், கோவை.
பதில்: எக்ஸெல் புரோகிராமினைப் பொறுத்தவரை, செல் ஒன்றில் உள்ள டேட்டாவினை, நீங்கள் குறிப்பிடும் வகையில், பார்முலா பாரிலும், செல் உள்ளாகவும் எடிட் செய்திடலாம். இதனை incell editing என்று சொல்வார்கள். உங்கள் கம்ப்யூட்டரில் செல் உள்ளாக எடிட் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனை நீங்கள் விரும்பும் வகையில் மாற்ற, Tools மெனுவில் இருந்து Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Options டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் Edit டேப் தேர்ந்தெடுங்கள். இதில் செட்டிங்ஸ் என்ற தலைப்பின் கீழ் முதலாவதாக Edit Directly In Cell என இருக்கும். இதன் முன் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேற வும். உங்கள் கம்ப்யூட்டரில் இந்த டிக் அடையாளம், நீக்கப்பட்டு இருந்ததால், செல் உள்ளாக உங்களால் இதுவரை எடிட் செய்திட முடியவில்லை. இனி, எடிட் செய்திடலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் கோடு போடுவதில், Ctrl+U மற்றும் Ctrl + Shift + W பயன்படுத்தப் படுகின்றன. இந்த இரண்டில் என்ன வேறுபாடு உள்ளது?
- கே.ஆர். ஸ்ரீனிவாசன், மதுரை.
பதில்: ஸ்ரீனிவாசன், நீங்கள் பயன் படுத்திப் பார்த்திருக்கலாமே. இதற்கு ஒரு சொல்தான் பதில் – spaces. Ctrl+U, தேர்ந் தெடுக்கப்படும் அனைத்து சொற்களின் அடியிலும், நீளமாக சொற்களுக்கிடையே உள்ள இடைவெளியையும் சேர்த்து கோடிடும். Ctrl + Shift + W சொற்களின் கீழாக மட்டும் அடிக்கோடிடும். சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் கோடிடாது.

கேள்வி: சில இணைய தளங்களைப் பார்வையிடுகையில், அதன் டெக்ஸ்ட் வண்ணமும், அதன் பின்னணியும், டார்க் கலரில் அமைந்து படிப்பதை மிகவும் எரிச்சலூட்டுகின்றன. இதனை எப்படி மாற்றிப் படிப்பது?
-என். சுனில், தேவாரம்.
பதில்: சில வேளைகளில், இணைய தளங்களை இவ்வாறு தவறாக வடி வமைத்து விடுகிறார்கள். அல்லது குறிப்பிட்ட பேக் கிரவுண்ட் பின்னணி, தளத்தில் அமைவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். அடுத்த முறை இது போல சிரமம் ஏற்படுகையில், குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து, அல்லது மொத்தமாக CTRLA அழுத்தவும். இப்போது டெக்ஸ்ட் முழுவதும், அல்லது தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் மட்டும், நீல நிறப் பின்னணியில், வெள்ளை எழுத்துக்களில் காட்டப்படும்.

கேள்வி: ட்ரைவர் என கம்ப்யூட்டர் இயக்கத்தில் சரியாக எதனைக் குறிப்பிடுகிறோம்? அன்பு கூர்ந்து விளக்கவும்.
-ஜா. ஹனிபா, காரைக்கால்.
பதில்: நல்ல கேள்வி ஹனிபா. ட்ரைவர் புரோகிராம் என்பது, உங்கள் கம்ப்யூட்டருக்கு அதன் ஹார்ட்வேர் சாதனங்களை எப்படிப் பயன்படுத்துவது என அளிக்கப்படும் கட்டளைகளே ட்ரைவர் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஒவ்வொரு ஹார்ட்வேர் சாதனமும் அதற்கான ட்ரைவரைக் கொண்டிருக்கும். கீ போர்ட், மவுஸ் போன்ற சாதனங்களுக்கான ட்ரைவர் புரோகிராம்கள், கம்ப்யூட்டரிலேயே பதியப்பட்டு கிடைக்கும். வீடியோ கார்ட், நெட்வொர்க் கார்ட் போன்றவற்றிற்கு நாம் ட்ரைவர்களை இன்ஸ்டால் செய்திட வேண்டும். இவற்றை மாற்றினாலும், புதியதற்கேற்ற ட்ரைவரை நிறுவ வேண்டும். சரியான ட்ரைவர் இல்லை என்றால், குறிப்பிட்ட சாதனம் இயங்காது. உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு ஹார்ட்வேர் சாதனம் சரியாக இயங்க வில்லை எனில், அதன் புதுப்பிக்கப்பட்ட ட்ரைவர் புரோகிராமினைச் சம்பந்தப்பட்ட சாதனத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன் படுத்தினாலே, பிரச்னைகள் தீர்ந்துவிடும்.
மேம்படுத்தப்பட்ட ட்ரைவர் புரோகிராம்களைப் பெற http://www.driverguide.com/ மற்றும் http://www.windrivers.com/ என்ற தளங்களை அணுகவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vicky - chennai,இந்தியா
30-ஏப்-201211:43:43 IST Report Abuse
vicky it is very use for computer knowledge thanks for the given opportunity
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X