பவர் பாய்ண்ட் அனிமேஷன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மே
2012
00:00

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் தயாரிக் கையில் நாம் பல ஸ்லைடுகளை உருவாக்குகிறோம்.இவற்றில் ஆப்ஜெக்ட்களை அமைத்து நாம் விரும்பிய வண்ணத்தில், வடிவில் கொடுக்கிறோம். ஆனால் இந்த ஸ்லைடுகளுக்கு ஊடாக இவற்றை நகர்த்தலாம் என்பதனைப் பலர் அறிந்து பயன்படுத்துவதில்லை. இந்த அனிமேஷன் வசதி வர்த்தக ரீதியான பிரசன்டேஷன் பேக்கேஜ்களில் மிகவும் உதவியாக இருக்கும். இதனை எப்படி அமைப்பது என்று இங்கு காணலாம்.
ஆப்ஜெக்ட் ஒன்றை, ஏதேனும் ஒரு ஆட்டோஷேப், கிராபிக்ஸ் அல்லது டெக்ஸ்ட் பாக்ஸ், ஸ்லைட் ÷ஷாவின் இடையே திரையின் ஊடே நகர்ந்து செல்லுவதை நோக்கமாக வைத்துக் கொள்வோம். எனவே அதற்கென ஒரு பாதை ஒன்றை நாம் அனுமானித்து வைத்துக் கொள்வோம். இதனை எப்படி அமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
1.முதலில் நீங்கள் இலக்கு வைத்திடும் ஆப்ஜெக்ட் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் Slide Show/Custom Animation என்பதனைத் தேர்ந்தெடுங்கள்.
2. பின் (Task pane) டாஸ்க் பேனில் Add Effect என்பதனைத் தேர்ந்தெடுங்கள். பிளை அவுட் மெனுவில் Motion Paths என்பதன் மீது கிளிக் செய்திடவும்.
3. நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஆப்ஜெக்ட் ஒரு நேர் கோட்டில் வலது பக்கமோ இடது பக்கமோ நகரச் செய்வதாக இருந்தால் தரப்பட்டுள்ள பிளை அவுட்டில் அதற் கேற்ற முறையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் அனிமேஷன் வேடிக்கையான முறையில் அமைய வேண்டும் என எண்ணினால் Draw Custom Path என்பதைத் தேர்ந்தெடுத்து பிளை அவுட்டில் இருந்து Scribble என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Scribble என்பதைத் தேர்ந்தெடுக்கையில் மவுஸ் பாய்ண்ட்டர் ஒரு பென்சிலாக மாறும். ஒரு கோடு அல்லது வளை கோட்டினை வரையவும். அல்லது ஸ்கிரீனில் ஏதாவது கிறுக்கவும். இதனை முடித்துவிட்டவுடன் நீங்கள் எப்படி கோடு அல்லது கிறுக்கல் போட்டீர்களோ அதன்படி ஆப்ஜெக்ட் நகரும். இதன் பாதை நீங்கள் டிசைன் செய்திடும்போது தான் உங்கள் கண்களுக்குத் தெரியும். ஸ்லைட் ÷ஷா பிரசன்டேஷனின் போது அது தெரியாது. ஆப்ஜெக்ட் நகர்வதுதான் தெரியும்.
இந்த பாதையை எந்த நேரத்திலும் நீங்கள் எடிட் செய்திடலாம். அதே போல அனிமேஷனை எதிர்புறத்திலும் பின்னோக்கி நகரச் செய்திடலாம். இதற்கு ஏற்கனவே அமைத்த பாதையில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Reverse Path Direction என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த பாதையை புதிய வடிவில் அமைத்திட மீண்டும் ரைட் கிளிக் செய்து Edit Pointsகளைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த பாதையில் உள்ள சில புள்ளிகளை நீக்க வேண்டும் என்றாலும் மெனு வரவழைத்து Delete Point கிளிக் செய்வதன் மூலம் நீக்கலாம். அதே போல புதிய பாய்ண்ட் அமைக்க வேண்டும் என்றால் Add Point என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். எல்லாம் முடிந்த பின் அனிமேஷன் எப்படி இருக்கும் என்பதனை பிரிவியூ பார்த்து முடிவு செய்து கொள்ளலாம். நீங்கள் விரும்பிய பாதை யை அமைத்து இயக்கினால் சொல்ல விரும்பும் கருத்து சரியாகப் பார்ப்பவர்களுக்கு விளங்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம்குமார் - மதுரை,இந்தியா
12-மே-201207:30:17 IST Report Abuse
ராம்குமார் it is very useful to me thanks.... but how to add a audio in slide and make it play while slideshow running in the microsoft power point? please would you give me a answer.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X