மெகா பிக்ஸெல், பைட் மற்றும் டி.பி.ஐ.
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மே
2012
00:00

டிஜிட்டல் கேமரா மூலம் நல்லதாக ஒரு போட்டோ எடுக்க, நாம் மெகா பிக்ஸெல், மெகா பைட் மற்றும் டி.பி.ஐ. (DPIDots per Inch) குறித்து தெரிந்திருக்க வேண்டியதில்லை. கார் ஒன்றில் பயணம் செய்திட, ஏன் காரை ஓட்டிச் சென்றிட, அதன் இஞ்சின் எப்படி இயங்குகிறது என்று தெரிந்து கொண்டா இயங்குகிறோம். இருப்பினும், அது குறித்து அறிந்து கொள்வது நமக்குப் பல வழிகளில் உதவியாக இருக்குமே. இங்கே ஒரு போட்டோ பைல் குறித்த இத்தகைய விபரங்கள் அனைத்தையும் காணலாம்.
1. மெகாபிக்ஸெல்: ஒவ்வொரு டிஜிட்டல் போட்டோவும்லட்சக்கணக்கான பிக்ஸெல்களால் அமைக்கப்படுகிறது. pixel என்பது picture element என்பதன் சுருக்கம் ஆகும். இந்த பிக்ஸெல்களை மிக எளிதாக அளந்து சொல்லிவிடலாம் என்பதால், டிஜிட்டல் கேமராக்களை வாங்குபவர்கள், இதன் அளவைக் கொண்டே கேமராவின் சிறப்பினை மதிப்பிடுகிறார்கள். நீங்கள் கேமரா குறித்த எந்த ஒரு விளம்பரத்தினைப் பார்த்தாலும், அதில் கேமராவின் மெகாபிக்ஸெல் என ஒரு அளவினைக் கூறி இருப்பார்கள். 20 மெகா பிக்ஸெல் எனில், அது தான் அமைத்திடும் போட்டோவில் 2 கோடி பிக்ஸெல்களைப் பயன்படுத்தும்.
எடுத்துக்காட்டாக, நிகான் டி 7000 கேமரா ஒரு 16 மெகா பிக்ஸெல் கேமரா ஆகும். இது 4928 X 3624 பிக்ஸெல்களில் போட்டோவினை அமைக்கிறது. ஆப்பிள் ஐ-போன் 4எஸ் போட்டோக்களை 3264 X 2448 என்ற அளவில் எடுக்கிறது. இந்த எண்களைப் பெருக்கினால் 7990272 கிடைக்கிறது. அதாவது 8 மெகா பிக்ஸெல். இது எப்படி தரத்தினை உறுதிப்படுத்துகிறது? போட்டோ ஒன்றை ஸூம் செய்து கொண்டே போய், அதன் ஒவ்வொரு பிக்ஸெல்லையும் தனித்தனியே பார்க்கும் வகையில் பெரிதாக்கவும். போட்டோ முழுவதையும் பார்க்க வேண்டுமெனில், உங்கள் மானிட்டர் திரை எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். எனவே பிக்ஸெல்கள் அதிமாக இருந்தால், போட்டோ ஒன்றில் அதிக தகவல்கள் உள்ளடங்குகின்றன. எனவே இத்தகைய போட்டோவில் வேண்டாத பிக்ஸெல்களை எடுத்து விடலாம். இதனால் தான், ஒரே மெகா பிக்ஸெல் அளவுள்ள இரண்டு கேமராக்களில் பெரிய சென்சார் உள்ள கேமரா எடுக்கும் படங்கள் கூடுதல் தெளிவுடன் அமைகின்றன.
2. மெகா பைட்: மெகா பிக்ஸெல் அலகு உங்கள் போட்டோவில் எத்தனை பிக்ஸெல்கள் உள்ளன என்று கூறினால், இன்னொரு விஷயத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த கேமரா போட்டோவினைத் தர எடுத்துக் கொள்ளும் அதன் பைல் அளவு மிக முக்கியமான ஒன்றாகும். இதனை மெகா பைட் என்ற அளவில் கூறுகிறோம். இந்த அளவு, போட்டோ ஒன்று எவ்வளவு இடத்தினை பதிந்திடும் ஊடகத்தில் எடுத்துக் கொள் கிறது என்பதனைச் சுட்டிக் காட்டுகிறது. இன்டர்நெட் வழியே செல்கையிலும், இணைய தளங்களில், அல்லது இமெயில் சர்வர்களிலிருந்து இறக்கிட எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. அதனை மெயில் ஒன்றில் இணைத்து அனுப்ப முடியுமா என்பதனையும் முடிவு செய்திட முடிகிறது.
மெகா பிக்ஸெல் திறனைக் கொண்டு நேரடியாக போட்டோ ஒன்றின் அளவை கணக்கிட முடியாது என்றாலும், ஓரளவிற்கு இதனைக் கூறிடலாம். மேலும் இது பைல் வடிவத்தினைப் (.jpeg, .raw, .png, .bmw etc.,) பொறுத்தும் அமையும். அல்லது அந்த பைல் எந்த வகையில் குறுக்கப்பட்டது (compressed) என்பதன் அடிப்படையிலும் அமையும். இதனை quality setting என அழைக்கின்றனர். போட்டோ பைல் ஒன்றின் அளவு இன்னொரு பைல் வடிவில் மிகக் குறைவாக உள்ளது என்றால், அதன் வடிவமைப்பே அதற்குக் காரணமாக இருக்கும்.
3. டி.பி.ஐ. மற்றும் பி.பி.ஐ. (DPI and PPI): இறுதியாக இன்னொரு கட்டமைப்பினை யும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது டி.பி.ஐ. மற்றும் பி.பி.ஐ ஆகும். இதனை ஆங்கிலத்தில் விரித்தால், dots per inch (dpi) மற்றும் pixels per inch (ppi) எனக் கிடைக்கும். dpi என்பது பொதுவாக பிரிண்ட் செய்யப்பட்ட போட்டோவின் தன்மையைக் குறிக்கும். ppi என்பது கம்ப்யூட்டர் திரையில் காட்டப்படும் இமேஜின் அளவு தன்மையைக் குறிக்கும். Dpi என்பது டிஸ்பிளே மீடியத்தினைத் தான் குறிக்கிறது. போட்டோ எடுக்கப் பட்ட தன்மையை அல்ல என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் 300dpi திறன் உள்ள இங்க் ஜெட் பிரிண்டரில் உங்கள் ஐ-போனில் எடுத்த போட்டோவினை (3264 by 2448 pixels), பிரிண்ட் செய்வதாக வைத்துக் கொள்வோம். அச்சில் கிடைக்கும் போட்டோவின் தன்மையை, இந்த பிக்ஸெல் எண்ணிக்கையை 300 ஆல் வகுத்துத் தெரிந்து கொள்ளலாம். இங்கு நல்ல பிரிண்ட் வேண்டும் எனில், அதனை 8 அல்லது 10 அங்குல அளவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
எனவே கேமரா ஒன்றினை அதன் பிக்ஸெல் அளவின் அடிப்படையில் மட்டும் வாங்க முடிவு செய்திடக் கூடாது. ரெசல்யூசன் மற்றும் மெகாபிக்ஸெல் என்பவை எல்லாம், அந்த போட்டோவின் நீள, அகல, ஆழத்தைக் குறிப்பனவே. போட்டோவின் தன்மைப் பண்பை அல்ல. எனவே டிஜிட்டல் கேமரா வாங்க விரும்புபவர்கள், இந்த கேமரா குறித்த மற்றவர்களின், தொழில் நுட்ப வல்லுநர்களின் கருத்தை இணையத்தில் படித்துப் பார்த்து முடிவு செய்திட வேண்டும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X