30 லட்சம் "ஆகாஷ் டேப்ளட் பிசிக்கள்'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மே
2012
00:00

பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டேட்டாவிண்ட் நிறுவனம், உலகிலேயே விலை குறைந்த டேப்ளட் பிசிக்களை "ஆகாஷ்' என்ற பெயரில் தயாரித்து வழங்க அறிவிப்பு வெளியிட்டது. இதனை இரண்டு வகைகளில் மாணவர்களுக்கு வழங்க, மத்திய அரசின் மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் துறைகளில் இருந்தும் ஆர்டரைப் பெற்றிருந்தது. சென்ற வாரம் இவற்றை வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வெளியிட்டது. விலை ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த டேப்ளட் பிசி தயாரிப்பில், டேட்டாவிண்ட் நிறுவனம், ராஜஸ்தான் இந்திய தொழில் நுட்ப கழகம் (ஐஐகூ) மற்றும் குவாட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தில் பிரச்னை ஏற்பட்டது. இவற்றைச் சமாளித்த டேட்டா விண்ட் நிறுவனம் தற்போது வர்த்தக ரீதியாக டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே 30 லட்சம் டேப்ளட் பிசிக்களுக்கு மேல் ஆர்டர்களைப் பெற்றுள்ளதாகவும், அவற்றை வழங்கும் முயற்சியில் தன் நிறுவனம் ஈடுபடும் என்றும் இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, சுனீட் சிங் தூளி தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்டிருக்கும் இரு மாடல் டேப்ளட் பிசிக்களிலும் ஜி.பி.ஆர்.எஸ். மோடம் இணைக்கப்பட்டு வை-பி இணைப்பு வசதி தரப்பட்டுள்ளது. இவற்றின் திரை 7 அங்குல அகலம் உடையது. இதில் ஆண்ட்ராய்ட் 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் ப்ராசசர் 800 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்டது. ராம் நினைவகம் 256 எம்.பி. ஆர்டர்களுக்கு எந்த முன்பணமும் பெறப்படவில்லை என்பதால், இந்த ஆர்டர் அளித்தவர்கள் அனைவரும் டேப்ளட் பிசியைப் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் கூறி உள்ளார்.
அரசுக்கு ரூ. 2,276 என்ற விலையில் டேட்டாவிண்ட் இவற்றை அளிக்கிறது. அரசு மானிய விலையாக ரூ.1,100 / ரூ.1,200க்கு மாணவர்களுக்கு வழங்குகிறது.
முதலில் இந்த திட்டத்தினை வடிவமைத்த ராஜஸ்தான் ஐ.ஐ.டி., இந்த டேப்ளட் பிசி சில தர வரையறைகளை நிறைவு செய்திடவில்லை எனக் கூறி, திட்டத்தினை மும்பை ஐ.ஐ.டிக்கு மாற்றியது.
தற்போது வெளியாகி இருக்கும் டேப்ளட் பிசி அரசிடம் சோதனைக்கு அனுப்பப் பட்டு, அரசு இதன் தரம் குறித்து நிறைவான அறிக்கை தந்த பிறகே, அரசு ஆர்டர் செய்துள்ள லட்சக்கணக்கான டேப்ளட் பிசிக்கள் வழங்கப்படும் என தூளி தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு விற்பனை செய்திடும் ஆகாஷ் டேப்ளட் பிசிக்களில் இன்டர்நெட் டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளை வழங்க ஏர்செல் நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கென மாதம் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ச.சம்பத் kumar - vellore,இந்தியா
19-மே-201202:12:39 IST Report Abuse
ச.சம்பத் kumar you have told datawind had not taken any advance from those who want to buy Akash7+. I have paid Rs.2999/- the cost of the t in the month of January and waiting till today for about six months.I am not getting a proper reply from them.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X