கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2012
00:00

கேள்வி: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, சிஸ்டம் சிடி இல்லாமல், பிளாஷ் ட்ரைவிலேயே வைத்து பூட் செய்திட முடியுமா? அதற்கான வழி என்ன?
- என்.கே. சிதம்பரம், திருப்பூர்
பதில்:
விண்டோஸ்7 மற்றும் விண்டோஸ் கன்ஸ்யூமர் பிரிவியூ, வர இருக்கும் விண்டோஸ் 8 ஆகியவற்றை இது போல பிளாஷ் ட்ரைவில் பதிய வைத்து, சிஸ்டம் சிடிக்குப் பதிலாகக் கம்ப்யூட்டரில் இணைத்து பூட் செய்திட முடியும். இதற்கு Windows 7 USB/DVD Download Tool என்ற சாப்ட்வேர் முதலில் தேவை. இதனை http://www.microsoftstore.com/store/msstore/html/pbPage.Help_Win7_usbdvd_dwnTool?ClickID=dozwzktmwhy00bkwrysyyhn0tbmwrwxnmhhx என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் இணைய தளப் பக்கம் சென்று டவுண் லோட் செய்திடவும். இந்த தளம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தந்து இதனை டவுண்லோட் செய்திடலாம். நீங்கள் விரும்பும் வகையில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் ஆக உங்கள் பிளாஷ் ட்ரைவில் பதியப்படும். இதனைக் கொண்டு கம்ப்யூட்டரில் சிஸ்டத் தினை பூட் செய்திடலாம். இணையத்தில் இதற்கென வழி காட்டும் டிப்ஸ்கள் நிறைந்த கட்டுரைகள் உள்ளன. தேடிக் கண்டறிந்து செயல்படவும்.

கேள்வி: ஸ்குரோல் லாக் கீ என்று ஒரு கீ, கீ போர்டில் தரப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால், ஒரு எல்.இ.டி. விளக்கு ஒன்று இயக்கப்பட்டு, கீ அழுத்தப்பட்டிருப்பதனை காட்டுகிறது? இப்படிப்பட்ட கீயின் செயல்பாடு நிச்சயம் அதிகம் பயன்படுவதாக இருக்க வேண்டும். அதன் பயன் என்ன?
- ஆ. இன்பத்தமிழன், சென்னை.
பதில்: கீ போர்டில் பேஜ் அப், இன்ஸெர்ட் போன்ற கீகள் அடங்கியுள்ள பகுதியில் மேலாக இந்த கீ தரப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போல தனியே எல்.இ.டி. விளக்கு இதன் இயக்கத்தைக் காட்டும். சில கீ போர்டுகளில் அந்த கீயிலேயே சிறிய எல்.இ.டி. விளக்கு இருக்கும். நம் லாக் மற்றும் கேப்ஸ் லாக் போன்றவையும் இதே போல அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த கீ இவ்வளவு ஆரவாரமாக அமைக்கப்பட்டுள்ளதே; அப்படியானால் இதன் பயன்பாடு நிச்சயம் அதிகமாக இருக்குமே என்ற உங்கள் ஆர்வம் சரிதான். ஆனால், அதிகப் பயன் உண்டா என்றால் இல்லை என்பதே என் கணிப்பு.
இது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, திரையில் காட்டப்படும் சங்கதிகள், வேகமாக, மேலாக அல்லது கீழாகக் காட்டப்படுவதனை நிறுத்த பயன் படுகிறது. நிறுத்துவதற்கு வேறு கீகளையும் பயன்படுத்தலாம் என்பது வேறு செய்தி. ஆனால், இதற்கு மேல் வேறு பயன் இதனால் இல்லை. எம்.எஸ். எக்ஸெல் மற்றும் லோட்டஸ் நோட்ஸ் போன்ற புரோகிராம் கள், இந்த கீயினைப் பயன்படுத்தி சில செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. வேறு எதற்காகவும் இது பயன்படுவதாகத் தெரியவில்லை. ஆப்பிள் நிறுவனம் தயாரிக் கும் கீ போர்டுகளில் இந்த கீ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி: 4ஜி சேவை நம் நாட்டிலும் வர இருப்பதாகக் கூறுகிறார்கள். இது முன்பு வந்த 3ஜி மற்றும் 2ஜி யிலிருந்து எந்த வகையில் மாறுபட்டது?
- என்.ஆர். சிவசுப்பிரமணியன், திண்டுக்கல்.
பதில்: 4ஜி சேவை வந்துவிட்டது. இன்னும் பரவலாக வாடிக்கையாளர்களை இந்தியாவில் அடையவில்லை. மொபைல் போன் தொழில் நுட்பத்தை கால மற்றும் செயல் அடிப்படையில் வேறுபடுத்திக் காட்ட இந்த ஜி (G) என்னும் எழுத்து சேர்க்கப்படுகிறது. இது Generation என்ற ஆங்கிலச் சொல்லைக் குறிக்கும். வரிசையாகச் சுருக்கமாக இவற்றின் இடையே உள்ள வேறுபாடான செயல்பாட்டினைத் தருகிறேன். 1980களில் முதல் ஜெனரேஷன் மொபைல் போன் வெளியானது. இப்போதைய மொபைல் போல இல்லாமல், சற்றுப் பெரிதாக, எடை கூடியதாக இருக்கும். இப்போதைய போன்களைப் போல் டிஜிட்டல் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தாமல், ரேடியோ , ஏ.எம். மற்றும் எப்.எம்., தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி இவை செயல்பட்டன. 1991ல் 2ஜி மொபைல் போன்கள் பின்லாந்தில் அறிமுகமாயின. இவை டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தின. ஆனால், இவற்றின் மூலம் கிடைத்த இன்டர்நெட் இணைப்பு மிக மிக மெதுவாக இருந்தது. மேலும், இன்டர்நெட் பயன்படுத்துகையில், தொலைபேசியாக இதனைப் பயன்படுத்த முடியாது. 3ஜி, 2001 ஆம் ஆண்டில், ஜப்பானில் அறிமுகமாகியது. இவற்றின் மூலம் இன்டர்நெட் இணைப்பு சற்று கூடுதல் வேகத்தில் கிடைத்தது. இன்டர்நெட் பயன்படுத்தும் போதே, போன் அழைப்புகளையும் ஏற்படுத்தி மற்றும் பெறும் வசதிகள் 3ஜி போனில் உள்ளன. ஆனால், இன்னும் வேகமாக இன்டர்நெட் இணைப்பு வேண்டும் என்ற ஆவலைப் பூர்த்தி செய்திடவே, 4ஜி போன்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு கிடைக் கின்றன. விநாடியில் 6 மெகா பிட் தகவல்களை இவை பரிமாற முடியும். சில பிராட்பேண்ட் இணைப்பினைக் காட்டிலும் இது கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி: ஆன் ஸ்கிரீன் கீ போர்டுக்கான ஷார்ட்கட் கீ ஒன்றை அமைத்து அதனை என் டெஸ்க் டாப் திரையில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கான வழி என்ன?
- க. மீனா ராணி, கோவை.
பதில்: நன்றி மீனா. அருமையான கேள்வி. பலர் அறிந்திராத, அறிந்தும் பயன்படுத்தாத ஆன் ஸ்கிரீன் கீ போர்டு குறித்து கேள்வி அனுப்பியமைக்கு நன்றி. இதோ உங்களுக்கான வழி காட்டல்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நமக்கு ஆன் ஸ்கிரீன் கீ போர்ட் கிடைக்கிறது. திரையில் ஒரு கீ போர்டு காட்டப்படும். இதில் மவுஸால் கிளிக் செய்து டெக்ஸ்ட்டை அமைக்கலாம். கம்ப்யூட்டரை இயக்கலாம். ஆனால், நம்மில் பலர் இதனைப் பயன்படுத்து வதில்லை. ஒவ்வொரு முறையும் இதனைப் பெற கீதண விண்டோவில் ‘osk’ என டைப் செய்திட வேண்டும். அல்லது ஆல் புரோகிராம்ஸ் (All Programs) சென்று, அக்சஸரீஸ், அக்சசிபிலிட்டி (Accessories, Accesibility) எனச் சென்று, ஆன் ஸ்கிரீன் போர்டில் (Onscreen Keyboard) கிளிக் செய்திட வேண்டும். இதற்குப் பதிலாக ஷார்ட்கட் கீ அமைத்துக் கொள்வது மிகச் சரியான முடிவும்.
டெஸ்க்டாப்பில் காலியான இடத்தில் கிளிக் செய்து, New >> Shortcut எனத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கிடைக்கும் Create Shortcut டயலாக் பாக்ஸில் C:\Windows \System32\osk.exe என டைப் செய்திடவும். அடுத்து Next கிளிக் செய்தவுடன் இந்த ஷார்ட் கட் பெயர் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். உங்கள் விருப்பப்படி, பொருள் தெரியும்படி கொடுத்தவுடன், வெளியேறவும். டெஸ்க்டாப்பில் இருக்கும் ஷார்ட் கட் கீயை டாஸ்க்பாரில் காப்பி செய்து, அல்லது நகர்த்தி வைத்துக் கொள்ளலாம்.

கேள்வி: 50 ஜிபி பிளாஷ் ட்ரைவ் ஒன்று புதியதாய் வாங்கினேன். விஸ்டா சிஸ்டம், எச்.பி. லேப்டாப் வைத்துள்ளேன். பிளாஷ் டிரைவினை எப்போதும் யு.எஸ்.பி. போர்ட்டில் வைத்தே, கம்ப்யூட்டரை இயக்குகிறேன். ஒருமுறைப் பயன்படுத்தி, பின்னர் மீண்டும் கம்ப்யூட்டரை இயக்குகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க மறுக்கிறது. இடது மேல் மூலையில் ஒரு ப்ளாஷிங் டேஷ் மட்டும் கிடைக்கிறது. ஆனால் என் நண்பர் லேப்டாப் கம்ப்யூட்டரில் இதே போல பிளாஷ் ட்ரைவினைப் பயன்படுத்தினால், எத்தனை முறை பூட் செய்தாலும் ஒழுங்காக வேலை செய்கிறது. இது எதனால்? என்னுடைய லேப்டாப்பில் வைரஸ் ஏதேனும் நுழைந்திருக்குமா?
-எஸ். பிரேமாத் கண்ணா, சென்னை.
பதில்: இதற்கான விடை "அதுதானா இது!' என்று சொல்லக் கூடிய அளவிற்கு மிகவும் எளிமையான தீர்வாகும். உங்கள் கம்ப்யூட்டர், யு.எஸ்.பி.சாதனங்கள் போல வெளி சாதனங்கள் வழியாகவும் பூட் செய்யக் கூடிய வகையில் செட் அப் செய்யப்பட்டுள்ளது. அதனால், எப்போதும் இணைத்து வைக்கப்பட்டுள்ள ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தைத் தேடி, அது கிடைக்காமல் முடங்கிப் போய்விடுகிறது. இதனைச் சரி செய்வது எப்படி என்று பார்ப்போமா!
உங்கள் கம்ப்யூட்டரை பிளாஷ் ட்ரைவ் இல்லாமல் இயக்கத் தொடங்கி, டெல் அல்லது வேறு கீயினை இயக்கி, அதன் பயாஸ் (BIOS) செட் அப்பிற்குள் நுழையவும். இதில் Boot options என்ற பிரிவில் USB devices எதன் மூலமாகவும் பூட் செய்திடக் கூடாது என செட் செய்திடவும். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்க்குப் பின்னர், ப்ளாஷ் ட்ரைவினைத் தேடும்படி வரிசையில் ப்ளாஷ் ட்ரைவினை அமைக்கவும். புதிய செட் அப்பினை சேவ் செய்து வெளியேறவும். பின்னர், ப்ளாஷ் ட்ரைவினை இணைத்தவாறு பூட் செய்தால், உங்கள் லேப்டாப், அதன் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பெற்று இயங்கத் தொடங்கும். எச்.பி. லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயாஸ் செட் அப் எப்படி மாற்றலாம் என்பதற்கான கூடுதல் தகவல்களை http://h10025.www1.hp.com/ewfrf/wc/document?lc=en&dlc=en&cc=us&product=18703&docname=c00364979 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெறவும்.

கேள்வி: எஸ்.எஸ்.டி. என அழைக்கப்படும் சாலிட் ஸ்டேட் டிஸ்க்குகளை, எக்ஸ்டர்னல் டிஸ்க்குகளாகக் கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறதா? பயன்படுத்தலாமா?
- டி. சூசையப்பர் தனராஜ், புதுச்சேரி
பதில்: பயன்படுத்தலாம். ஒரு சில நிறுவனங்களே இவற்றைத் தற்சமயம் தயாரிக்கின்றன. அவையும் பெரிய நகரங்களில் கிடைப்பது குறித்துச் சரியான தகவல் இல்லை. இருப்பினும், இது குறித்து கொஞ்சம் பார்க்கலாம். இவை மிக வேகமாக இயங்கும் மெமரி சிப்களைப் பயன் படுத்துகின்றன; இதில் நகரும் பகுதிகள் எதுவும் இல்லை. இதனால், பயன் படுத்துதலுக்கு வேண்டிய மின்சக்தி குறைகிறது; டேட்டா பரிமாற்ற வேகம் அதிகரிக்கிறது. இதில் என்ன பிரச்னை என்றால், தற்போது பெரும்பாலான கம்ப்யூட்டர் களில் யு.எஸ்.பி. 2 வகை இணைப்புகளே உள்ளன. இவை ஒரு எஸ்.எஸ்.டி வேகத்தை மட்டுப்படுத்தும். யு.எஸ்.பி. 3 உள்ள கம்ப்யூட்டர் இதன் முழு வேகத்தினைப் பயன்படுத்தும்.
எனவே, உங்கள் கம்ப்யூட்டரில் யு.எஸ்.பி.3 வகை இணைப்பு அல்லது eSATA போர்ட் இருந்தால், இதற்கு இணையாக இயங்கக் கூடிய எக்ஸ்டர்னல் எஸ்.எஸ்.டி. வாங்கிப் பயன்படுத்தவும். இவை அதிக நாள் நீடித்து உழைக்கும் என்பது இன்னொரு சிறப்பு.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலா - Coimbatore,இந்தியா
20-மே-201206:53:19 IST Report Abuse
பாலா Hi Deva, Please reset the CMOS battery in tem motherboard ( it is very simple like our wriste battry in mother board). Still you are facing the same error please change the battery. I think the max Rs 20/-.
Rate this:
Share this comment
Cancel
முத்துக்குமார் - mysore,இந்தியா
20-மே-201206:39:29 IST Report Abuse
முத்துக்குமார்  அன்பு தினமலருக்கு, கம்ப்யுட்டர் மலரினை தொகுத்து, புத்தகங்களாக வெளியிட்டால், நன்றாக இருக்கும். செய்வீர்களா?
Rate this:
Share this comment
Cancel
ர.தேவேந்திரன் - chidambaram,இந்தியா
18-மே-201217:40:11 IST Report Abuse
ர.தேவேந்திரன் எனது கம்ப்யூட்டரில் டைம் செடிங் ஆகவில்லை. கணினி on செய்யும் பொழுது டைம் 12 இருந்து ஆரம்பிகிறது. கணினி on செய்யும்பொது cmos நாட் செடிங் என்று செய்தி வருகின்றது. இதனை எப்படி சரி செய்வது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X