வேர்டில் ஆபீஸ் அசிஸ்டன்ட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2010
00:00

கம்ப்யூட்டருக்குப் புதியவரா!


எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் புரோகிராம்களில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் பலரும் இதனைக் கவனமாகப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு தாளில் பேப்பர் கிளிப் ஒன்று கண்ணாடி மாட்டிக் கொண்டு நீங்கள் தரும் கட்டளைக்காகக் காத்திருக்கும். இதுதான் ஆபீஸ் அசிஸ்டண்ட். ஆபீஸ் புரோகிராம் செயல்பாடு குறித்து ஏதேனும் உதவி வேண்டும் எனில் இதனைக் கிளிக் செய்து வரும் விண்டோவின் கட்டத்தில் உங்களுடைய சந்தேகத்தை அல்லது கேள்வியை டைப் செய்து தேடச் சொல்லலாம். உதவிக் குறிப்புகளும் வரிசையாகக் கிடைக்கும்.
சில வேளைகளில் இந்த ஆபீஸ் அசிஸ்டண்ட் மீது ஒரு பல்ப் ஒன்று எரிந்தபடி இருக்கும். இந்த எரியும் பல்ப் மீது கிளிக் செய்தால் உடனே உங்களுக்கு ஒரு டிப்ஸ் எனப்படும் உதவிக் குறிப்பு கிடைக்கும். இதைப் படித்தவுடன், அந்த மாதிரி ஆபீஸ் அசிஸ்டண்ட் என் ஆபீஸ் தொகுப்பில் பார்த்ததில்லையே; சிலரோ அசிஸ்டண்ட் வருகிறான்; ஆனால் லைட் எரிந்ததில்லையே என முணுமுணுக்கலாம். அப்படியானால் அவ்வாறு உங்கள் ஆபீஸ் தொகுப்பினை செட் செய்திருக்கிறீர்கள் என்று பொருள். இந்த விளக்கை எரிய விட கீழ்க்காணும் வழிகளின் படி செயல்படவும். முதலில் ஆபீஸ் அசிஸ்டண்ட்டை எப்போதும் திரையில் வைத்துக் கொள்ள Help  மெனு பகுதியில் கிளிக் செய்து, வரும் மெனுவில் Show the Office Assistant என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது திரையில் கண்ணாடி மாட்டிய பேப்பர் கிளிப் வடிவத்தில் ஆபீஸ் அசிஸ்டண்ட் கிடைப்பான். இனி அந்த அசிஸ்டண்ட் மீது கிளிக் செய்தால் ஆபீஸ் அசிஸ்டண்ட் மெனு கிடைக்கும். இதில் Options  என்ற பகுதியைப் பார்த்தால் அதில் Show Tips about  என்ற பிரிவில் ஐந்து வகையான உதவிக் குறிப்புகள் உங்களுக்குத் தருவதற்காகப் பட்டியலிடப் பட்டிருப்பதனைப் பார்க்கலாம். எந்த வகையெல்லாம் வேண்டுமோ அந்த பகுதியில் உள்ள சிறிய கட்டங்களில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இப்படி ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் ஆபீஸ் அசிஸ்டண்ட்டும் நீங்களும் உதவி வழங்குவது குறித்து ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டு விட்டீர்கள் என்று சொல்லலாம். இனி இவனை நீங்கள் நாடும் போதெல்லாம் உங்களுக்கான உதவிக் குறிப்புகள் தோன்றும். அதனைப் பின்பற்றலாம்; அல்லது ஒதுக்கி விடலாம்.
இந்த பேப்பர் கிளிப் அசிஸ்டண்ட் பார்க்க சரியில்லையே; இதனை வேறு வடிவத்தில் கொடுத்திருக்கக் கூடாதா? என்று எண்ணுகிறீர்களா? அதற்கும் சாய்ஸ் இருக்கிறது. Options  என்ற பகுதிக்கு அருகே Gallery என்ற பகுதி இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் அதில் எட்டு வடிவங்கள் தரப்பட்டுள்ள பகுதி கிடைக்கும். அதிலேயே ஒவ்வொன்றின் பெயர்களும் அவற்றைப் பெறும் விருப்பக் கட்டங்களும் இருக்கும். Next என்பதைக் கிளிக் செய்து கொண்டு போனால் இவை ஒவ்வொன்றாகக் கிடைக்கும். இவற்றில் உயிர் உள்ள ஜீவராசியாக ஐந்து உள்ளன. பேப்பர் கிளிப் வடிவில் கண்ணாடி மாட்டிக் கொண்டிருப்பவன் பெயர் Clippit.  புள்ளி ஒன்றுக்கு கண்ணாடி மாட்டி தாவும் ஜீவனுக்கு பெயர் The Dot.  சிறிய ஆந்தையாக உள்ள அசிஸ்டண்ட் பெயர் F1.  எம்.எஸ். ஆபீஸ் இலச்சினையும் ஒரு வடிவாக உள்ளது இது Office Logo என அழைக்கப்படுகிறது. சர்க்கஸ் கோமாளி வடிவில் மந்திரவாதியாக ஒரு அசிஸ்டண்ட் வருவான்; அவன் பெயர் Merlin. சுற்றும் உலக உருண்டையாக வரும் அசிஸ்டண்ட் Mother Nature என அழைக்கப்படுகிறது. சிறிய பூனைக் குட்டியாக வந்து காட்சி அளிக்கும் அசிஸ்டண்ட் ஃடிணடுண் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூனை இருக்கும் போது நாய்க்குட்டி இருக்க வேண்டாமா? செல்ல நாயாக வந்து வாலை ஆட்டி உதவி அளிக்கும் அசிஸ்டண்ட்டின் செல்லப் பெயர் Rocky  ஆகும். இவற்றில் உங்களுக்குப் பிடித்ததனைப் பெற்று ஆபீஸ் புரோகிராம்களில் இயங்க விடலாம். தேவையானபடி மாற்றிக் கொள்ளலாம். சில அசிஸ்டண்ட்களைத் தேர்ந்தெடுத்து அமைத்திடக் கட்டளை கொடுக்கையில் அவை கிடைக்காமல் போகலாம். அப்போது The selected Assistant Character is not available. This feature is not currently installed. Would you like to install it now? என செய்தி கிடைக்கும். கவலையேபடாமல் Yes என்று கொடுக்கவும். சில நொடிகளில் நீங்கள் தேர்ந்தெடுத்த அசிஸ்டண்ட் இன்ஸ்டால் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். ஆபீஸ் புரோகிராம்களில் தோற்றம் தரும். ஆபீஸில் பணிபுரிபவர்கள் பணி நேரத்தில் உறங்காமலா இருப்பார்கள்? இந்த அசிஸ்டண்ட்களும் அப்படித்தான். சில வேளைகளில் எந்த சலனமும் இன்றி தூங்குவார்கள். அப்போது அவர்கள் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Animate என்பதனைக் கிளிக் செய்திடவும். அப்போது இந்த ஜீவன்கள் செய்திடும் சேட்டையில் நமக்கு சிரிப்பும் வரும்.
ஆபீஸ் அசிஸ்டண்ட்டுடன் சிறிது கவனமாகவே இருக்க வேண்டும். சில வேளைகளில் அதற்குக் கோபமும் வரும். அசிஸ்டண்ட்டைப் பெற Help  மெனு சென்று Show the Office Assistant என்பதனைக் கிளிக் செய்தால் நமக்கு ஆபீஸ் அசிஸ்டண்ட் கிடைப்பான். அப்போது Help  மெனுவில் Hide the Office Assistant என்று அப்பிரிவு மாறி இருக்கும். நீங்கள் அசிஸ்டண்ட்டைத் துரத்த எண்ணி அடிக்கடி இதனை மறைத்தும் தோன்றும் படியும் செய்தால் உடனே ஆபீஸ் அசிஸ்டண்ட் கோபித்துக் கொண்டு நீங்கள் பலமுறை மறைத்துவிட்டீர்கள். என்னை ஒரேயடியாக மறைத்து விடுங்களேன். செய்து விடவா? அல்லது இப்போதைக்கு மட்டும் மறைந்து கொள்ளவா? என்று கேட்கும். நீங்கள் உங்களுக்குப் பிடித்தபடி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X