கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2012
00:00

கேள்வி: இலவசமாக இணையத்தில் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், நம் கம்ப்யூட்டரை முழுமையாகப் பாதுகாக்குமா? பொதுவாக இவற்றில் சிறந்த முறையில் பாதுகாப்பு தருவது எது?
- தி. விஜயகுமார், திருப்பூர்
பதில்: இலவசம் என்பதாலேயே அது சரியாகச் செயல்படாது என்ற கணிப்பு சரியில்லை. சிறப்பாகச் செயல்படும் பல இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து இயக்குவதுடன் நின்று விடாமல், அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், புதிது புதிதாய்த் தோன்றும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம் களிடமிருந்து நம் கம்ப்யூட்டரை நாம் காப்பாற்ற முடியும்.
பரவலாக நிலவும் கருத்துப்படி, அவாஸ்ட் ப்ரீ ஆண்ட்டி வைரஸ் 7, பண்டா கிளவ்ட் ஆண்ட்டி வைரஸ் 1.5 மற்றும் ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் பிரீ எடிஷன் ஆகியவை நமக்கு முழு பாதுகாப்பு தருவனவாய் உள்ளதாகக் கருதப்படு கின்றன. பல சோதனை மையங்கள் நடத்திய ஆய்வில், ஏ.வி.ஜி. இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு 98.7% மால்வேர் புரோகிராம்களைத் தடுத்து நிறுத்தி முதல் இடத்தைப் பெற்றுள்ளது. டிஸ்க்கினை ஸ்கேன் செய்திடும் வேகத்திலும் முதல் இடத்தில் உள்ளது. 4.5 ஜிபி டேட்டாவினை, 1 நிமிடம் 35 விநாடிகளில் ஸ்கேன் செய்துள்ளது. அடுத்த இடத்தில் அவாஸ்ட் பிரீ ஆண்ட்டி வைரஸ் உள்ளது.

கேள்வி: வீட்டில் இயக்கப்படும் டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டரில் நான், என் மகள் மற்றும் என் மகன் என மூன்று அக்கவுண்ட்கள் வைத்து, விண்டோஸ் எக்ஸ்பி இயக்குகிறோம். இதில் யாருடைய அக்கவுண்ட் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் என எப்படி பார்ப்பது?
- சி.கலைச்செல்வன், மதுரை.
பதில்: நீங்கள் எக்ஸ்பி பயன்படுத்து வதாக இருப்பதால், ஸ்டார்ட் கிளிக் செய்து, அதில் ரன் கட்டத்தில், nusrmgr.cpl என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் தோன்றும் கட்டத்தில் நீங்கள் குறிப்பிடும் அனைத்து பயனாளர்களின் அக்கவுண்ட்கள் காட்டப் படும். இதில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் யாருடையது எனக் காட்டப்படும்.

கேள்வி: தானாகவே ஷட் டவுண் மற்றும் ரீ ஸ்டார்ட் செய்திடும் வகையில் கம்ப்யூட்டரை செட் செய்திட முடியுமா? சில வேளைகளில் பைல்கள் டவுண்லோட் செய்திடுகையில் வெகு நேரம், அது முடியும் வரை, கம்ப்யூட்டர் அருகே காத்திருக்க வேண்டியுள்ளது. இதனை எப்படி மாற்றி அமைக்கலாம்?
- சங்கீதா யுவராஜ், கோவை.
பதில்: நல்ல கேள்வி. இந்த தேவை பலருக்கு உண்டு. விண்டோஸ் சிஸ்டத்தில் இது போல வசதி தரப்படவில்லை. எந்த வேலையும் மேற்கொள்ளாமல் இருந்தால், கம்ப்யூட்டர் ஹைபர்னேட், ஸ்லீப் மோட் இவற்றிற்குச் செல்லும் வகையில் பவர் மேனேஜ்மெண்ட் செட் அப் தரப் பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் ஆட்டோ ஷட் டவுண் மற்றும் ரீ ஸ்டார்ட் செய்திட தர்ட் பார்ட்டி புரோகிராம்களை நாட வேண்டும். அப்படிப்பட்ட புரோகிராம் ஒன்றைத் தேடியதில் Auto Shutdown என்ற புரோகிராம் கிடைத்தது. இதனை http://download.cnet.com/AutoShutdown/30002381_410640426.html?tag=mncol;2 என்ற முகவரியில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து, எளிமையாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். நீங்கள் கேட்ட வசதிகள் எல்லாவற்றையும் இதன் மூலம் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதன் வளைந்து கொடுக்கும் தன்மை ஆச்சரியப்பட வைக்கிறது. சில டேப்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் கிடைக்கும் கீழ்விரி செயல் பட்டியல் மூலம் நமக்குத் தேவையான முறையில் ஆட்டோ ஷட் டவுண் மற்றும் ஆட்டோ ரீ ஸ்டார்ட் ஆகிய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளலாம். சில நிமிடங்களில், வாரத்தின் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட தேதியில் என எந்த ஒரு திட்டமிடும் நேரத்திலும், நாளிலும், கம்ப்யூட்டர் இயக்கத்தினை நிறுத்தலாம்; மீண்டும் இயக்க வைக்கலாம். குறிப்பிட்ட பைலை நீங்கள் டவுண்லோட் செய்த பின்னர், கம்ப்யூட்டர் தானாக ஷட் டவுண்ட் செய்திட, உத்தேச நேரம் செட் செய்து, ஷட் டவுண் செய்திட அமைக்கலாம். இத்துடன், ஷட் டவுண், ரீ ஸ்டார்ட், ஸ்டேண்ட் பை, ஹைபர்னேட், லாக் ஆப் ஆகியவற்றிற்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகளை அமைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. இந்த புரோகிராம் தேவை இல்லை எனில், இதனை அன் இன்ஸ்டால் செய்வதும் மிக மிக எளிதாகத் தரப்பட்டுள்ளது. இதன் அளவு 573 கேபி தான்.

கேள்வி: எக்ஸெல் செல்லில் தரப்பட்ட சொற்களில் ஒரு குறிப்பிட்ட சொல்லை எடிட் செய்திட எப்படி தேர்ந்தெடுப்பது? பல வேளைகளில் இது சிரமம் தருகிறது?
- கே. ராமானுஜம், மதுரை.
பதில்: எக்ஸெல் இதற்கு இரண்டு கிளிக் தீர்வு ஒன்றைத் தந்துள்ளது. நீங்கள் எடிட் செய்திட விரும்பும் செல்லைத் தேர்ந்தெடுக் கவும். மவுஸ் பாய்ண்ட்டரை , பார்முலா பாரில் நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் சொல்லில் அமைத்திடவும். மவுஸை டபுள் கிளிக் செய்திடவும். சொல் தேர்ந்தெடுக்கப் படும். பின்னர் எடிட் செய்து கொள்ளலாம். கூடுதலாக சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட விரும்பினால், இரண்டாவது கிளிக் ஏற்படுத்திய பின்னர், பட்டனை அழுத்திய வாறே, அப்படியே இழுக்கவும். எக்ஸெல் ஒவ்வொரு சொல்லாக இணைக்கும். சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவற்றை எளிதாக எடிட் செய்திடலாம்.

கேள்வி: ஸ்மார்ட் போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறதா? கம்ப்யூட்டர் இடத்தை இது பிடிக்குமா? எந்த வேலைக்கு ஸ்மார்ட் போன்கள் அதிகம் பயன்படுகின்றன?
-கே. நளினா, திண்டுக்கல்.
பதில்: தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று பல வல்லுநர்கள் தங்கள் ஆய்வில் மேற்கொள்ளும் கேள்விகளைக் கேட்டிருக் கிறீர்கள். கம்ப்யூட்டர் இடத்தை ஸ்மார்ட் போன் பிடிக்குமா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். நிச்சயம் பிடிக்கும் என சிலரும், ஒரு போதும் பெர்சனல் கம்ப்யூட்டர் இடத்தை வேறு சாதனங்கள் பிடிக்க முடியாது எனப் பலரும் கூறி வருகின்றனர். உங்களுடைய அடுத்த கேள்விக்கு ஆர்வமூட்டும் சில ஆய்வுத் தகவல்களைத் தருகிறேன்.
இந்தியாவில் ஆண்களும் பெண்களும் ஒரு மாதத்தில் சராசரியாக 81 மணி நேரம் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்து கின்றனர். ஆண்கள் இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கும், பெண்கள் டெக்ஸ்ட் அமைத்து எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கும் அதிகம் பயன்படுத்துகின்றனர். பெண்கள் அழைப்பு ஏற்படுத்த மற்றும் எஸ்.எம்.எஸ். அனுப்ப 25% நேரம், பிரவுஸ் செய்திட 19%, ஆன்லைன் அப்ளிகேஷன்களில் 29%, ஆப் லைன் செயல்பாடுகளில் 27% பயன்படுத்து கின்றனர். ஆனால், ஆண்கள் தங்களின் 50% நேரத்தை பிரவுஸ் செய்வதில் செலவிடுகின்றனர். ஒரு மாதத்தில் சராசரியாக, ஆண்கள் 20 இணைய தளங்களைப் பார்வையிடுகின்றனர். பெண்கள் பார்வையிடும் தளங்களின் எண்ணிக்கை 14. கூகுள் மேப் பயன்படுத்தி வழி தேடும் வசதியை ஆண்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

கேள்வி: லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று வாங்க திட்டமிட்டுள்ளேன். இப்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வாங்கினால், விண்டோஸ் 8 இலவசமாக அப்டேட் செய்திட முடியுமா? அல்லது விண்டோஸ் 8 வரும் வரை காத்திருக்கலாமா?
- என். தீபச் செல்வன், ராஜபாளையம்.
பதில்: இந்த சந்தேகம் கம்ப்யூட்டர் வாங்கத் திட்டமிடும் அனைவருக்கும் உள்ளது. மைக்ரோசாப்ட் இது குறித்து திட்டவட்டமாக எதுவும் கூறவில்லை. ஜூன் 2க்குப் பின்னர், விண்டோஸ் 7 சிஸ்டத்துடன், கம்ப்யூட்டர் வாங்குபவர் களுக்கு, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், சலுகை விலையில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக, மைக்ரோசாப்ட் நிறு வன விற்பனை வழக்கத்தைக் கண்டவர்கள் கூறுகின்றனர். பொதுவாக, இது போல புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வருவதற்கு முன் விற்பனை குறைவதனைத் தடுக்க, இலவச மாகவே புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் என்று தான் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் அறிவிக்கும். ஆனால், இம்முறை இது போன்ற அறிவிப்புகள் வராததால், மைக்ரோசாப்ட் அது போன்ற உறுதிமொழியைத் தர வில்லை என்றே தெரிகிறது. விண்டோஸ் 8 தான் வேண்டும் எனில், அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருந்தால், செலுத்திப் பெறுவதே நல்லது. எதற்கும் ஜூன் 2 ஒட்டிய காலத்தில் www.windowsupgradeoffer.com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று பார்க்கவும்.

கேள்வி: வழக்கமாக இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், அதனைக் காட்டும் ஐகான், டாஸ்க் பாரின் வலது மூலையில் காட்டப்படும். இப்போது என் கம்ப்யூட்டரில் அது காட்டப்படவில்லை. இதனை எப்படி மீண்டும் கொண்டு வருவது?
- சி.என். ஜீவானந்தம், திருப்பூர்.
பதில்: ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட் ரோல் பேனல் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் விண்டோ முழுமையாகக் கிடைத்தவுடன், அதில் Network Connections என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள இன்டர்நெட் இணைப்பின் ஐகான் கிடைக்கும். அதில் ரைட் கிளிக் செய்து Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்தால், சிறிய விண்டோ ஒன்று காட்டப்படும். இதன் கீழ் பகுதியில் என்ற வரி கிடைக்கும். இதன் எதிரில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன், அதன் செயல்பாட்டினைக் காட்ட, அதற்கான ஐகான் டாஸ்க் பாரில் நோட்டிபிகேஷன் ஏரியா என்று சொல்லப்படுகின்ற வலது ஓரத்தில் கிடைக்கும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bharathi - theni,இந்தியா
27-மே-201208:09:39 IST Report Abuse
bharathi வீடியோ டவுன்லோட் செய்வதற்கு கூகுள் இன்டர்நெட் டொன்லோடிங் மேனேஜர் ப்ரீ டவுன்லோட் type செய்ங்க.. இன்டர்நெட் டோவ்ன்லோடிங் மேனேஜர் ச்நெட்.டவுன்லோட் ன்னு வரும் , அதை ur சிஸ்டம் ல இன்ஸ்டால் செய்ங்க .then எந்த வீடியோ செய்தாலும் default option ஆகும் டவுன்லோட் செய்வதற்கு ....
Rate this:
Share this comment
Cancel
bharathi - theni,இந்தியா
26-மே-201216:26:23 IST Report Abuse
bharathi •Download the Registering Hotmail with the Default Programs tool. •Launch the RegisterHotmail program. •Click Register Windows Live Hotmail with Default Programs. •Click OK. •Now click Set Windows Live Hotmail as the default (current user). •Click OK again. •Close Register Hotmail with Default Programs. Note that Windows Live Hotmail will in Internet Explorer regardless of your default browser.
Rate this:
Share this comment
Cancel
bharathi - theni,இந்தியா
26-மே-201216:21:13 IST Report Abuse
bharathi சாங் ல வாய்ஸ் தனியா மியூசிக் தனியா பிரிக்க சாப்ட்வேர் voice and music separator software free download cnet ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X