எக்ஸெல் டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
எக்ஸெல் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 மே
2012
00:00

ஒர்க்ஷீட்டில் நாளைய தேதி
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், மறுநாள் தேதியை அமைக்க விரும்பினால், அதனை மிகச் சிறிய கணக்கினை இணைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் தயாரிக் கும் ஒர்க்ஷீட்டில், சில காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட செல்லில், மறு நாள் தேதியை அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இன்றைய தேதிக்கான பார்முலாவில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தினால் போதும். அந்த பார்முலா =TODAY() + 1 என அமையும். இந்த பார்முலாவினைக் கவனித்தால் ஒன்று தெரியவரும். பார்முலா, முதலில் அன்றைய தேதியைக் கணக் கிடுகிறது. பின் அதனுடன் 1 ஐக் கூட்டுகிறது. இதனால் மறுநாளைய தேதி கிடைக் கிறது. இவ்வாறே இதில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தி, நாம் நமக்குத் தேவையான நாளுக்கான தேதியைக் கொண்டு வரலாம். எடுத்துக் காட்டாக, 14 நாட்களுக்குப் பின்னர் உள்ள நாளுக்கான தேதியைக் கொண்டுவர, +14 எனத் தரலாம்.

எக்ஸெல் வரலாறு
எக்ஸெல் தொகுப்பு உங்களுக்குப் பிடித்த மனங்கவர்ந்த தொகுப்பா! அது எப்படி உருவாகி, இன்றைய நிலைக்கு வந்தது என்று அறிய வேண்டுமா! கீழ்க்காணும் தளங்களில் இது குறித்து அறிந்து கொள்ளலாம்.
http://www.jwalk.com/ss/history/
http://dssresources.com/history/sshistory.html
இவை சொல்வதைக் காட்டிலும், கூடுதலான விபரங்கள் வேண்டுமாயின், கீழ்க்காணும் விக்கிபீடியா தளத்தினை அணுகவும்.
http://en.wikipedia.org/wiki/Microsoft_excel
http://www.microsoft.com/presspass/PR_Contacts.mspx

எக்ஸெல் தரும் இரட்டை கோடுகள்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டுகளில் பெயர் அல்லது வேறு வகையான டேட்டாவின் கீழாக இரண்டு கோடுகளில் அடிக்கோடி டலாம். இதற்கு முதலில் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்த வேண்டும். அடிக்கோடு இரு கோடுகளாக போடப்படும். இன்னும் பலவிதமான அடிக்கோடுகள் எக்ஸெல் தொகுப்பில் உள்ளன. அவற்றைப் பெற Format=>Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்துங்கள். அங்கு பலவிதமான அடி கோடுகளை Underline என்னும் பகுதியில் காணலாம்.

செல்களைக் கட்டமிட
எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள் ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணுகிறீர்களா? அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + - அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா? முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + _ ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா!

எக்ஸெல் பங்சனுக்கு ஓர் எளிய வழி
நீங்கள் எப்படியோ, ஆனால் எனக்கு இந்த சந்தேகம் எக்ஸெல் பயன்படுத்தும் போதெல்லாம் வரும். ஒரு எக்ஸெல் பங்ச னில் என்ன ஆர்க்யுமெண்ட் எல்லாம் கொடுக்க வேண்டி இருக்கும். அதாவது =PMT() என்றால் அடுத்து அடைப்புக்குறிகளுக்குள் என்ன தர வேண்டும், அவற்றை எப்படித் தர வேண்டும் என்பது பல வேளைகளில் நினைவுக்கு வராது. ஆனால் இந்த பங்சன் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் நாம் இருப்போம். எனவே உள்ளே தரப்பட வேண்டிய ஆர்க்யுமென்ட் கள் எப்படி இருக்க வேண்டும் என Function Wizard சென்று பார்க்க முயற்சிப்பேன். அப்படி இருந்தும் கூட பல வேளைகளில் இந்த ஆர்க்யுமென்ட்களை தவறாகவே நான் தந்திருக்கிறேன்.
ஆனால் இந்த சுற்று வழியெல்லாம் இல்லாமல் ஒரு சுருக்கு வழி உள்ளது. வழக்கம்போல பங்சன் பெயரெல்லாம் கொடுத்துவிட்டு Ctrl + Shift + A அழுத்தவும். எடுத்துக்காட்டாக கடன்செலுத்தும் தொகையைக் காண =PMT() என ஒரு பங்சன் அமைக்கும்போது இவ்வாறு கீ தொகுப்பு கொடுத்தால் உடனே =PMT(rate,nper,pv,fv, type) எனக் கிடைக்கும். இந்த உதவியைக் கொண்டு நீங்கள் டேட்டா அல்லது எந்த செல்லில் இந்த டேட்டா இருக்கிறதோ அதனை அமைக்கலாம். அதன் பின் விஷயம் எளிதாகிவிடும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X