விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 மே
2012
00:00

சென்ற மே 7 இதழ்த் தொகுப்பில், விண்டோஸ் 8 இயக்கத்திற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் தரப்பட்டன. இன்னும் இது தொடரும் என எழுதியதால், பல வாசகர்கள், முழுமையாக அவற்றைக் கொடுத்து முடித்தால் எடுத்து வைத்துப் பயன்படுத்த உதவியாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். விண்டோஸ் 8 நுகர்வோருக்கான தொகுப்பினைப் பலரும் பயன்படுத்தி வருவது தெரிகிறது. பெரிய நகரங்களில் மட்டுமின்றி, சிறிய ஊர்களிலிருந்தும் பல வாசகர்கள் இது குறித்துத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே, விண்டோஸ் 8 தொகுப்பிற்கான அடுத்த ஷார்ட் கட் கீ தொகுப்பு இதோ:
Alt: மறைக்கப்பட்ட மெனு பார் காட்டப்படும்.
Alt + D: அட்ரஸ் பார் தேர்ந்தெடுக்கப்படும்.
Alt + P: விண்டோஸ் எக்ஸ்புளோரரில் Preview Pane காட்டப்படும்.
Alt + Tab: திறக்கப்பட்டுள்ள விண்டோக்களில் முன்னோக்கிச் செல்லும்.
Alt + Shift + Tab: திறக்கப்பட்டுள்ள விண்டோக்களில் பின்னோக்கிச் செல்லும்.
Alt + F4: அப்போதைய விண்டோ மூடப்படும். டெஸ்க்டாப்பில் ஷட் டவுண் விண்டோ மூடப்படும்.
Alt + Spacebar: அப்போதைய விண்டோவி லிருந்து ஷார்ட் கட் மெனுவினைப் பெறும்.
Alt + Esc: திறந்திருக்கும் புரோகிராம்களைச் சுற்றி வரும். அவை திறக்கப்பட்ட வரிசையில் இது மேற்கொள்ளப்படும்.
Alt + Enter: தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டத்திற் கான ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
Alt + PrtScn: அப்போதைய விண்டோ காட்சி யின் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லப்படும்.
Alt + Up: விண்டோஸ் எக்ஸ்புளோரர் போல்ட ரில் ஒரு போல்டர் முன் செல்லப்படும். (எக்ஸ்பி (XP) சிஸ்டத்தில் Up Arrow போலச் செயல்படும்)
Alt + Left Arrow: முந்தைய போல்டரைக் காட்டும்.
Alt + Right Arrow: அடுத்த போல்டரைக் காட்டும்.
Shift + Insert CD/DVD: ஆட்டோ பிளே அல்லது ஆட்டோ ரன் கிளிக் செய்யப்படாமலேயே சிடி/டிவிடி இயக்கப்படும்.
Shift + Delete: தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலுமாக நீக்கப்படும். ரீசைக்கிள் பின்னுக்குக் கொண்டு செல்லப்படாது.
Shift + F6: விண்டோ அல்லது டயலாக் பாக்ஸில், பின் நோக்கிச் செல்லும்.
Shift + F10: தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளுக் கான கான்டெக்ஸ்ட் மெனுவினைத் தரும்.
Shift + Tab: விண்டோ அல்லது டயலாக் பாக்ஸில், பின் நோக்கிச் செல்லும். (Shift + F6 போல)
Shift + Click: தொடர்ச்சியாக உள்ளவற்றைத் தேர்ந்தெடுக்கும்.
Shift + Click: டாஸ்க் பார் பட்டனில் கிளிக் செய்கையில், புரோகிராமின் புதிய இயக்கக் காட்சியைக் கொடுக்கும்.
Shift + Rightclick: தேர்ந்தெடுக்கப்பட்ட தற்கான கான்டெக்ஸ்ட் மெனுவினைத் தரும்.
Ctrl பட்டனுடன் பெரும்பாலும் தற்போது பழக்கத்தில் உள்ள செயல்பாடுகளே மேற்கொள்ளப்படுகின்றன. மாற்றம் எதுவும் இல்லை.


Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X