என்கிரிப்ட் (Encrypt): கம்ப்யூட்டரில் அனுப்பப்படும் டேட்டாவினை அனுப்புபவரும் பெருபவரும் மட்டுமே ரகசியமாகக் கையாள உதவும் தொழில் நுட்பம். டெக்ஸ்ட், ஆடியோ மற்றும் வீடியோ ஆக எதுவானாலும் இந்த முறையில் மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பின்னர் மாற்றயவர் துணையின்றி யாரும் படித்தறிய முடியாது.
செக்ஸ்டில்லியன் (Sextillion): என்று ஒரு எண் உண்டு. கனடா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இந்த எண்ணைத் தற்போது குறிப்பிடுகின்றனர். இது 1 போட்டு 21 சைபர்களைச் சேர்த்தால் வரும் எண்.
லினக்ஸ் (Linux): இது ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம். பெர்சனல் கம்ப்யூட்டர் உட்பட அனைத்து வகை கம்ப்யூட்டர்களிலும் இது இயங்கும். இதனை யாரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்கலாம். அதற்கான சோர்ஸ் கோட் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.
பிளாக்வேர் (Blogware): பிளாக்குகள் தயாரிப்பதிலும் நிர்வகிப்பதில் மேம்படுத்துவதிலும் உதவும் சாப்ட்வேர் தொகுப்புகள், இவற்றை Content Management System என்றும் அழைப்பார்கள்.
குயிக் லாஞ்ச் (Quick Launch): டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.
தம்ப் நெயில் (Thumbnail): பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது என்ன படம் என அறிய முடியும்.