தொடரும் தீராத புதிர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
00:00

சென்ற இதழில் "பெர்சனல் கம்ப்யூட்டர்கள் - தீராத புதிர்கள்' என்ற தலைப்பில் வெளியான தகவல்கள் குறித்துப் பல வாசகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிலர், தாங்கள் அனுப்பிய கடிதங்கள், சிக்கல்கள் குறித்து ஏன் தகவல் இல்லை என்றும் கேட்டுள்ளார்கள். தேர்ந் தெடுத்த சில கேள்விகளுக்கான பதில்கள் தயாராக இருந்தும், இடம் இன்மையால் சிலவற்றை வெளியிட முடியவில்லை. கீழே அவற்றைத் தருகிறோம்.

கேள்வி: டிஜிட்டல் போட்டோ அல்லது படங்கள் உள்ள போல்டரில் Thumbs.db என்ற பைல் உள்ளது? ஏன்? இதனை அழிக்கலாமா?

பதில்: Thumbs.db என்பது விண்டோஸ் சிஸ்டம் பைல். குறிப்பிட்ட போல்டருக்கான தம்ப் பெயில் படங்களை உள்ளடக்கிய பைலாகும். இதனை அழிக்கலாம்.

கேள்வி: என் ஸ்மார்ட் போன் மற்றும் கேமராவில், படங்கள் அனைத்தும் ஏன் DCIM என்ற போல்டரிலேயே வைக்கப்படுகின்றன?
பதில்: டிஜிட்டல் கேமராவில் இது வரையறுக்கப்பட்ட ஒரு ஸ்டாண்டர்ட் போல்டர். Digital Camera IMages என்பதன் சுருக்கமே இது. இப்படி ஒரே மாதிரியான வரையறை உள்ளதால் தான், அனைத்து டிஜிட்டல் கேமராக்களிலும், படங்களை நாம் இந்த போல்டரில் தேட முடிகிறது.

கேள்வி: சில பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விநோதமான போர்ட்கள் உள்ளன. இவை எதற்கானது என எப்படித் தெரிந்து கொள்வது?
பதில்: தற்போது வரும் பல வசதிகளைப் பயன்படுத்த, இது போன்ற புதிய போர்ட்கள் தேவைப்படுகின்றன. இவற்றின் பயன் என்ன என்பதனை, இணைய தளத்தில் இந்த போர்ட் களைப் பற்றிக் கூறும் இணையப் பக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். படங்களுடன் விளக்கம் கிடைக்கும்.

கேள்வி: குயிக் டைம் சாப்ட்வேர் எப்படி கம்ப்யூட்டரில் வந்தது எனத் தெரியவில்லை. இதனை நான் வைத்திருக்க வேண்டுமா?
பதில்: உங்கள் கம்ப்யூட்டரில் ஐட்யூன்ஸ் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். அதனுடன் இணைந்து வந்திருக்கும். இது உங்களுக்குத் தேவை இல்லை எனில் நீக்கிவிடலாம்.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில், காசு கொடுத்து வாங்கிய எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.வேர்ட் நன்றாக இயங்குகிறது. ஆனால் என் நண்பர் அனுப்பிய .docx பார்மட் பைல் இதில் திறந்து படிக்க இயலவில்லை. ஏன்?
பதில்: நீங்கள் இன்ஸ்டால் செய்திருப்பது எம்.எஸ். ஆபீஸ் 2003. இதன் பின்னர் வந்த ஆபீஸ் 2007 தொகுப்பில் உருவானதே, உங்கள் நண்பர் அனுப்பியது. இதனைத் திறந்து பார்க்கும் வசதி கிடைக்காது. நீங்கள் புதிய தொகுப்பிற்கு மாற வேண்டும். அல்லது உங்கள் நண்பர் வேர்ட் 2007ல் கிடைக்கும் வேர்ட் 2003 .doc பார்மட்டில், பைலை சேவ் செய்து உங்களுக்கு அனுப்ப வேண்டும். அல்லது இந்த பார்மட் மாற்றத்தினை ஏற்படுத்தித் தரும் இலவச இணைய தள வசதியைப் பயன்படுத்தலாம்.

கேள்வி: சில சாப்ட்வேர் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்த பின்னரும், அதனைச் சார்ந்த சில புரோகிராம்கள், கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு அழிய மறுக்கின்றன. காரணம் என்ன?
பதில்: புரோகிராம்களுடன் வரும் அன் இன்ஸ்டால் வசதியைப் பயன்படுத்தினாலும், இந்த பிரச்னை ஏற்படுவதுண்டு. எனவே, அன் இன்ஸ்டால் செய்திட வேறு சில தர்ட் பார்ட்டி புரோகிராம்களைப் பயன்படுத்திப் பார்க்க வும்.

கேள்வி: ஜாவா மற்றும் அடோப் ரீடர் அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறதே, ஏன்? இவற்றை நானும் அப்டேட் செய்திட வேண்டுமா?
பதில்: இவற்றில் உள்ள சில பலவீனமான இடங்களைப் பயன்படுத்தி மால்வேர்கள் நுழைந்து உங்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்கும் என்பதால், இந்த அப்டேட் பைல்கள் தரப்படுகின்றன. பாதுகாப்பாக இயங்க வேண்டும் எனில், அப்டேட் செய்து கொள்வதே நல்லது. இதே போல, எந்த புரோகிராம் பயன் படுத்தினாலும், அவற்றிற்கென அப்டேட் வருகையில் கட்டாயம் நாம் அப்டேட் செய்து கொள்வது நமக்கு நல்லது.

கேள்வி: விண்டோஸ் சிஸ்டத்தினை அப்டேட் செய்திட வேண்டுமா?
பதில்: முந்தைய கேள்விக்கான பதிலைப் படிக்கவும். கட்டாயம் அப்டேட் செய்திட வேண்டும்.

கேள்வி: சில பைல்களை ஏன் என் இமெயிலுடன் அனுப்ப முடிவதில்லை?
பதில்: பல காரணங்கள் உண்டு. பைல் பெரிதாக இருக்கலாம். சில பைல்களை (font file, exe file etc.) அனுப்ப முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கலாம். சில பைல்களை அதன் போல்டரிலிருந்தபடி (font file) இணைக்க முடியாது. காப்பி செய்து வேறு டைரக்டரியில் வைத்துத்தான் அனுப்ப முடியும். exe பைல்களை அதன் துணைப் பெயர் மாற்றி அனுப்பும் கில்லாடிகளும் இருக்கின்றனர்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.velmurugan - memaruvathur,இந்தியா
09-ஜூன்-201200:21:33 IST Report Abuse
g.velmurugan Now my laptop is too late to ing files & windows on net.What can do to speed up?
Rate this:
Share this comment
Cancel
பழனி kumar - Chennai,இந்தியா
08-ஜூன்-201222:08:49 IST Report Abuse
பழனி kumar எப்படி கூகுளே chrome மை வேகமாக டவுன்லோட் செய்ய
Rate this:
Share this comment
Cancel
deva - மதுரை,இந்தியா
05-ஜூன்-201209:46:49 IST Report Abuse
deva நான் சிவில் என்giநேரிங் டிப்ளோம ஹோல்டர் BE corres இல் படிக்க வாய்ப்புகள் இருக்க பீஸ் குறைந்ததாக இருக்க வேண்டும் சார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X