கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
00:00

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்கும் அனைத்து புரோகிராம்களும் இயங்குமா?
-தா. சுந்தர ராஜ், விருதுநகர்.
பதில்: என் அனுபவத்தில் பெரும்பாலான புரோகிராம்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்தி லும் இயங்கத்தான் செய்கின்றன. ஒரு சில வாசகர்கள் இந்த சிக்கல் குறித்து எழுதி உள்ளனர். அதற்கான தீர்வை இங்கு தருகிறேன். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கிடைக்கும் XP Compatibility Mode என்ற டூலை இதற்குப் பயன்படுத்தலாம். இதற்கு, எந்த புரோகிராம் இயங்கவில்லையோ அதன் இயக்க பைலில் (.exe file) அல்லது அதற்கான ஷார்ட்கட் ஐகானில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து Compatibility என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Run this program in compatibility mode என்று இருக்கும் இடத்தில் செக் செய்து அதற்கேற்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வழியினால், அந்த புரோகிராம் இயங்கவில்லை என்றால், XP Mode என்ற டூலைப் பயன்படுத்தலாம். இது வேறு டூல். ஏன் பெயர் ஏறத்தாழ ஒரே மாதிரியாகக் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. இந்த டூல் விண்டோஸ் 7 புரபஷனல் மற்றும் அல்டிமேட் பதிப்புகளில் மட்டுமே கிடைக் கிறது. இதற்கென Windows XP Mode and Windows Virtual PC என்ற புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதனை டவுண்லோட் செய்திட சற்று அதிக நேரம் பிடிக்கும். எனவே பொறுமையாக டவுண்லோட் செய்திடவும். இதனை உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எக்ஸ்பியில் இயங்கும் புரோகிராம்களை இயக்கமுடியும். ஆனால், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இது விண்டோஸ் 7ல் புரோகிராம் இயங்குவது போல் அல்ல. முற்றிலும் தனியான ஒரு விர்ச்சுவல் எக்ஸ்பியாக செயல்படும். ஆனால், அதே நேரத்தில் விண்டோஸ் 7 சிஸ்டமும் தொடர்பில் இருக்கும்.

கேள்வி: இரண்டு வகையான சாய்வு கோடுகளைப் பயன்படுத்துகிறோம். அவற்றை பார்வேர்ட் ஸ்லாஷ் (Forward slash /) என்றும் பேக் ஸ்லாஷ் (backslash \) என்றும் கூறுகின்றனர். இவற்றை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது?
- எம்.கற்பகவேல், திருநின்றவூர்
பதில்: நல்ல கேள்வி. கம்ப்யூட்டரில் வெகுநாட்கள்பழகியவர்களுக்கும் ஐயத்தை ஏற்படுத்தும் இரண்டு அடையாளங்கள். இதனை வேறுபடுத்திப் பார்ப்பது எப்படி என்று புரிந்து கொண்டால், சந்தேகம் ஏற்படாது. முதலில் கூறப்பட்ட பார்வேர்ட் ஸ்லாஷ், அது அடங்கியுள்ள கட்டளை, கம்ப்யூட்டருக்கு வெளியே ஒன்றை, எடுத்துக்காட்டாக இணையதளம் ஒன்றைத் தேடுவதாகப் பொருள். இரண்டாவதான, பேக்வேர்ட் ஸ்லாஷ், கம்ப்யூட்டருக்குள்ளாக, எடுத்துக்காட்டாக சிஸ்டத்தில் ஒரு ட்ரைவ் அல்லது பைல் போன்றவற்றை தேடுவதற்கான கட்டளையில் இடம் பெறும்.

கேள்வி: பிராட்பேண்ட் இணைப்பின் வேகத்தை அடிக்கடி செக் செய்திட வேண்டுமா? இதனால் என்ன பயன்? எப்படி செக் செய்து முடிவுகள் தரப்படுகின்றன?
- டி. நிஷா, கோவை.
பதில்: கட்டாயம் சோதனை செய்திட வேண்டும். ஏனென்றால், நீங்கள் பயன் படுத்தும் இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனம், தொடர்ந்து தான் உறுதி அளித்த, இணைய வேகத்தினை உங்களுக்கு அளிக்க வேண்டும். இதற்கென அந்த நிறுவனமே ஸ்பீட் டெஸ்ட் சோதனைக்கான டூலை தன் இணைய தளத்தில் வழங்கி இருக்கலாம். அல்லது இணையத்தில் இலவசமாக இந்த சேவையை வழங்கும் தளத்தின் உதவியை நாடலாம். கூகுள் தேடல் மூலம், இது போன்ற ஒரு தளத்தின் முகவரியைப்பெற்று இன்டர்நெட் இணைப்பின் செயல்பாட்டு வேகத்தைக் கண்டறியலாம். இந்த தளங்கள் நீங்கள் கட்டளை கொடுத்தவுடன், பைல் ஒன்றை இணையத்திலிருந்து டவுண்லோட் செய்து, அதன் அளவு, வேகம், பைல் இறங்க எடுத்துக் கொண்ட நேரம் ஆகியனவற்றைக் காட்டும். அதே போல, அடுத்து பைல் ஒன்றை அப்லோட் செய்து, தகவல்களைக் காட்டும். பெரும்பாலும் இவை சரியாகவே இருக்கும். ஒரு சில வேளைகளில், பிராட்பேண்ட் அலைவரிசை நெருக்கடியில் வேகம் மாறலாம். எனவே அடிக்கடி இதனைச் சோதனை செய்து, சராசரி வேகம் என்னவென்று பார்த்து, சரியாக இல்லை எனில், உங்களுக்கு இணைய இணைப்பினை வழங்கும் நிறுவனத்திடம் முறையிடலாம். மேல் நாடுகளில், தங்கள் வாடிக்கை யாளர்களை திருப்திபடுத்த, உறுதி தந்த வேகத்தைக் காட்டிலும் கூடுதலான வேகத்தில் இணைய இணைப்பு தரப்படுகிறது.

கேள்வி: சிகிளீனர் போல, தேவையற்ற பைல்களை நீக்கும் வேறு நல்ல புரோகிராம் ஒன்று சொல்லுங்களேன்.
- டி. அகிலா, திருவண்ணாமலை.
பதில்: இந்த வகையில் மிகவும் பிரபலமானது சிகிளீனர் புரோகிராம் தான். அடுத்த நிலையில் நன்றாகச் செயல்படும் இலவச புரோகிராம் ஒயிஸ் டிஸ்க் கிளீனர் (Wise Disk Cleaner) என்ற இலவச புரோகிராமாகும். இது விண்டோஸ் சிஸ்டத்தின் அனைத்து பதிப்புகளிலும் இயங்கும். இதன் செயல்பாடுகள் அனைத்தும் மூன்று டேப்களிலேயே அடங்கி விடுகிறது. வெப் பிரவுசிங் குக்கீஸ், தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட பைல்கள், பிரவுசிங் ஹிஸ்டரி பைல்கள், தவறான ஷார்ட் கட் கீ பைல்கள், காலியாக உள்ள பைல்கள் ஆகியனவற்றைச் சுட்டிக் காட்டி, நம்மிடம் அனுமதி பெற்று அவற்றை நீக்குகிறது.
இதில் Slimming System என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. விண்டோஸ் இன்ஸ்டலேஷன் போல்டரில் உள்ள தேவையற்ற பைல்களை இது நீக்குகிறது. நாம் பயன்படுத்தாத சிஸ்டம் பைல்களை நீக்குகிறது. தேவையற்ற மொழிகளுக்கான பைல்கள், Windows Installer Baseline Cache பைல்கள் ஆகியவற்றை எடுத்துவிடுகிறது. இது ஒரு புதிய நல்ல வசதி. விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்தி ஒரு மாதம் ஆன பின்னர், இந்த டூலைப் பயன்படுத்திய போது, 1.3 கிகா பைட்ஸ் அளவிலான பைல் கள் நீக்கப்பட்டன. இந்த புரோகிராமினைப் பெற www.wisecleaner.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். wdcfree.exe என்ற பைல் இறக்கி இன்ஸ்டால் செய்திடவும். இதன் புதிய பதிப்பு தி7.33 அண்மையில் வெளியாகியுள்ளது.

கேள்வி: எக்ஸெல் 2003 பயன்படுத்துகிறேன். காலம் மற்றும் ரோ வரிசைகளை இன்ஸெர்ட் செய்தால், அருகே “Insert Options,’ என்ற ஒரு ப்ளோட்டிங் பட்டன் தரப்படுகிறது. இது நம் கவனத்தினை சிதறடிக்கிறது. இதனைப் பயன்படுத்துவதும் இல்லை. இதனை அறவே நீக்க முடியாதா?
- சி. நிர்மல் குமார், மதுரை.
பதில்: இந்த ப்ளோட்டிங் பட்டன் நம் கூடுதல் வசதிக்காகத்தான் தரப்படுகிறது. எனவே, தேவை இல்லை எனில், இதனை அறவே நீக்கிவிடலாம். இந்த பட்டனைத் தான் நீக்குகிறோம். இந்த இன்ஸெர்ட் வசதியை அல்ல. கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும். Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். இப்போது எக்ஸெல் Options டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் Edit டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இங்கு Show Insert Options Buttons என்று உள்ள இடத்தில் கிடைக்கும் செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை மாற்றவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்கள், Office பட்டன் கிளிக் செய்து, எக்ஸெல் ஆப்ஷன்ஸ் (Excel Options) என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Excel Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதன் இடது புறத்தில் கிடைக்கும் Advanced என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் ஆப்ஷன்களில் ஸ்குரோல் செய்து Cut, Copy, and Paste என்று இருக்கும் இடத்திற்கு வரவும். இங்கு Show Insert Options Buttons என்று உள்ள இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை நீக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் 2007 உள்ளது. இதன் வேர்ட் பிரிவில், தயாரிக்கப்படும் டாகுமெண்ட்களை எப்போதும் வேர்ட் 2003க்கான பார்மட்டில் சேவ் செய்திடும்படி அமைக்க முடியுமா? இதற்கென ஏதேனும் தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திட வேண்டும்?
- என்.கே. நிவேதிதா, திண்டுக்கல்.
பதில்: ஏன் தர்ட் பார்ட்டி புரோகிராம்? நீங்கள் விரும்பும் வசதி ஆபீஸ் 2007 தொகுப்பில் உள்ளது. கீழ்க்கண்டவாறு மாற்றங்களை ஏற்படுத்தவும்.
வேர்ட் 2007 ஐத் திறக்கவும். ஆபீஸ் பட்டனை அழுத்தவும். கீழே உள்ள Word Options பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து Word Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த டயலாக் பாக்ஸில் இருக்கும் டேப்களில், Save டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் “Save files in this format” என்ற மெனுவில் “Word 97-2003 Document” என்பதனைத் தேர்ந்தெடுக்க வும். அடுத்து ஓகே பட்டன் கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் வேர்ட் டாகுமெண்ட்கள் அனைத்தும் வேர்ட் 2003 பார்மட்டிலேயே சேவ் செய்யப்படும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜூன்-201208:19:51 IST Report Abuse
anbu எப்படி இணைப்பது டூல் பார் ஒரேவரிசையில் பலதரப்பட்ட வெப் அட்ரஸ்(எ.க பேஸ்பூக், யூடுப்,கூகுளே) இவை அனித்தும் ஒரே நெட்வரிசையல் வேண்டும். (நான் கண்டேன் எனது நண்பனின் கணினியில் (NCH சாப்ட்வேர்) லைக் திஸ்.
Rate this:
Share this comment
Cancel
kothandaraman - chennai,இந்தியா
04-ஜூன்-201215:07:15 IST Report Abuse
kothandaraman windows XP, office 2007 பயன்படுத்துகிறேன். அதில் உள்ள லதா பான்ட்டில் தமிழில் டைப் அடிக்கும்போது ஒரு மெய்யெழுத்துக்குப் பின் வல்லின எழுத்து வந்தால் அதில் தானாகவே ஒரு புள்ளி ஏறிக் கொள்கிறது. உதாரணமாக, வந்தது என்று அடித்தால் வந்த்து என்றும் அப்பம் என்று அடித்தால் அப்ப்ம் என்றும் வருகிறது. Auto correction இல் போய் exceptions இல் உரிய கட்டளை கொடுத்தும் பலன் இல்லை. ஒவ்வொரு முறையும் பேக் ஸ்பேஸ் அழுத்தி அதை அழிக்க வேண்டி உள்ளது. இதை நீக்க வழி உள்ளதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X