கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2012
00:00

கேள்வி: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கிய நேரத்தினை “சிஸ்டம் அப் டைம்’ எனக் கூறுகின்றனர். எவ்வளவு நேரம் என்பதனைக் காட்டும் கடிகாரம் உள்ளதா? இருந்தால், அதனை எப்படிப் பெறுவது? என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குகிறது.
- என். ஜோதி சந்திரன், காட்டாங்குளத்தூர்.
பதில்: கடைசியாக எப்போது கம்ப்யூட்டரை ஆன் செய்து இயங்கத் தொடங்கினீர்களோ, அப்போதிருந்து இப்போது வரையிலான நேரமே System uptime ஆகும். அதாவது கடைசியாக கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும் நேரம். இதனை எப்படி அறிவது? உங்களுடைய சிஸ்டம் எக்ஸ்பி எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதில் Start பட்டன் அழுத்தி Run கட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். இதில் CMD என டைப் செய்து என்டர் அழுத்த கருப்பு திரையில் டாஸ் ப்ராம்ப்ட் என்று சொல்லப்படும் கட்டளைப் புள்ளி கிடைக்கும். இதில் Systmeinfo என இடைவெளி விடாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். இப்போது உங்கள் சிஸ்டம் படிக்கப்பட்டு, சிஸ்டம் குறித்த தகவல்கள் கிடைக்கும். இதில் 11 ஆவது வரியில் System Uptime எனக் காட்டப்பட்டு அதன் எதிரே, இதுவரை உங்கள் கம்ப்யூட்டர் இறுதியாக ஆன் செய்ததிலிருந்து எவ்வளவு நேரம் ஓடியுள்ளது எனக் காட்டப்படும். நாட்கணக்கில் ஓடியிருந்தாலும் Days, Hours, Minutes, Seconds எனக் காட்டப்படும். மேலும் சிஸ்டம் குறித்த பல ருசிகரமான தகவல்கள் அதில் இருக்கும்.

கேள்வி: என் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7. இதில் டாஸ்க் பார் சற்றுப் பெரிதாக இருக்கிறது. இதன் நீளம் மற்றும் அகலத்தினைச் சற்றுக் குறைவாக இருக்கும்படி அமைக்க முடியுமா?
-கே. விக்டர் துரைராஜ், திருப்பூர்.
பதில்: விண்டோஸ் 7 சிஸ்டத்தின் டாஸ்க் பார், வழக்கத்திற்கு மாறாகச் சற்றுப் பெரி தாகவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மானிட்டர் திரையின் அடிப்பாகத்தில் சற்று அதிகமாகவே இடத்தை எடுத்துக் கொள்கிறது. இதனால் பட்டன்கள் பெரிதாக இருக்கின்றன. இதனால், சற்று சிறிதான அளவில் உள்ள மானிட்டர்களை இயக்கு பவர்களுக்கு இது சிரமத்தைத் தரும் அம் சமாக இருக்கும். இந்த இடத்தை அப்ளிகேஷன்களுக்குத் தந்தால் விரை வாகச் செயல்படலாம் அல்லவா? இவ்வாறு விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ள ஒரு வழி உள்ளது. இதன் மூலம் டாஸ்க் பாரினைச் சற்றுச் சுருக்கிக் கொள்ளலாம்.
1. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.
2. உடன் பல டேப்கள் அடங்கிய Taskbar and Start Menu Properties என்னும் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
3. இதில் Auto-hide the taskbar என்னும் பிரிவில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
4. பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.
இனி டாஸ்க் பார் சிறிய இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
கர்சரை டாஸ்க் பாரிலிருந்து எடுத்து விட்டால், டாஸ்க் பார் மறைந்துவிடும். அந்த இடத்திற்கு மீண்டும் கொண்டு சென்றால், டாஸ்க் பார் தோன்றும்.

கேள்வி: நான் என் லேப்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். பூட் ஆகும் போது விண்டோஸ் வெல்கம் ஸ்கிரீன் ஏறத்தாழ 40 விநாடிகளுக்கு அப்படியே உறைந்து நிற்கிறது. என் ராம் மெமரி 2ஜிபி டி.டி.ஆர். 3 ஆகும். டிபிராக், வைரஸ் மற்றும் ஸ்பை வேர் செக் எல்லாம் செய்த பின்னரும், அதே பிரச்னை உள்ளது. இதன் காரணமும் தீர்வும் தரவும்.
டி.மதன்ராஜ், சிவகாசி.
பதில்: இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பூட் ஆகும்போது, ஆட்டோ ரன் என்ற அடிப்படையில் இயங்கும் சில ஸ்கிரிப்ட் இந்த பிரச்னையைத் தரும். எனவே ஆட்டோ ரன் விண்டோவில், லாக் ஆன் பிரிவில், ஏதேனும் பிரச்னை தரும் ஸ்கிரிப்ட் கொண்ட புரோகிராம்கள் இருக்கின்றனவா எனப் பார்த்து அதனைச் சரி செய்திடவும். டெஸ்க்டாப் பின்னணி செட்டிங்ஸ் என்னவென்று பார்க்கவும். நிலைத்த வண்ணத்திற்கு (Solid Colour) அதனை செட் செய்திருந்தால், லாக் இன் ஆக 30 விநாடிகள் ஆகலாம். இதனையே ஒரு படமாக வைத்திருந்தால், 3 விநாடிகள் தான் ஆகும். எனவே இதனையும் கண்ட றிந்து மாற்ற தேவை இருந்தால், மாற்றவும். அநேகமாக இதுதான் உங்கள் கம்ப்யூட்டரின் பிரச்னையாக இருக்கலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களை எடிட் செய்கையில், ஒவ்வொரு திருத்த நிலைக்கும், அதே பெயரில் வெவ்வேறு பைல்களாக சேவ் செய்திட முடியுமா? அதற்கான வழி என்ன?
- என். சுகப்பிரியா, தேவாரம்.
பதில்: இதற்கான வழி வேர்ட் தொகுப்பில் உள்ளது. பல்வேறு பொருள் குறித்து டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கையில், அதில் திருத்தங்களை ஏற்படுத்துகையில், முதலில் என்ன இருந்தது என்று அவற்றை மாற்றிய பின்னர் அறிய விரும்புவோம். இதற்கு ஒவ்வொரு திருத்தத்திற்கும் நாம் பைல் ஒன்றை சேவ் செய்திட இயலாது. இதற்காகவே வேர்டில் ஒவ்வொரு பதிப்பு (version) என்றொரு வசதியைத் தருகிறது. ஒரே பைலில் அதன் பல்வேறு பதிப்புகளை வைத்துக் கொள்ள இந்த வசதி கிடைக் கிறது. இதன் மூலம் என்ன என்ன திருத்தங் கள் மேற்கொள்ளப்பட்டன என்று நாம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு குறிப்பிட்ட டாகுமெண்ட் ஒன்றைத் திருத்திய பின்னர், பைல் மெனு சென்று versions என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது versions டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இனி Save Now பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் உங்கள் திருத்தத்தினைப் புரிந்து கொள் ளும் வகையில், பெயர் தரலாம். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். வேர்ட் இந்த பதிப்பை சேவ் செய்து கொள்ளும். இவ் வாறு சேவ் செய்திடுகையில், வேர்ட், உங்கள் டாகுமெண்ட் எப்படி இருந்தது என்பதனை ஒரு படக் காட்சி போல வைத்துக் கொள்கிறது. இதன் பின்னர் நீங்கள் மேற்கொள்ளும் திருத்தங்கள் இதனைப் பாதிக்காது.

கேள்வி: ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரை பூட் செய்கையிலும், டாஸ்க் பாரின் வலது பக்கத்தில், மஞ்சள் நிறத்தில் உள்ள ஐகானிலிருந்து, “விண்டோஸ் அப்டேட் பைல்களை இன்ஸ்டால் செய்திடவா?’ என்ற கேள்வியுடன் என்று ஒரு விண்டோ கிடைக்கிறது. இது எதனால்? இதற்கு யெஸ் அழுத்த தயக்கமாக உள்ளது. தெளிவாக்கவும்.
-சி.முருகராஜ், திண்டுக்கல்.
பதில்: நல்ல கேள்வி. உங்களைப் போலப் பலரும் இது போல இந்தக் கட்டச் செய்தியை அலட்சியப்படுத்துகின்றனர். சிலர் இது வைரஸ் வேலையாக இருக்குமோ என்றெண்ணி, கவனமாக புறம் தள்ளு கின்றனர். இது தவறு. இதனால் உங்கள் கம்ப்யூட்டருக்குப் பிரச்னை ஏற்படலாம். விண்டோஸ் பேட்ச் பைல் தான் அது. ஒவ்வொரு மாதமும், இணைய இணைப் பில் இருக்கையில், உங்கள் கம்ப்யூட்டர் மைக்ரோசாப்ட் தளத்தினைத் தொடர்பு கொண்டு, இந்த பைலைப் பெற்று கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்கிறது. இதனை இன்ஸ்டால் செய்தால் தான், கம்ப்யூட்டர் முழுமையான பாதுகாப்பினை யும் செயல்பாடு திறனையும் பெறும். வைரஸ் மற்றும் பிற மால்வேர் அனுப்புபவர் களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். எனவே அலட்சியப் படுத்தாமல், அதனை இன்ஸ்டால் செய்துவிடுங்கள். இந்த பேட்ச் பைல் இன்ஸ்டால் செய்திடுகையில், நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. கம்ப்யூட்ட ரில் தொடர்ந்து வேலை பார்க்கலாம்.

கேள்வி: எச்.டி.எம்.எல். டாகுமெண்ட் என்பது என்ன? வேர்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
- கே.என். சந்தோம், திருப்பூர்.
பதில்: சுருக்கமாகச் சொல்வதென்றால், அது ஓர் இணைய தளப் பக்கம். இணைய தளத்தில் நாம் பார்க்கும் பக்கங்கள் எல்லாம், ஒருவகை டாகுமெண்ட்களே. ஒரு டெக்ஸ்ட்டை எப்படி படிக்க வேண்டும் என உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பிரவு சருக்குக் கட்டளைகள் அதில் எழுதப்பட்டிருக்கும். Hyper Text Markup Language என்பதன் சுருக்கமே இது. இது இணைய தளப் பக்கங்களுக்கான புரோகிராமிங் மொழி. (தொழில் நுட்ப ரீதியாகப் பார்த்தால், இதனை புரோகிராமிங் மொழி என்று கூறுவதும் தவறு). நீங்கள் பார்க்கும் இணைய தளத்தினை எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கான கட்டளைகளை இந்த டாகுமெண்ட் உங்கள் பிரவுசருக்குத் தருகிறது. இதனைப் பார்க்க உங்களுக்கு ஆவலாக இருந்தால், உங்கள் கம்ப்யூட்ட ரில் உள்ள பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். view மெனு சென்று, கிடைக்கும் பிரிவுகளில் Page Source அல்லது View Source என்பதனைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்திடவும். இப்போது இணையப் பக்கத்திற்கான எச்.டி.எம்.எல். டாகுமெண்ட் கிடைக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதனை இன்ஸ்டால் செய்த போது ஏரோ ஸ்நாப் என்னும் டூல் இயங்கியது. இப்போது செயல்படவில்லை. இதனை எப்படி மீண்டும் இயக்குவது?
- என். பூபதிராஜ், கோவை.
பதில்: விண்டோக்களின் முனையில் இழுக்கையில், தானாக விரியும் செயல்பாடு இந்த ஏரோ ஸ்நாப். இதனை செயல் படுத்தலாம்; செயல்பாட்டினை முடக்கவும் செய்திடலாம். Start கிளிக் செய்திடவும். பின்னர் Control Panelலில் கிளிக் செய்து அதனைப் பெறவும். மேலாக உள்ள சர்ச் பாக்ஸில், accessibility என டைப் செய்திடவும். இதில் Ease of Access Center என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். இங்கு View current accessibility settings என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Make it easier to focus on tasks என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். அடுத்து Prevent windows from being automatically arranged when moved to the edge of the screen என்பதில் கிளிக் செய்திடவும். இந்த இயக்கத்தினை செயல் பாட்டில் வைத்திருக்க, அதன் அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் இருக்கக் கூடாது. அடுத்து Apply கிளிக் செய்து பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அவ்வளவுதான், ஏரோ ஸ்நாப் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. இது குறித்து இன்னும் அறிய http://windows.microsoft. com/en-us/windows7/products/features/snap என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
துரை - villupuram,இந்தியா
17-ஜூன்-201223:26:28 IST Report Abuse
துரை வணக்கம் ஐயா, நான் எப்படி கம்ப்யூட்டர் மலர் கேள்வி கேட்கிறது
Rate this:
Share this comment
Cancel
murugesan - perambalur,இந்தியா
16-ஜூன்-201218:55:43 IST Report Abuse
murugesan தினமலர்க்கு எனது மனப்பூர்வ நன்றி,எனது கம்ப்யூட்டர் knowledge க்கு தினமலரின் கம்ப்யூட்டர் தான் காரணம்.மிக்க நன்றி
Rate this:
Share this comment
Cancel
பிரகாஷ்.ப - பொள்ளாச்சி,இந்தியா
13-ஜூன்-201211:45:14 IST Report Abuse
பிரகாஷ்.ப விண்டோஸ் 7 -ல் மட்டும் பல சாப்ட்வேர்கள் பயன்படவில்லை ஏன்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X