கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
00:00

கேள்வி: மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரில் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகம் என்று குறிப்பிடுகையில், இரண்டும் ஒரே அளவைத்தான் குறிக்கின்றனவா?
- என். ப்ரீத்தி, சென்னை
பதில்: கிகாஹெர்ட்ஸ் (Ghz (Gigahertz)) என்பது,பொதுவாக ப்ராசசர் ஒன்றின் செயல் வேகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அலகு. ஆனால் இவை அனைத்துமே சமமான ஒன்றாகத் தயாரிக்கப்படுவதில்லை. மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகாஹெர்ட்ஸ் என்பவை ப்ராசசரின் செயல் வேக கடிகாரத் தினை அளக்கும் அளவாகும். எவ்வளவு அதிகமான வேகத்தில் தகவல்கள் செயல் படுத்தப்படுகின்றனவோ அந்த அளவில் இதன் அளவு அதிகமான எண்ணிக்கையில் இருக்கும். இதில் என்ன பிரச்னை என்றால், அனைத்து ப்ராசசர்களும் ஒரே வேகத்தில் தகவல்களை ஆய்வு செய்வதில்லை. அதே போல கம்ப்யூட்டரில் செயல்படுத்தப்படும் தகவல்களின் எண்ணிக்கை, தன்மை போனில் இருப்பதில்லை.
இதனைப் புரிந்து கொள்ள கார் ஒன்றையும் ட்ராக்டர் ஒன்றையும் எண்ணிப் பார்க்கவும். காரின் இயக்க வேகம் 150 குதிரை சக்தியாகவும், ட்ராக்டர் ஒன்றின் வேகம் 300 குதிரை சக்தியாகவும் இருக்கலாம். காரின் வேக சக்தி, பாதியாக இருந்தாலும், அதிக வேகத்தில் செயல்படும். இதனை போனுக்கு ஒப்பிடலாம். போன் ஒரு சிறிய பேட்டரியின் மின்சக்தியில் இயங்கு கிறது. அதனால் இதன் கிகா ஹெர்ட்ஸ் வேகம் குறைவாக இருந்தாலும், மிக வேகமாக இயங்கும். ஆனால், கம்ப்யூட்டர் ஒரு ட்ராக்டரைப் போன்றது. இதனை இயக்க நாம் பயன்படுத்தும் மின்சாரம் அல்லது பெரிய அளவில் பேட்டரி தேவை. மேலும் கம்ப்யூட்டரில் பலவகைப் பட்ட பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள் கிறோம். போனில் உள்ள ப்ராசசரைக் காட்டிலும் கூடுதலான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால், 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர் கூட மெதுவாக இயங்குவது போல் தெரிகிறது. இதுதான் வேறுபாடு.

கேள்வி: சில பைல்களை டபுள் கிளிக் செய்கையில், நான் எதிர்பார்க்கும் புரோகிராம் இல்லாமல், வேறு ஒரு புரோகிராம் இயக்கப்படும் அதில் பைல் திறக்கப்படுகிறது. ஆடியோ, வீடியோ பைல்கள். டாகுமெண்டரி பைல்களில் பெரும்பாலும் இந்தக் குழப்பம் ஏற்படுகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம்?
- கா. இளமாறன், கோவை.
பதில்: நீங்கள் டாகுமெண்ட் பைல், படம் அல்லது ஆடியோ பைல் அல்லது ஸ்ப்ரெட்ஷீட் என எதனை டபுள் கிளிக் செய்தாலும், அந்த பைலின் துணைப் பெயரினைப் பார்த்து அதற்கேற்ப தன்னி டம் உள்ள புரோகிராமினை விண்டோஸ் இயக்குகிறது. அதனால் அதற்கான புரோகிராமினைக் கண்டறிய இயலா விட்டால், விண்டோஸ் சிஸ்டத்தால், இதற்கான புரோகிராமினைக் கண்டறிய முடியவில்லை; இணையத்தில் தேடிப் பார்க்கவா என்று ஒரு கேள்வி கேட்கப்படும். சரி, இனி உங்கள் பிரச்னைக்கு வருவோம்.
குறிப்பிட்ட பைலை எந்த புரோகிராமில் திறக்கப்பட வேண்டும் என்பதனை, கம்ப்யூட்டரில் செட் செய்திடலாம். நீங்கள் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்தினால், நீங்கள் விரும்பும் வகை பைல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Open with என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Default Program என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Browse என்பதனைத் தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட புரோகிராமினை இயக்குவதற்கான .exe பைல் அல்லது அதற்கு இணையான பைலைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால், பைலின் மீது ரைட் கிளிக் செய்து, பின்னர் Open with தேர்ந்தெடுக்கவும். அடுத்து Choose Program பிரிவு சென்று, அதற்கான புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், Always use the selected program to open this kind of file என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இனி, நீங்கள் தேர்ந்தெடுத்த புரோகிராம் மூலமாகவே, பைல் இயக்கப்படும்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரில் சர்ச் இஞ்சின்களுக்கு சுருக்கு வழி ஏற்படுத்தி ஷார்ட்கட் அமைப்பது எப்படி? புக்மார்க் செல்லாமல் சர்ச் இஞ்சினை பெற வேண்டும்.
- கே. அருண்ராஜ், மதுரை.
பதில்: பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை தானாகவே எந்த தேடலுக்கும் கீ வேர்ட் எனப்படும் சுருக்கு வழியை அமைத்துக் கொண்டிருக்க வில்லை. ஆனால், நாம் அமைக்கலாம். தேடலுக்கான கீ வேர்ட் அமைக்க, பயர்பாக்ஸில் உள்ள சர்ச் பாக்ஸ் கட்டத்தில் உள்ள மெனுவினை விரிக்கவும். அதில் Manage Search Engines என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சர்ச் இஞ்சின்கள் வரிசையாகக் காட்டப்படும். எந்த சர்ச் இஞ்சினுக்கு சுருக்க கீ வேர்ட் அமைக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, கூகுள் சர்ச் இஞ்சினைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் Edit Keyword என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு Keyword என்பதில் இந்த சர்ச் இஞ்சினை உங்களுக்குத் தரும் ஷார்ட் கட் கீ வேர்டை அமைக்கவும். கூகுள் சர்ச் இஞ்சினுக்கு ‘g’ எனத் தரலாம். ஓர் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பல எழுத்துக்கள் சேர்ந்ததாகவும் இருக்கலாம். இதனை அமைத்த பின்னர், நீங்கள் குறிப்பிட்ட சர்ச் இஞ்சினை வேகமாக இயக்கித் தேடலாம். எடுத்துக்காட்டாக, கூகுள் சர்ச் இஞ்சினில் "தினமலர்' என்ற சொல்லைத் தேட வேண்டும் என்றால், அட்ரஸ் பாரில் ‘g dinamalar’ எனத் தரலாம். கூகுள் தினமலர் குறித்த தகவல்களைப் பட்டியலிடும்.

கேள்வி: நான் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். இதற்கு எனக்குத் தேவைப்படாத மெயில்கள் சிலரால் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றை ஏற்கக் கூடாது எனத் தடுக்க முடியுமா?
- கா. ஸ்ரீனிவாஸ், ஸ்ரீரங்கம்.
பதில்: இக்கால டிஜிட்டல் வசதிகளில் இது போன்ற சில்லரை தொந்தரவும் இருக் கின்றன. நாம் அறியாதவர்கள் மட்டுமல்ல, நாம் அறிந்த சிலரும் தேவையற்ற மின்னஞ்சல்களை அனுப்புகின்றனர்; அல்லது மற்றவரிடமிருந்து வந்தவற்றை நமக்கு பார்வேர்ட் செய்கின்றனர். ஜிமெயிலில் இவற்றை வடிகட்டி தடுக்கலாம். கீழே குறிப்பிட்டபடி செயல்பட்டு செட்டிங்ஸ் அமைக்கவும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் பக்கத்திற்குச் சென்று, நீங்கள் அஞ்சல் பெற விரும்பாத மெயில் முகவரிகளுக்கு முன் ஒரு டிக் அடையாளம் அமைக்கவும். பின்னர் திரையின் மேலாக உள்ள More Actions என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். அங்கு Filter Messages like these என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து create filter என்ற விண்டோ கிடைக்கும். இதில் உள்ள From பீல்டில், நீங்கள் டிக் அடையாளம் செய்த அஞ்சல் முகவரிகள் காணப்படும். இவை அனைத்தும் நீங்கள் தடுக்க விரும்பித் தேர்ந்தெடுத்தவை தானா என்பதனை உறுதி செய்து கொள்ளவும். இப்போது கூட அவற்றை நீக்கலாம். இந்த இமெயில் முகவரிகள் @spam.com, @spammer.com என இருக்கும். இவற்றில் நீங்கள் @க்கு முன்னால் இருக்கும் யூசர் நேம் என்ற பெயரை நீக்க வேண்டும். மெயில் செய்தி யில் சில சொற்கள் இருப்பின் அவற்றையும் தடுக்கும் வகையில், அதற்கான பெட்டியில் அந்த சொற்களை இங்கு அமைக்கலாம். இவற்றை எல்லாம் முடித்த பின்னர், Next Step என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து இந்த மெயில் முகவரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனையும் நீங்கள் தீர்மானித்து செட் செய்திட வேண்டும். மெயில்களை அழிக்க லாம்; ட்ரேஷ் பெட்டிக்கு அனுப்பலாம்; இன்பாக்ஸுக்கு வராமல் தடுக்கலாம்; ஸ்டோர் செய்து வைக்கலாம்; படித்தவை எனக் குறிப்பிட்டு அனுப்பலாம்; அல்லது லேபிள் கொடுக்கலாம்; வேறு ஒரு முகவரிக்கு முன்னோக்கி அனுப்பலாம். இந்த செயல்பாட்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர் Create Filter என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடனே இது செயல்பாட்டிற்கு வரும். இது போல ஒதுக்கிய மெயில்கள் அனைத்தும் Settings – Filters என்ற பகுதியில் இருக்கும். பின் ஒரு நாளில் இவை தேவைப்பட்டால் முகவரிகளை எடிட் செய்து கொள்ளலாம்.

கேள்வி: பிரவுசர் யூசர் ஏஜெண்ட் என்று சொல்லப்படுவது எது? நமக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனமா? அல்லது அது பயன்படுத்தப்படும் சாதனமா?
-சா. தேன்மொழி, திருப்பூர்.
பதில்: இரண்டும் இல்லை. பிரவுசர் யூசர் ஏஜென்ட் (Browser user agent) என்பது, நீளமான ஒரு வரி டெக்ஸ்ட். நீங்கள் ஓர் இணையதளத்துடன் இணைகையில், உங்கள் பிரவுசர் இந்த யூசர் ஏஜெண்ட் வரியை அதற்கு அனுப்புகிறது. இந்த வரியின் மூலம், அந்த இணைய தளம், நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர், கம்ப்யூட்ட ரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகிய வற்றைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன் தளங்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்பும். இந்த யூசர் ஏஜெண்ட் வரியில் "நான் விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் மொஸில்லா பிரவுசரில் இருந்து வருகிறேன்', "நான் ஐபோனில் இருந்து சபாரி பிரவுசரால் அனுப்பப்பட்டுள்ளேன்' என்பது போன்ற செய்தி இருக்கும். இந்த தகவலின் அடிப்படையில், அந்த இணைய தளம் தன்னிடம் உள்ள பக்கத்தினை பிரவு சருக்கேற்றபடியான பக்கத்தை அனுப்பி வைக்கும். மொபைல் பிரவுசருக்கு மொபைல் பக்கங்களை அனுப்பும். சில வேளைகளில் பிரவுசர் மிகப் பழையதாக இருந்தால், எ.கா. இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 6, உங்கள் பிரவுசரை அப்டேட் செய்திடலாமே என்று கூட செய்தி கிடைக்கும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X