வேர்ட் தொகுப்பை நம் வசமாக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
00:00

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தினந்தோறும் நாம் பயன்படுத்துவது வேர்ட் தொகுப்பாகும். இதனை எவ்வளவு எளிதாகவும், வேகமாகவும் பயன்படுத்த முடிகிறதோ அது நமக்கு மனநிறைவைத் தரும்.
வேர்ட் புரோகிராம் மாறா நிலையில் பல அமைப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பல நம் வழக்கமான அல்லது விருப்பமான செயல்பாட்டிற்கு மாறான நிலையில் இருக்கலாம். இவற்றை மாற்றி செட் செய்துவிட்டால், ஒவ்வொரு முறை யும் அவற்றை மாற்ற வேண்டியிருக்காது. இதனால், நேரமும் வேலையும் மிச்சமாகும். அப்படிப்பட்ட சில மாறா நிலை அமைப்பினை மாற்றும் வழிகளை இங்கு காணலாம்.

1. வரிகளுக்கு இடையேயான இடைவெளி: டாகுமெண்ட் தயாரிக்கையில் வரிகளுக்கு இடையேயான இடைவெளியாக வேர்ட் 1.15 எனக் கொண்டுள்ளது. வேர்ட் 2003 தொகுப்பில் இது 1 ஆக இருந்தது. மைக்ரோசாப்ட் வேர்ட் 2007 மற்றும் 2010ல் இதனை 1.15 ஆக மாற்றிவிட்டது. இருவரிகளுக்கிடையே இந்த அளவு இடைவெளி இருந்தால் தான், படிக்க இலகுவாக இருக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணி இவ்வாறு மாற்றி விட்டது. குறிப்பாக இணைய பக்கங்கள் தயாரிக்கையில் இது போல இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் முடிவெடுத்து இவ்வாறு மாற்றி அமைத்தது. நாம் இணையப் பக்கங்களை, வேர்ட் தொகுப்பில் தயாரிக்க வில்லை எனில், நமக்கு வேர்ட் 2003ல் இருந்தது போல, இடைவெளி 1 ஆக இருப்பது நல்லது என எண்ணினால், இதனையே மாறா நிலையில் இருக்குமாறு அமைத்துவிடலாம். இந்த மாற்றத்தினை வேர்டின் டெம்ப்ளேட் பைலில் (Normal.dotx) ஏற்படுத்த வேண்டும்.
1. Home டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. Styles Quick காலரியில் Normal என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் இதில் Modify என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அடுத்து, Format லிஸ்ட்டில் Paragraph என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு கிடைக்கும் Spacing பிரிவில், At செட்டிங் இடத்தில் 1.15 என்று இருப்பதனை 1 என மாற்றவும்.
5. அடுத்து ஓகே யில் கிளிக் செய்திடவும்.
6. அடுத்து New Documents Based On This Template என்ற ஆப்ஷனை டிக் செய்து தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

2. மேற்கோள்குறி (quotes) அடையாளம்: வேர்டில் இருவகையான மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தலாம். அவை Smart Quote ("" '') மற்றும் straight quotes (" '') ஆகும். வேர்டில் இணைய தளப் பக்கங்கள் அல்லது அச்சிடுவதற்கான டாகுமெண்ட்கள் தயாரிக்கையில் வேர்ட் தரும் Smart Quoteக்குப் பதிலாக straight quoteயே விரும்புவீர்கள். இதனால், ஒவ்வொரு முறையும் இதனை உங்கள் விருப்பப்படி மாற்றுவீர்கள். இது நமக்கு சிரமத்தைத் தரும். சில வேளைகளில் மாற்ற மறந்து விடுவோம். எனவே நாம் விரும்பும் straight quoteயே மாறா நிலையில் அமைத்து விட்டால், இந்த பிரச்னை எழாது.
1. File மெனு கிளிக் செய்து, அதில் Help என்பதன் கீழ் Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, Word Option என்பதனை அடுத்து கிளிக் செய்திடவும். வேர்ட் 2003 தொகுப்பில், Tools மெனுவிலிருந்து, Auto Correct Options என்பதனைத் தேர்ந்தெடுத்து, அடுத்த படியாக ஸ்டெப் 4க்குச் செல்லவும்.
2. இடது பிரிவில் Proofing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இங்குள்ள AutoCorrect Options என்ற பிரிவில் AutoCorrect Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு AutoFormat As You Type என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
5. Replace As You Type என்ற இடத்தில் Straight Quotes With Smart Quotes என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருப்பதனை ரத்து செய்திட வும். டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

3. சிறப்பாக ஒட்டுதல் (Paste Special): வேர்ட் தொகுப்பில் உள்ள வசதி, நாம் எந்த வேறு ஒரு பார்மட் அமைப்பில் இருந்து எடுக்கும் டெக்ஸ்ட்டினை அதே பார்மட்டில் ஒட்டி வைக்க உதவிடுகிறது. ஆனால், பெரும் பாலும் ஒட்டப்படுகின்ற வேர்ட் டாகு மெண்ட்டின் பார்மட்டிற்கேற்ப மாற்று வதற்கு நாம் விருப்பப்படுவோம். இவ்வாறு அதிக எண்ணிக்கையில் மாற்ற வேண்டிய திருந்தால், மாறா நிலையில் உள்ள Paste Special வசதியை மாற்றி அமைத்துவிடலாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி செட்டிங்ஸ் மாற்றவும்.
1. File டேப் கிளிக் செய்து Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், Office பட்டனில் கிளிக் செய்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இடது பக்கம் உள்ள பிரிவில் Advanced என்பதனைத்தேர்ந்தெடுக்கவும்.
3. Cut, Copy, and Paste என்ற பிரிவில் , Pasting Between Documents When Style Definitions Conflict என்ற கீழ்விரி மெனுவில் Use Destination Styles என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. Pasting From Other Programs என்ற மெனுவில் இருந்து Choose Keep Text Only என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்ட் 2003ல் இந்த செட்டிங்ஸ் சற்று மாறுபடும். டூல்ஸ் மெனுவிலிருந்து ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்க வும். இதில் எடிட் என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Cut And Paste என்ற பிரிவில் Settings பட்டன் கிளிக் செய்து மேலே காட்டிய மாற்றங்களை மேற்கொள்ளவும்.

4. பைல் தங்கும் இடம்: வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள் அனைத்தும் My Documents என்ற போல்டரில் பதியப்படுகின்றன. நீங்கள் அடிக்கடி பைல்கள் சேவ் செய்யப்படும் இடத்தினை மாற்றுபவராக இருந்தால், இந்த மாறா நிலையை மாற்றி, நம் விருப்பப்படி போல்டர் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடும் வகையில் அமைக்கலாம்.
1. பைல் டேப் கிளிக் செய்து Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, பின்னர் Word Options என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2003ல், File Locations என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. Default File Location என்ற பீல்டில், எந்த புதிய போல்டரில் சேவ் செய்யப்பட வேண்டுமோ அதனைக் குறிப்பிடவும். அல்லது Browse என்பதில் கிளிக் செய்து, அந்த போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003 ல், Documents என்பதை ஹைலைட் செய்து, தொடர்ந்து Modify என்பதில் கிளிக் செய்திடவும். Modify Location டயலாக் பாக்ஸ் மூலம் புதிய போல்டரைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்திடவும். பின்னர் மீண்டும் ஓகே கிளிக் செய்திடவும்.

5. பாராக்களுக்கிடையே இடைவெளி: டாகுமெண்ட் அமைக்கும்போது, என்டர் கீ அழுத்தினால், வேர்ட் பாராக்களுக்கிடையே சற்று கூடுதல் இடைவெளியை உருவாக்கு கிறது. இந்த கூடுதல் இடைவெளி, ஒரு காலி வரிக்கு இணையானதல்ல. எனவே இதனை பேக் ஸ்பேஸ் அழுத்தி நீக்க முடியாது. இந்த கூடுதல் இடைவெளியினை மாற்ற, கீழ்க்குறித்துள்ளபடி செட்டிங்ஸ் அமைக்க வும்.
1. Home டேப் கிளிக் செய்திடவும். வேர்ட் 2003ல், Format மெனுவிலிருந்து Paragraph என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து, கீழாக வலது மூலையில் உள்ள அம்புக் குறியைப் பயன்படுத்தி, Paragraph group’ண் டயலாக் பாக்ஸில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2003ல், Indents And Spacing என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு Don’t Add Space Between Paragraphs Of The Same Style என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
4.தொடர்ந்து Set As Default என்பதில் கிளிக் செய்திடவும். (இந்த ஆப்ஷன் வேர்ட் 2003ல் இல்லை. ஆனால், அவ்வப்போது உருவாக்கப்படும் டாகுமெண்ட்டில் இந்த மாற்றத்தினை மேற்கொள்ளலாம்.)
அனைத்தும் முடிந்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இன்னும் சில, மாறா நிலையில் உள்ள சிலவற்றை மாற்றலாம். இவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X