கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
00:00

கேள்வி: 2010 டிசம்பரில் புதியதாக வாங்கிய கம்ப்யூட்டரில், விண்டோஸ் 7 சிஸ்டம் பதியப்பட்டு கொடுக்கப்பட்டது. இதற்கும் சேர்த்தே பணம் செலுத்தினேன். அதற்கான பில் என்னிடம் உள்ளது. ஆனால், சில நாட்களாக கம்ப்யூட்டரை இயக்குகையில், என்னிடம் உள்ள விண்டோஸ் 7 சிஸ்டம் ஜென்யூன் இல்லை என்று செய்தி வருகிறது. விற்பனை செய்த கடைகாரர் தான் லைசன்ஸ் வெர்ஷன் தான் தந்ததாகக் கூறுகிறார். எங்கு பிரச்னை உள்ளது? யாரை அணுக வேண்டும்?
-டி.எஸ். கண்ணன், சென்னை.
பதில்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் Windows Genuine Advantage checker என்று ஒரு டூல் உள்ளது. இது நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் 7 பதிப்பு, கட்டணம் செலுத்தப்பட்டு சரியான உரிமம் பெற்றதுதானா என்று சோதனை செய்து பார்த்து இந்த செய்தியைத் தருகிறது. சில வேளைகளில் சரியான உரிமம் பெற்றதாக இருந்தாலும், இந்த செய்தி கிடைக்கிறது. இது சிஸ்டம் தரும் சிக்கல். இதற்கு தீர்வு தரும் வழியைப் பார்ப்போம்.
உங்கள் சிஸ்டத்தில், பெரும்பாலும் அதன் சி.பி.யு. டவரின் மேல் புறம் அல்லது பக்கங்களில், Windows Authenticity Label என்ற ஒரு லேபில் ஒட்டப்பட்டிருக்கும். இதில் உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் விண்டோஸ் 7 சிஸ்டத்தின் வரிசை எண் (product key) தரப்பட்டிருக்கும். சில விற்பனையாளர்கள், உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பில்லிலும் இதனைக் குறித்துத் தந்திருக்கலாம். இதனை ஒரு தாளில் எழுதிக் கொள்ளவும்.
அடுத்து, கம்ப்யூட்டரை இயக்கவும். ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து, அதன் சர்ச் பாக்ஸில் Activate Windows என டைப் செய்திடவும். இந்த விண்டோவில் உங்களுக்குத் தரப்பட்டுள்ள ப்ராடக்ட் கீ எண்ணை டைப் செய்திடவும். பின்னர் ஆக்டிவேஷனுக்கான செயல்பாட்டினைத் தொடரவும். நீங்கள் Change product key என்ற பட்டனை கிளிக் செய்திட வேண்டிய திருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், மீண்டும் ஒரு முறை ப்ராடக்ட் கீயினை டைப் செய்திட வேண்டும். இதனைக் கொடுத்தவுடன், உங்களுடையது சரியானது என்ற செய்தி கட்டமாகக் கிடைக்கும். இதன் பின்னர், நீங்கள் உங்கள் கேள்வியில் குறிப்பிட்டுள்ள தவறான செய்தி கிடைக்காது.

கேள்வி: நான் சமீபத்தில் படித்த ஒரு கட்டுரையில், “OS” என அடிக்கடி குறிப்பிடப் பட்டுள்ளது. இது எதனைக் குறிக்கிறது? இதன் விரிவாக்கம் என்ன?
-டி.என். இராபர்ட் சஹாயராஜ், புதுச்சேரி.
பதில்: நல்ல வேளை கேள்வியாக்கி கேட்டுள்ளீர்கள். எழுதுபவர்கள், இது நம் கட்டுரையைப் படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்ற மனப்பாங்குடன் எழுதி விட்டுச் சென்றுவிடுவார்கள். அப்படிப் பட்ட ஒன்றில் ஓ.எஸ். ஒன்று. இதன் விரிவாக்கம் “Operating System” ஆகும். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் (Mac OS X) ஆகிய ஒவ்வொன்றும் ஒரு வகை ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும். இவை உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கி, புரோகிராம்களையும் இயக்குகிறது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாமல் கம்ப்யூட்டர் இயங்காது.

கேள்வி: என்னிடம் பல யு.எஸ்.பி. மெமரி ட்ரைவ்கள் உள்ளன. இவற்றை டிபிராக், டிஸ்க் கிளீன் அப் செய்திட வேண்டுமா? அதன் மூலம் அவை விரைவாகச் செயல்படும் என்று கூறப்படுகிறதே?
-என். கயல்விழி, திருப்புறம்பியம்.
பதில்: யு.எஸ்.பி. மெமரி சாதனம் மற்றும் சாலிட் ஸ்டேட் டிஸ்க் ஆகியவற்றை டிபிராக் செய்திடத் தேவையில்லை. செய் திடவும் கூடாது. அவை அதனைக் கெடுத்து விடும். இதனை எப்படி விளக்கலாம்? உங்களுடைய பிளாஷ் மெமரி ட்ரைவ் என்பது, பென்சிலால் நிரப்பப்பட்ட படிவம் போன்றது. நீங்கள் எழுதியது எதனையாவது மாற்ற வேண்டும் எனில், அதனை அழிப்பானால் அழித்து விட்டு, மீண்டும் புதியதாக நிரப்பிவிடுவீர்கள். இதனையே பல முறை ஓரிடத்தில் மேற்கொண்டால், அந்த இடம் மீண்டும் எழுத இயலாத இடமாக, கிழிந்து போய்விடும் நிலைக்கு மாறிவிடும். மேலும் அடிக்கடி அழித்த தனால், கருப்பாகவும் மாறிவிடும், இல்லையா? எனவே பிளாஷ் மெமரியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அழித்து எழுதுவதே நல்லது. பிளாஷ் மெமரியை டிபிராக் செய்வது தேவையற்றது.

கேள்வி: நான் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டா என இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை என் கம்ப்யூட்டர் களில் பயன்படுத்தி வருகிறேன். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களின் நேரத்தினைக் காட்டும் வகையில் கடிகாரங்களை செட் செய்திட முடியுமா?
-டி. விநாயக ராஜ், திண்டுக்கல்.
பதில்: இந்த இரண்டு சிஸ்டங்களிலும் செய்திடலாம். முதலில், உங்கள் சிஸ்டம் ட்ரேயில், வலது ஓரத்தில் காட்டப்படும் கடிகார ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Adjust Date/Time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Additional Clocks என்ற டேப்பினைத் தட்டவும். பின்னர், கூடுதல் கடிகார நேரம் நீங்கள் செட் செய்திட வழி தரும் செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். அடுத்து நேரத்தைக் கணக்கிட்டுக் காட்ட, நீங்கள் அமைக்க விரும்பும் நேரத்திற்கேற்ற time zone தேர்ந்தெடுக்கவும். இதற்கு ஒரு பெயர் தர வேண்டும். இவ்வாறு வழக்கமான கடிகாரத்துடன், இரண்டு கூடுதல் நேரம் காட்டும் பிரிவை அமைக்கலாம். இறுதியாக Apply என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
இனி நீங்கள், நேரம் காட்டும் இடம் அருகே, மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், விரும்பியபடி கூடுதலாக அமைத்த நேரங்கள் வழக்கமான நேரத்துடன் காட்டப்படும்.

கேள்வி: சில பிளாஷ் ட்ரைவ்களில், தயாரித்து வழங்கும் நிறுவனம் சில சாப்ட் வேர் புரோகிராம்களைப் பதிந்தே விற்பனை செய்கின்றன. இவற்றை நீக்கலாமா?
-என். ரங்கராஜ் , மதுரை.
பதில்: என்னவகையான சாப்ட்வேர் அவை என்பதைப் பொறுத்து அவற்றை நீக்கலாமா வேண்டாமா என முடிவு செய்திடலாம். இலவச அப்ளிகேஷன்கள், கேம்ஸ் மற்றும் சோதித்துப் பார்க்கும் வகையிலான புரோகிராம்கள் எனில், அவற்றை நீக்கலாம். இவற்றை நீக்கச் சிறந்த வழி, ப்ளாஷ் ட்ரைவினை ரீ பார்மட் செய்வதுதான். கீழே தரப்பட்டுள்ளபடி செட் செய்திடவும்.
1. பிளாஷ் ட்ரைவினை, யு.எஸ்.பி. போர்ட்டில் செருகவும். பின்னர், மை கம்ப்யூட்டர் (விண் 2007 எனில் கம்ப்யூட்டர்) ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். ட்ரைவ்களில் இறுதியாக பிளாஷ் ட்ரைவிற்கு ஒரு எழுத்துக் குறியீடு வழங்கப்பட்டுக் காட்டப்படும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில் format என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இது பிளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து புரோகிராம்களையும் அழித்து விடும்.
சில பிளாஷ் ட்ரைவ்களில் தகவல்களைச் சுருக்கிப் பதியவும், பாதுகாப்பிற்காகவும் சில (encryption software/security software) சாப்ட்வேர் புரோகிராம்கள் பதியப்பட்டு வழங்கப்பட்டிருக்கும். இவற்றை நீக்குவது சரியல்ல. நீக்கித்தான் ஆக வேண்டும் எனில், இதனைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் இணைய தளம் சென்று காணவும். அங்கும் தகவல் இல்லை எனில், நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பிக் கேட்கவும். இந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் நீக்கப் படலாம் என்று நிறுவனத்திடம் இருந்து தகவல் கிடைத்தால் மட்டுமே இவை நீக்கப்பட வேண்டும்.

கேள்வி: விண்டோஸ் சிஸ்டம் போல்டரில் “$NtUninstallQ எனத் தொடங்கும் பல பைல்கள் நிறைய உள்ளன. இவை எதனைச் சார்ந்தது என இணையத்தில் தேடியும் அறிய இயல வில்லை. அழித்தால், விண்டோஸ் இயங்கு வதில் பிரச்னை வருமா?
-எஸ். கார்த்திக், தேவாரம்.
பதில்: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்தினால் இது போல பைல்கள் வர வாய்ப்புண்டு. நீங்கள் ஒரு அப்டேட் அல்லது பேட்ச் பைல் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அல்லது விண்டோஸ் தானாக இன்ஸ்டால் செய்கையில், விண்டோஸ், ஒருவேளை பின் நாளில் இதனை அன் இன்ஸ்டால் செய்திட எண்ணினால் உதவட்டுமே என்ற நோக்கில், டைரக்டரி ஒன்றை உருவாக்கி பைல்களைப் போட்டு வைக்கிறது. இன்னொரு வழியில் சொல்வது என்றால், உங்களுடைய அப்டேட் பைல் கள், கம்ப்யூட்டரைக் கெடுத்து விட்டால், தப்பிக்கும் வழியாக இது அமையும்.
இந்த பைல்கள் உங்களுக்கு வேண்டுமா? நிச்சயமாய் தேவைப்படாது. இவற்றை அழிக்கலாம். ஒன்றும் பிரச்னை இல்லை. நீக்கிய பின்னும், ஒவ்வொரு அப்டேட்டுக்குப் பின் இவை தோன்றும். தயக்கமில்லாமல் நீக்கிவிடலாம்.

கேள்வி: பைல்களை பேக் அப் செய்திட போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் ஒன்றை வாங்கிப் பயன்படுத்த என் நண்பர் கூறுகிறார். தூக்கிச் சென்று பயன்படுத்தினால், இவை கெட்டுவிடாதா? எதனை வாங்கலாம்?
-சி. உமாராணி, திருப்பூர்.
பதில்: இப்போதெல்லாம், ஒரு டெரா பைட் அளவிலான, எடுத்துச் செல்லக் கூடிய ஹார்ட் ட்ரைவினைப் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இதன் உள்ளேயும் ப்ளாட்டர்கள், ஹெட் என அமைக்கப் பட்டிருந்தாலும், அவை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வகையிலேயே உள்ளன. ஒரு டெரா பைட் அளவிலான ட்ரைவ் நம்மில் பெரும்பாலானவர்களுக்குப் போது மானதே. ஹார்ட் ட்ரைவ் தயாரிக்கும் நிறுவனங்கள் பல இவற்றைத் தயாரித்து விற்பனை செய்கின்றன. ஹார்ட்வேர் உதிரி பாகங்கள் விற்பனை செய்திடும் கடை களில் விசாரித்து வாங்கவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்துல் ரஹ்மான் ஹாரிஸ் - சென்னை,இந்தியா
30-ஜூன்-201210:11:07 IST Report Abuse
அப்துல் ரஹ்மான் ஹாரிஸ் thanks Ravi.
Rate this:
Share this comment
Cancel
அப்துல் ரஹ்மான் ஹாரிஸ் - சென்னை,இந்தியா
30-ஜூன்-201210:07:50 IST Report Abuse
அப்துல் ரஹ்மான் ஹாரிஸ் ஒரு சாங்ல இருந்து வாய்ஸ் அண்ட் மியூசிக் தனியா பிரிக்க நல்ல சாப்ட்வேர் சொல்லுங்க.
Rate this:
Share this comment
Cancel
keeshahan - சென்னை,இந்தியா
28-ஜூன்-201221:45:18 IST Report Abuse
keeshahan வணக்கம் ! எனது கணினியில் இன்டெல்(i5) ப்ராசசரும், விண்டோஸ் செவென் (07) பாவித்துகொண்ட்டிருக்கிறேன், எனது கணினியில் நான் வேலைசெய்து கொண்டிருக்கும் போது அடிக்கடி விசைபலகையுள்ள லாக் கீ உள்ள லைட் விட்டுவிட்டு வருகிறது, சிலவேளைகளில் கணினி வேலை செய்ய விடாமல் தடுக்கிறது. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தடவையும் இப்படி நடக்கும், இதற்கு என்ன காரணம் ? இதுக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X