யூனியன் பாங்க் ஆப் இந்தியா பணிவாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
00:00

இந்தியாவில் இயங்கி வரும் பொதுத்துறை சார்ந்த வங்கிகளில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற யூ.பீ.ஐ.,க்கு முக்கிய இடமுண்டு. நாடெங்கும் கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுக்காக இந்த வங்கி அறியப்படுகிறது. இந்த வங்கியில் கிளரிகல் பிரிவைச் சார்ந்த ஒற்றைச் சாளர இயக்குனர்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் மொத்தம் 114 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் சிங்கிள் விண்டோ ஆப்பரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இவற்றுடன் ஐ.பீ.பி.எஸ்., அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய கிளரிகல் பொது எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்த பட்சம் பெற வேண்டிய மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
மற்ற தகவல்கள்: இந்த வங்கியின் சிங்கிள் விண்டோ ஆப்பரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐ செலுத்த வேண்டும். இந்தப் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டால் ஆறு மாத காலம் புரபேஷன் அடிப்படையில் பணி புரிய வேண்டும். எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்பட்டு நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலில் கல்வித் தகுதி, கருத்துக்களை வெளிப்படுத்தும் திறமை, சிந்தனைத் திறன், தலைமைப் பண்புகள், இதர சிறப்புத் தகுதிகள், பொழுது போக்கு, நடத்தை, தகவல் பரிமாற்றத் திறன் போன்ற அடிப்படையில் கேள்விகள் அமையும்.
நேர்காணலில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களைப் பெறுவது கட்டாயத் தேவையாகும். மொத்த மதிப்பெண் அடிப்படையில் பதவியில் அமரலாம். முழுமையான தகவல்களை இந்த வங்கியின் இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 03.07.2012
இணையதள முகவரி: www.unionbankofindia.co.in/pdf/ADVTCLERKS09062012.pdf

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X