இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்டில் பதவி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
00:00

பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஏனைய தொழில் பொருட்களின் தொழில் நுட்ப தேவைகளுக்காக 1965ல் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் என்ற இ.ஐ.எல்., நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் கீழ் இந்த நிறுவனம் இயங்குகிறது.
தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் பெட்ரோலியம் தவிர்த்த ஏனைய துறைகளிலும் தனது செயல்பாடுகளை இந்த நிறுவனம் விஸ்தீகரித்துக் கொண்டது. தற்போது ஆசியாவிலேயே மிகப் பெரிய நிறுவனமாக இந்த நிறுவனம் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பயிற்சியாளர்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: இ.ஐ.எல்., நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் பதவி டிரெய்னி டிராப்ட்ஸ்மேன், டிரெய்னி சூப்பர்வைசர்- கன்ஸ்ட்ரக்சன், டிரெய்னி சூப்பர்வைசர்-கன்ஸ்ட்ரக்சன் -சேப்டி என்ற மூன்று பிரிவுகளாக உள்ளது. இவற்றில் மொத்தம் 25 காலி இடங்கள் உள்ளன.
தேவைகள்: இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெடில் டிரெய்னி டிராப்ட்ஸ்மேன் பதவியில் சிவில், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், மெக்கானிகல் ஆகிய நான்கு பிரிவுகள் உள்ளன. இவற்றிற்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவுகளில் 3 ஆண்டு கால டிப்ளமோ படிப்பை குறைந்த பட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். டிரெய்னி - கன்ஸ்ட்ரக்சன் பிரிவு சிவில் மற்றும் மெக்கானிகல் ஆகிய இரண்டு பிரிவுகளில் உள்ளது.
இவற்றிற்கு தொடர்புடைய பிரிவுகளில் மூன்று ஆண்டு கால டிப்ளமோ படிப்பைக் குறைந்த பட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். டிரெய்னி சூபர்வைசர் - கன்ஸ்ட்ரக்சன் - சேப்டி பிரிவுக்கு விண்ணப்பிக்க சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல் ஆகிய பிரிவுஏதாவது ஒன்றில் குறைந்த பட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மற்ற தகவல்கள்: இந்தப் பதவிக்கு ஸ்டைபண்டு அடிப்படையில் பணி புரிய வேண்டும். முதல் ஆண்டில் மாதம் ரூ.7 ஆயிரத்து 500ம், இரண்டாவது ஆண்டில் மாதம் ரூ.11 ஆயிரமும் ஸ்டைபண்டாக வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் இந்தப் பதவிக்கு தேர்ச்சி இருக்கும். ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 06.07.2012
இணையதள முகவரி : http://recruitment.eil.co.in/hrdnew/others/Detailed%20Advertisement.pdf

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nguna - perambalur,இந்தியா
08-ஜூலை-201207:34:21 IST Report Abuse
nguna nice
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X