மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
00:00

முன் நாட்களில் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையாக இருந்த பொதுத் துறை நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்பிற்காக பிரத்யேகமான பாதுகாப்புப் படையாக 1969ல் சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் சி.ஐ.எஸ்.எப்., நிறுவப்பட்டது.
கடந்த 40 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்று தற்சமயம் இந்தப் பாதுகாப்புப் படையில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் பணி புரிகிறார்கள். உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவாக பொதுத் துறையை மட்டும் பாதுகாப்பதில் இருந்து விலகி பல்வேறு திறன் பெற்ற முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் நிறுவனமாக மாறியுள்ளது.
அணு ஆராய்ச்சி மையங்கள், விண்வெளி மையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பது இந்த நிறுவனத்தினர்தான். இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற சி.ஐ.எஸ்.எப்., படையில் கான்ஸ்டபிள்/பயர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: சி.ஐ.எஸ்.எப்., படையின் கான்ஸ்டபிள்/பயர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை அறிவியல் பாடத்துடன் முடித்திருக்க வேண்டும்.
உயரம் குறைந்த பட்சம் 170 செ.மி.,யும், இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு குறைந்த பட்சம் 80 செ.மீ.,ரும், குறைந்த பட்சம் 5 செ.மீ., விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. அதே போல் நாக்-நீ, ப்ளாட் புட், வேரிகோஸ் வெயின்ஸ், மாறுகண், வளைந்த கால்கள், இடது கண்ணை சரியாக மூடமுடியாதவர்கள், விரல்களை இலகுவாக இயக்க முடியாதவர்கள், உடல் குறைபாடு உடையவர்களும் விண்ணப்பிக்க முடியாது. மொத்தத்தில் நல்ல உடல் வாகு, சிறந்த உடல் நிலை உள்ளவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
மற்றவை: சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்சின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/-க்கான போஸ்டல் ஆர்டரை விண்ணப்பிக்கும் பகுதிக்கான அதிகாரியின் பெயரில் விண்ணப்பிக்கும் இடத்திற்கேற்றபடி எடுக்க வேண்டும். தமிழ் நாடு, புதுச்சேரி, லட்சத்தீவுகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் Assistant Commandant/DDO CISF South Zone Chennai என்ற பெயரில் போஸ்டல் ஆர்டரை ஜி.பி.ஓ., சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை உரிய படிவ மாதிரியில் நிரப்பி தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை பின்வரும் இணையதளத்தைப் பார்த்து கட்டாயம் அறியவும்.
முகவரி:
Assistant Commandant,
DDO CISF,
South Zone, Chennai
விண்ணப்பிக்க இறுதி நாள் : 17.07.2012
இணையதள முகவரி:
http://cisf.nic.in/RECRUITMENT_files/CT&FIRE%202012%20NOTIFICATION%20&%20 CORRIGENDUM.pdf

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X