எம்.எஸ். அவுட்லுக்கில் இமெயில் அல்லது அப்பாய்ண்ட்மென்ட் ஒன்றை மூடுவதற்கு Ctrl + F4 பயன்படுத்திப் பாருங்கள். செயல்படாது. ஏனென்றால் அவுட்லுக் மட்டும் திறந்திருக்கும் ஒன்றை மூடுவதற்கு Ctrl + F4 கீகளைப் பயன்படுத்தும். இதனைப் பயன்படுத்தி திறந்திருக்கும் பைலை மூடிவிட்டீர்களா! இப்போது மீண்டும் Ctrl + F4 பயன்படுத்துங்கள். புரோகிராம் மூடப்படும். எனவே அவுட்லுக் புரோகிராமினை மூட வேண்டும் என்றால் அதில் திறந்திருக்கும் ஒவ்வொன்றையும் முதலில் Ctrl + F4 பயன்படுத்தி மூடிவிட்டு இறுதியாகவும் அதனைப் பயன்படுத்தினாலே புரோகிராம் மூடப்படும்.
* கண்ட்ரோல்+எஸ்கேப் அழுத்துங்கள். உடன் ஸ்டார்ட் மெனு கிடைக்கும். பின் ஆரோ கீகளைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் புரோகிராம்களைப் பெறலாம். இந்த மெனு வேண்டாம் என்றால் மீண்டும் எஸ்கேப் கீயினை அழுத்தி வெளியே வரலாம்.
* வேர்டில் ஒரு டாகுமெண்ட் பைலில் ஒரு சொல் எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கிறீர்களா? தொடர்ந்து அதே சொல்லைத் தேட Find and Replace விண்டோவினை திறந்தே வைத்திருக்க வேண்டியதில்லை. ஜஸ்ட் Shift+F4 அழுத்தினால் போதும். தொடர்ந்து அந்த சொல் தேடப்பட்டு முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும்.
பங்சன் கீகளில் எப் 12 கீ சில அரிய செயல்பாடுகளைத் தருகிறது.
எப் 12 தனியாக : ஒரு பைலை வேறு ஒரு பெயரில் அல்லது வடிவில் சேவ் செய்திட
ஷிப்ட் + எப் 12: பைலை சேவ் செய்திட
கண்ட்ரோல் + எப்12: பைல் ஒன்றைத் திறந்திட
கண்ட்ரோல் + ஷிப்ட் + எப் 12 : பைல் பிரிண்ட்
கண்ட்ரோல் + ஆல்ட் + எப் 12 : கிராபிக்ஸ் புராபர்ட்டீஸ் அறிய
ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள்.
USB Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.
Wizard:(விஸார்ட்) இது ஒரு தானாக இயங்கும் சிறிய விண்டோ. ஆன்லைன் அசிஸ்டன்ட் என்றும் சொல்லலாம். அதிக நெளிவு சுளிவுகள் நிறைந்த கம்ப்யூட்டர் அமைப்பில் உங்களை தெளிவுடன் வழி நடத்தும் ஒரு புரோகிராம்.
Event Handler: ஒரு செயல்பாட்டினைத் தூண்டும் இன்னொரு செயல்பாடு. ஒரு பட்டனில் மவுஸ் கர்சரை அழுத்திவிடுகையில் அடுத்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறதல்லவா! அந்த அழுத்தும் செயலின் பின்னணியே Event Handler என அழைக்கப்படுகிறது.
*வைபி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வைபி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வைபி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன.
*இன்டர்நெட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜெர்மன், ஜப்பானீஸ், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஸ்வேதிஷ், இத்தாலியன், போர்த்துகீசியம், டச், நார்வேஜியன், பின்னிஷ், செக், ரஷ்யன் மற்றும் மலாய்
ஆகியவை வருகின்றன.