வேர்ட்: கூடுதல் நுணுக்கங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2012
00:00

இரண்டு வாரங்களுக்கு முன்னர், "வேர்ட் தொகுப்பை நம் வசமாக்க' என்று, அதன் மாறா நிலையில் உள்ள சில அமைப்புகளை மாற்றுவது குறித்து ஐந்து செட்டிங்ஸ் நுட்பங்களை வெளியிட்டோம். தொடர்ந்து இன்னும் சிலவற்றை வரும் நாட்களில் பார்க்கலாம் என்று அந்தக் கட்டுரையின் முடிவை அடுத்து, பல வாசகர்கள் அனைத்தையும் தொடர்ந்து தருமாறு வேண்டிக் கொண்டு பல கடிதங்களை அனுப்பி உள்ளனர். இதோ இன்னும் ஐந்து வழி முறைகளைக் காணலாம்.
1. மினி டூல்பார் (Mini Toolbar): நாம் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுக்கையில், வேர்ட் மினி டூல் பார் ஒன்றைக் காட்டுகிறது. இதில் பல பார்மட்டிங் ஆப்ஷன்ஸ் அடங்கியுள்ளது. இந்த டூல் பார் பளிச் எனக் காட்டப்படாமல், மங்கலாகத் தெரியும். இருப்பினும் பலர் இது எதற்கு வீணான காட்சி என எண்ணி, எஸ்கேப் கீ அழுத்தி மறைய வைப்பார்கள். இதனை நிரந்தரமாகத் தோன்றாமல் இருக்கும்படி செட் செய்திடலாம்.
1. File மெனு கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007 தொகுப்பில், Office பட்டனை அழுத்தி பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. தேவைப்பட்டால், இடது பக்கம் உள்ள பிரிவில் (Left pane) General என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் User Interface Options என்ற பிரிவில், Show Mini Toolbar On Selection என்னும் ஆப்ஷனில் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இனி, நீங்கள் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கையில், மினி டூல் பார் காட்டப்பட மாட்டாது. மீண்டும் இது வேண்டும் என்றால், மேலே கூறியுள்ளபடி சென்று, இறுதி ஆப்ஷனில், டிக் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்.
2. ட்ராயிங் கேன்வாஸ் (Drawing Canvas): வேர்ட் புரோகிராம் கொண்டிருக்கும் Drawing Canvas படம் வரைவதற்கான ஒரு தனி அடுக்கினைத் தருகிறது. இதில் அமைக்கப்படும் ஆப்ஜெக்ட்டுகள் ஒரு தனி இடத்தை எடுத்துக் கொள்வதுடன், இவ்வாறு வைக்கப்படும் அனைத்து ஆப்ஜெக்ட்களும் ஒரு குழுவாகவே இயங்கும். வேர்ட் புரோகிராமினைப் பயன்படுத்தும் பலர் இந்த கேன்வாஸ் படிமத்தைப் பயன்படுத்துவது மிகக் கடினமான ஒன்றாக இருப்பதாகக் கூறி உள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு இது தேவையே இல்லை. நீங்கள் இன்னும் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், இந்த வேர்ட் கேன்வாஸ் வசதியை முடக்கி விடலாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும்.
2. கிடைக்கும் விண்டோவில், General டேபில் கிளிக் செய்திடவும்.
3. General Options பிரிவில் Automatically Create Drawing Canvas When Inserting AutoShapes என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்து விடவும்.
4. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010 தொகுப்புகளில், வேர்ட் கேன்வாஸ் மாறா நிலையில் முடக்கப்பட்டுள்ளது. இவற்றில் அது முடக்கப்படாமல் இருந்தால், வேர்ட் பயன்படுத்துகையில், ஒருவர் இதனை இயக்கி இருக்க வேண்டும். இதனை மீண்டும் இயங்கா நிலையில் வைத்திட கீழ்க்குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், Office பட்டன் அழுத்தி, பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இடது பிரிவில் Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Editing பிரிவில், Automatically Create Drawing Canvas When Inserting AutoShapes என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து மூடவும்.
3.நார்மல் டாட் எக்ஸ் (Normal. dotx): வேர்ட் தன்னுடைய புதிய டாகுமென்ட்களை Normal. dotx என்ற கட்டமைப்பில் (Template) வைக்கிறது. ஆனால், இந்த டெம்ப்ளேட் கொண்டுள்ள செட்டிங்ஸ் அமைப்பு, நம் தேவைகளுக்கு இணையாக இருக்காது. எனவே இந்த Normal.dotx கட்டமைப்பில் நம் தேவைகளுக்கேற்ப சில மாற்றங்களை மேற்கொள்ளலாம். பொதுவாக, பலரும் விரும்பும் மாற்றம் இதில் தரப்பட்டுள்ள எழுத்துரு மற்றும் அதன் பாய்ன்ட் அல்லது பைகா அளவு. இதில் டெம்ப்ளேட் அளவில் மாற்றங்களை ஏற்படுத்தக் கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைக்கவும்.
1. புதிய டாகுமென்ட் ஒன்றைத் திறந்து அதில் Home டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. கீழ்புறம் வலது பக்கத்தில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்து Font groupற்கான டயலாக் பாக்சைப் பெறவும்.
3. இந்த டயலாக் பாக்சில், தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவும். நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், Format மெனுவிலிருந்து Font தேர்ந்தெடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்சில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தவும். எடுத்துக்காட்டாக, மாறா நிலையில் உள்ள எழுத்துருவிற்குப் பதிலாக, Arial எழுத்துருவினை நீங்கள் விரும்பலாம். அதன் அளவும் 12 ஆக இருக்க திட்டமிடலாம்.
4. இந்த டயலாக் பாக்சை மூடும் முன், Set As Default என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2003 தொகுப்பில், Default என்பதில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து கிடைக்கும் உறுதிப்படுத்தலுக்கான டயலாக் பாக்சில், Normal டெம்ப்ளேட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் அனைத்து டாகு மென்ட்களுக்கும் நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை அமல்படுத்தத் தேவையான ஆப்ஷ னைத் தேர்ந்தெடுக்கவும்.
6. அடுத்து இருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும். சிலர், தங்களுடைய டாகுமென்ட்களில், மார்ஜின் மற்றும் ஸ்டைல் போன்றவற்றைத் தாங்கள் விரும்பும் வகையில் அமைக்க எண்ணுவார்கள். இவர்கள் நார்மல் டெம்ப்ளேட்டில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தாமல், custom template ஒன்றில் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்திப் பயன்படுத்துவது நல்லது.
4. சொல் தேர்வு (Word Selection): வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் ஒரு சொல்லில் அதன் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்த பின்னர், அடுத்து இருக்கும் சொல்லிலும் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தால், வேர்ட் அந்த சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்கிறது. நமக்குத் தேவையோ இல்லையோ, வேர்ட் சொல் முழுமையுமே தேர்ந்தெடுக்கும். ஏனென்றால், மாறா நிலையில் இது போல அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற,
1. File டேப் கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல் Office பட்டன் கிளிக் செய்து Word Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல், Tools மெனு பெற்று Options தேர்ந்தெடுக்கவும்.
2. இடது புறம் கிடைக்கும் பிரிவில் Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல் Edit டேப்பினைத் தேர்வு செய்து கிளிக் செய்க.
3. Editing Options பிரிவில், When Selecting, Automatically Select Entire Word என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி சொற்களைத் தேர்வு செய்கையில், நாம் விரும்பும் வகையில் அதனைப் பகுதி பகுதியாகத் தேர்வு செய்திடலாம்.
5. எழுத்து, இலக்கண பிழை மற்றும் பார்மட்டிங் (Spelling, Grammar and Formatting): வேர்ட் நாம் டெக்ஸ்ட்டை டைப் செய்திடுகையில், தானாகவே சொற்களில் உள்ள எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து, சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில் நெளிவு கோடுகளை இட்டுக் காட்டுகிறது. இதே போல பார்மட்டிங் வகையில் பிரச்னை இருந்தாலும் காட்டுகிறது. சிகப்பு கோடு இருந் தால், வேர்ட் பயன்படுத்தும் சொல்லில் அந்த சொல் இல்லை என பொருள். அதாவது, அந்த சொல் இல்லை; அல்லது நாம் தவறாக அதனை டைப் செய்திடுகிறோம். பச்சை வண்ணத்தில் கோடு இருந்தால், அது இலக்கணப் பிழையைக் குறிக்கும். பார்மட்டிங் வகையில் பிழை இருந்தால், அது நீல நிறத்தில் கோடிட்டுக் காட்டப்படும்.
இந்த பிழை சுட்டும் வசதி நமக்கு நல்லதுதான். தவறுகள் இன்றி டெக்ஸ்ட் அமைக்க முடியும். ஆங்கிலம் நமக்கு இரண்டாவது மொழி என்பதால், இந்த வசதி கட்டாயம் நமக்குத் தேவை. ஆனால், ஒரு சிலருக்கு இது அவர்கள் கவனத்தைத் திருப்பும் செயலாக அமைகிறது.
மேலும், ஆங்கிலம் அல்லாத மொழியில் டைப் செய்திடுகையில் ஏறத்தாழ ஒவ்வொரு சொல்லையும் எழுத்துப் பிழை இருப்பதாக வேர்ட் புரோகிராம் காட்டும். ஏனென்றால், பிற மொழிச் சொற்களை அதன் கீ அழுத்தங்களுக்கேற்ப ஆங்கிலச் சொற்களாக எடுத்துக் கொண்டு, அதனை தவறானது என்று வேர்ட் காட்டும். இந்த சிகப்பு, பச்சை நீல வண்ணக் கோடுகள் தேவை இல்லை; காட்டப்பட வேண்டாம் என எண்ணினால், கீழ்க்கண்டவாறு செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
1. File டேப் கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல் Office பட்டன் கிளிக் செய்து Word Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல், கூணிணிடூண் மெனு பெற்று Oணீtடிணிணண் தேர்ந்தெடுக்கவும்.
2. இடது பிரிவில் Proofing என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல், Spelling & Grammar டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. When Correcting Grammar and Spelling In Word என்ற பிரிவில் முதல் மூன்று ஆப்ஷன்ஸ் Check Spelling As You Type, Use Contextual Spelling, மற்றும் Mark Grammar Errors As You Type முன்பு டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். வேர்ட் 2003ல் Contextual Spelling ஆப்ஷன் தரப்படவில்லை.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
டாகுமெண்ட்களில் நீல நிற நெளிவு கோடுகள் ஏற்படாமல் இருக்க, கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொள்ளவும்:
1. File டேப் கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல் Office பட்டன் கிளிக் செய்து Word Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல், Tools மெனு பெற்று Options தேர்ந்தெடுக்கவும்.
2. இடது புறம் கிடைக்கும் பிரிவில் Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல் Edit டேப்பினைத் தேர்வு செய்து கிளிக் செய்க.
3. Editing Options பிரிவில், Keep Track Of Formatting என்பதன் கீழ் Mark Formatting Inconsistencies option என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். வேர்ட் 2003ல், Editing Options பிரிவில், Mark Formatting Inconsistencies என்பதன் கீழ் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதில், நன்கு அதனைக் கற்று, பெரிய திறமைசாலியாக இருந்தாலும், அவற்றைக் கையாள்கையில் தவறுகள் ஏற்படுவது உண்டு. எனவே மேலே குறிப்பிட்டுள்ள திருத்தும் வசதியை மாற்றாமல் இருப்பது நல்லது. இருப்பினும், இதனை ஒரு பிரச்னையாகக் கருதினால், மேலே கண்டபடி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கண்ணன.d - chennai,இந்தியா
15-ஜூலை-201215:14:38 IST Report Abuse
கண்ணன.d ஹட்வரே ப்ரோப்ளம் டிப்ஸ்
Rate this:
Share this comment
Cancel
துரை.Thiyagarajan - Thanjavur,இந்தியா
11-ஜூலை-201216:38:20 IST Report Abuse
துரை.Thiyagarajan ஒவ்வொரு புதனையும் (அறிவு) எதிர் நோக்கி கம்ப்யூட்டர் மலருக்காக காத்திருப்பேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X