- சகுந்தலா கோபிநாத்
அன்புள்ள சகோதரி —
எனக்கு வயது 52; என் கணவருக்கு 60. எங்களுக்கு திருமணமாகி 32 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள்; இரு வருக்கும் திருமணமாகி, நல்ல நிலையில் இருக்கின்றனர். என் கணவருக்கு நல்ல அந்தஸ்தோடு கூடிய வேலை. கைநிறைய சம்பளம். நன்கு படித்தவர். கடந்த ஏப்ரல் மாதம் தான் ஓய்வு பெற்றார்.
என் கணவர், எங்கள் எல்லாரிடமும், மிகவும் அன் பாகவும், ஆதரவாகவும் இருப் பார். இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் நல்ல நிலை யில் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தான் எங்களை வழி நடத்துவார். மிகவும் பாசத்தோடும், கலகலப்பாகவும் இருப்பார். அதுவும், என்னிடத்தில் பாச மழையை கொட்டுவார். திருமணமான புதிதில் எப்படி பிரியமாக இருந்தாரோ, அதுபோல் தான் இன்னும் திகழ்கிறார்.
இப்படிபட்ட கணவர் கிடைத்ததற்கு, நான் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். வேறு ஒருவருக்கு இப்படியொரு கணவர் கிடைத்திருந்தால், தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவர். வீட்டிற்கு வந்தால், வீட்டு வேலையில் எனக்கு ஓத்தாசையாக இருப்பார். அப்படி அனைவரும் போற்றும் படியான குணம். அவரிடம் எந்த கெட்டபழக்கமும் கிடையாது.
பிரச்னை என்னவென்றால், இரவு படுக்கையறையில் தான். படுக்கையறை போனவுடன், நான் அவரிடம் நெருக்கமாக பழக மாட்டேன். "ஏசி'யை ஆன் செய்து, தூங்கி விடுவேன். அவருடைய எதிர்பார்ப்பு, நான் கொஞ்ச நேரம் அவருடன் மனம் விட்டு பேச வேண்டும் என்பதுதான். மாதம் இரண்டொரு நாள், அவருக்கு அந்தரங்க <உறவும் வேண்டும். அது நியாயமான எதிர்பார்ப்பு என்பது எனக்கு தெரிகிறது.
படுக்கையறை என்பது படுத்து தூங்குவதற்கு மட்டும் தான் என்றிருக்கிறது என் மனநிலை. படுக்கையறையில் அவருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல், நான் தூங்கி விடுகிறேன். ஏன் இந்த எண்ணம்.
என்னிடம் <உள்ள குணம் உடனே தூங்கி விடுவது. பகலிலும் தூக்கம்; இரவிலும் தூக்கம் எனக்கு. அவர் எதிர்பார்க்கும் பேச்சு, கலகலப்பு, அந்தரங்க உறவு எதிலும் என் கவனம் செல்லவில்லை. அப்படியே பேசினாலும், முழு ஈடுபாட்டுடன் செயல்பட மாட்டேன். இது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. அதை நினைத்து வருத்தப்படுகிறார். இரண்டொரு முறை என்னிடம் செல்லமாக கடிந்து கொண்டும் இருக்கிறார்.
அவர் என் மேலும், குடும்பத்தின் மேலும் காட்டும் அன்பிற்கும், அக்கறைக்கும் எப்படி கைமாறு செய்யப் போகிறோம் என்று சில சமயம் எண்ணுவது உண்டு. என் செயல் ஏன் இப்படி இருக்கிறது. இந்த போக்கு கடந்த ஐந்து வருடங்களாகத்தான்.
ஒருவேளை, எல்லா விதத்திலும் சவுகரியமான, செழிப்பான வாழ்வு கிடைத்த மிகழ்ச்சியும், பெருமையும், அதாவது, நிறைவான வாழ்க்கை கிடைத்துள்ளதால், ஒருவித செருக்கும், கர்வமும், என் ஆழ்மனதில் வந்து விட்டதோ என எண்ணுகிறேன்.
எனக்கு நன்றாக தெரிகிறது, தவறு என்மேல் தான் என்று. மேலும், எனக்கு சில வருடங்களாக, சின்ன சின்ன விஷயத்திற்கும் கோபமும், எரிச்சலும் வருகிறது. இது எதனால்? நான் அவரிடம், அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு அன்புடனும், அரவணைப்புடனும் நடந்து கொள்ள என்ன செய்ய வேண்டும். அதாவது, நான் எப்படி என்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறவும் அல்லது ஏதாவது மனோதத்துவ மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டுமா?
கணவரோ, புத்தகம் படிப்பது, பாட்டு கேட்பது, "டிவி' பார்ப்பது, விளையாட்டு, உரையாடல், அரட்டை என எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டுவார்; நானோ, சாப்பிடுவது, "டிவி' பார்ப்பது, தூங்குவது... அவ்வளவு தான். அவர், இரவில் தாமதமாக தூங்கி, அதிகாலை எழுந்து விடுவார்; நான் தாமதமாக தான் எழுவேன்.
முன்பெல்லாம், வெளியில் சென்று வீட்டிற்கு வந்தால், கலகலப்பாக இருப்பார்; இப்போது மிகவும் சோர்வாகவும், விரக்தியாகவும் இருக்கிறார். சமீப காலங்களில், காலையிலும், மாலையிலும், கோவில், நண்பர்கள் வீடு, சொந்தக்காரர் வீடு என போய் விட்டு, மிகவும் தாமதமாக வருகிறார். எனக்கு கொஞ்சம் கவலையாக இருக்கிறது. எங்களுக்குள் பிரிவினை வந்தது போல் உணர்கிறேன்.
பிள்ளைகள் கேட்டாலும், தக்க காரணம் சொல்வதில்லை. நானும் கேட்டுவிட் டேன். இந்த மனமாற்றமும், நெருக்கமின்மையும், ஆறு மாதமாகத் தான். பழையபடி கலகலப்பாக குடும்பம் மாற என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை கூறவும்.
— இப்படிக்கு, அன்பு சகோதரி.
அன்பு சகோதரிக்கு—
உன் கடிதம் கிடைத்தது. உன் பிரச்னைக்கு தீர்வு உன் கடிதத்திலேயே உள்ளது. சாவியை இடுப்பில் வைத்துக் கொண்டே தேடுகிறாய்.
சரி... விரிவாக பேசுவோமா?
உனக்கு வயது 52; உன் கணவருக்கு 60. இரண்டு பிள்ளைகள்; இரண்டு பேருக்கும் திருமணமாகி, வாழ்க்கையில் செட்டிலாகி விட்டனர். வாலிபத்தில்தான் சனியன் பிடித்த சிற்றின்பத்தை துய்த்து வந்தோம். இப்போது எல்லாம் முடிந்து, வாழ்க்கையின் கடைசியில் நிற்கிறோம். இந்த நேரத்தில், பாழாய் போன செக்ஸ் எதற்கு என நினைக்கிறாய். இது தவறு... ஓரவஞ்சனை... மாற்றாந்தாய் மனப்பான்மை!
நிறைய பெண்கள், "மெனோபாஸ் பீரியர்டு' முடிந்ததுமே, விரக்தியின் எல்லைக்கு போவர்; கண வனும், மனைவியை விட்டு விட்டு, வேறு பெண்களை நாடுவான் அல்லது 60 வயது நெருங்கிய கணவனுக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற உபாதைகள் இருக்கும். அதனால், அவன் தாம்பத்யத்தில் ஈடுபடும் தகுதியை இழந்திருப்பான்; மனைவி நெருங்கினாலும், விலகி ஓடுவான்.
உன்னுடைய கதை வேறு விதமாய் இருக்கிறது. அந்தரங்க உறவில் ஈடுபாடு <உள்ள கணவனுடன் ஒத்துழைக் காமல், தூங்கி தூங்கி வழிகிறாய். வயோதிகத்தில் தாம்பத்ய உறவு இருந்தால், அது, கணவன் - மனைவிக்கு இடையே அன்யோன்யத்தை அதிகரிக்கும். தம்பதிகள் இருவரும் நீண்ட நாள் வாழ <உதவும் காயகல்பம் ஆகி விடும்.
"என் கணவனுக்கு உதவத் தான் விரும்புகிறேன்; ஆனால், வறண்டு போய் இருக் கிறேனே...' என்கிறாயா? நோ ப்ராப்ளம்... பெண் மருத்துவரை அணுகி, "ஹார் மோனல்' இன்ஜக்ஷன் போட்டுக் கொள்ளலாம். தவிர, தாம்பத்யத்திற்கு உதவ, ஆயிரம் கிரீம்கள், லோஷன் கள் விற்கின்றன; அவற்றை பயன்படுத்தலாம். தாம்பத்யத்தில் வயோதிகப் பெண்கள், கணவனை திருப்திபடுத்த ஆயிரம் மாற்று வழிகள் இருக்கின்றன.
பகலில் 45 நிமிட குட்டித் தூக்கம் தூங்கு; இரவு தூக்கத்தை சுருக்கி, முறைப் படுத்து. வாலிபத்தில் நீங்கள் இருவரும் ஈடுபட்ட சிறப் பான தாம்பத்ய நாட்களை, மீண்டும் அசைபோட்டு உல்லாசியுங்கள்.
உன்னிடம் ஈகோ இல்லை... பதிலாக, "எல்லாம் முடிந்து விட்டது...' என்ற பூரித நிலை இருக்கிறது. அவருடன் சேர்ந்து புத்தகம் படி, பாட்டு கேள், டயட்டீஷியனை அணுகி, தூக்கமோ, மதமதப்போ ஏற்படுத்தாத உணவு அட்டவணையை போட்டுக் கொள். முழு உடல் பரிசோதனை செய்து கொள். உன்னுடைய அசாதாரண தூக்கத்துக்கு மருத்துவக் காரணம் இருந்தால் தெரிந்து விடும்.
ஆறு மாதங்களாக, உன் கணவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது என்கிறாய். சிவப்பு அபாய விளக்கு எரிகிறது... உஷாராகிக் கொள். பணக்காரர், ஆரோக்கியர், வேடிக்கை பேச்சில் சமர்த்தர், மனைவியின் நெருக்கம் கிடைக்காதவர் வழி தவற வாய்ப்புகள் அதிகம். மனைவியிடமிருந்து விலகி நிற்கும் இந்த வகை பணக்கார கிழவர் களை விழுங்கி ஏப்பமிட, "எலக்ட்ரா காம்ப்ளக்ஸ்' உள்ள, ஆக்டோபஸ் பெண்கள் ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர்.
தினசரி வாழ்க்கையில் ரோமாஞ்சனம் கொஞ்சம் பூசு. புதிய இடத்துக்கு தேனிலவு போ. ஆடம் பரம் இல்லாமல் உன்னை அலங்கரித்து கொள். கணவனுக்கு காதல் எஸ்.எம்.எஸ்., அனுப்பு. தலை கேசத்துக்கு டை அடித்துக்கொள். கை, கால் நகங்களை வெட்டி நகாசு செய். டென்டல் செக்கப் போ. சொத்தை பல் இருந்தால், சரி செய்.
மொத்தத்தில், கண வனுடன் ஒரு காதல் சதுரங்கம் ஆடு. அவனின் ஒரு மூவ்வுக்கு, நீ ஒரு மூவ் பண்ணு. உன் ராஜாவுக்கு நிரந்தர செக்வை! திண்டுக்கல்லில் மழை பொழிந்தால், சென்னையில் வானவில் தோன்றாது பெண்ணே... மாலை மஞ்சள் வெயில் மழை, உன் படுக்கை யறையில் அடித்து, கையடக்க வானவில்கள் பூக்கட்டும்!
— என்றென்றும் அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.
* * *