அமிதாப் சம்பளம் 140 கோடி ரூபாய்!
சினிமா பிரபலம் என்பதை முன்னிறுத்தி, சமீபகாலமாக பல நடிகர் - நடிகையர் சின்னத்திரையிலும் பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றனர். அந்த பட்டியலில், அமிதாப் பச்சனுக்கு முதல் இடம் உண்டு. "குரோர்பதி' நிகழ்ச்சி மூலம், தொலைக்காட்சியிலும் பிரபலமான அவர், இப்போது அந்நிகழ்ச்சியில், "கே.பி.சி. சீசன் 6' நிகழ்ச்சியைத் துவக்கியுள்ளார். இதை முழுவதும் நடத்த, அவருக்கு, 140 கோடி ரூபாய் சம்பளமாக தருகின்றனர். இது, இந்தியாவின் எந்தவொரு நடிகரும் வாங்காத சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.
— சினிமா பொன்னையா.
கிளாமருக்கு மாறும் மேக்னா ராஜ்!
"கிளாமராக நடிக்க மாட்டேன்...' என்று தொடர்ந்து பிடிவாதமாக இருந்த மேக்னா ராஜ், புதிய தெலுங்கு படமொன்றில், கிளாமராக நடிக்க பச்சை கொடி அசைத்துள்ளார். இதே வேகத்தில், தமிழிலும் ஆடை குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளவர், சில மேல்தட்டு ஹீரோ படங்களுக்கும், முண்டி அடித்து வருகிறார். வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்!
— எலீசா.
கமலுக்கு சர்ஜரி!
"விஸ்வரூபம்' படத்தை இயக்கி நடித்து, உலக சினிமாவையே, தன் பக்கம் திருப்பியுள்ள கமல், வரும் காலத்தில், மிக வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க போவதாக கூறுகிறார். குறிப்பாக, தான் எடுத்துக் கொள்ளும் கேரக்டருக்காக, தன் முகத்தை நிஜமாகவே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள வேண்டும் என்று டைரக்டர்கள் சொன்னாலும், மறுக்காமல் செய்து கொள்ளவிருப்பதாகவும் சொல்கிறார்.
— சி. பொ.,
பிகினிக்கு ரெடியாகும் அமலா!
"மைனா'வுக்கு பின், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க ஆசைப்பட்ட அமலாபால், கிளாமர் விஷயத்தில் அடக்கியே வாசித்தார். இதனால், கமர்ஷியல் கதைக்கு இவர் செட்டாக மாட்டார் என்று, அவரை சிலர் ஓரங்கட்டினர். இதை புரிந்து கொண்ட அமலாபால், இனியும் தாமதித்தால், இருக்கும் மார்க்கெட்டும் போய்விடும் என்று, பிகினி உடையணிந்து, தான் நடிக்க ரெடியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார். ஒவ்வொருவரும் தன் தன் பாட்டைத் தானே அனுபவிக்க வேண்டும்!
— எலீசா.
வாரி வழங்கும் காஜல் அகர்வால்!
தெலுங்கில், நாக சைதன்யாவுடன் நடித்து வரும் படத்தின் பாடல் காட்சிகளில், குட்டை பாவாடை அணிந்து, குத்தாட்டம் போட்டிருக்கிறார் காஜல் அகர்வால். அவரிடம், "மார்க்கெட் சீராக இருக்கும் போது, இந்த அளவுக்கு இறங்கி வந்து நடிக்க வேண்டுமா?' என்று கேட்டால், "நடிப்பிலும் சரி, கவர்ச்சியிலும் சரி, யாரும் என்னை குறை சொல்லக் கூடாது. அதனால் தான், கேட்காமலேயே வாரி வழங்குகிறேன்...' என்கிறார். அரைத்தவளுக்கு ஆட்டுக்கல்; சுட்டவளுக்கு தோசைக்கல்!
— எலீசா.
"மங்காத்தா' கெட்டப்பில் அஜித்!
"மங்காத்தா' படத்தில், பாதி நரைத்த தலைமுடி, தாடி என்று மாறுபட்ட கெட்டப்பில் நடித்த அஜீத், தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்கும் படத்திலும், அதே மாதிரியான கெட்டப்பில் நடிக்கிறார். கூடவே, ஒரு சோடாபுட்டி கண்ணாடி அணிந்துள்ளார். ஆனால், இதுவே படம் முழுக்க இல்லையாம். தனக்கே உரிய யூத்புல் கெட்டப்பிலும் நடித்து இருக்கிறார்.
— சி. பொ.,
விஜயகாந்த் படத்தில் ஷாருக்கான்!
"கஜினி'யைத் தொடர்ந்து, "போக்கிரி' பட இந்தி ரீ-மேக்கான, "வாண்டட்' மற்றும், "பந்தா பரமசிவம்' ரீ-மேக்கான, "ஹவுஸ் புல்' மற்றும் "சிறுத்தை' ரீ-மேக்கான, "ரவுடி ரத்தோர்' ஆகிய படங்கள், பாலிவுட்டில் மெகா வெற்றி பெற்றுள்ளன. அதனால், அடுத்து, விஜயகாந்த் தமிழில் நடித்த, "ரமணா' படமும் இந்தியில் ரீ-மேக் ஆகிறது. இதில், ஷாருக்கான் நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!