கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2012
00:00

கேள்வி: என் விஸ்டா சிஸ்டத்தில் வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 யை பதிந்து இயக்க முடியுமா?
என்.கே. ஜெயகாந்தன், திருப்பூர்.
பதில்: சரியான நேரத்தில் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ன், பிளாட் பார்ம் பிரிவியூவினை வெளியிட்டது. அப்போது மிகத் தெளிவாக, இந்த புரோகிராம் விண்டோஸ் 7 க்கு முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்காது என அறிவித்துள்ளது.எனவே விஸ்டாவில் பதித்து இயக்க முடியாது. முன்பு விண்டோஸ் எக்ஸ்பியில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என மைக்ரோசாப்ட் அறிவித்த போது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனால்,மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் பயன்பாட் டினை நவீனப்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக நின்றது. இப்போது அதே நிலையை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10க்கும் மேற்கொண்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் குரோம் போன்ற பிரவுசர்களுக்குத் தாவுவார்களே என்ற நிலைக்கெல்லாம் மைக்ரோசாப்ட் அஞ்சவே இல்லை.

கேள்வி: என்னுடைய ஹார்ட் டிஸ்க் ஏறத்தாழ முழுவதும் பயன்படுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தி அடிக்கடி வருகிறது. நான் அந்த அளவிற்கு புதிய புரோகிராம்கள் எதனையும் பதிக்கவில்லை. சிலவற்றை அழித்து இடம் காலியாகச் செய்த பின்னரும் அதே செய்தி கிடைக்கிறது. இதற்கு என்ன காரணம்?
என்.எஸ். ஸ்ரீமகாதேவன், கோவை.
பதில்: ஹார்ட் டிஸ்க் முழுவதும் பைல்கள் பதியப்பட்டு, ஏறத்தாழ இடம் இல்லாத நிலை ஏற்பட்டால், உங்கள் கம்ப்யூட்டருக்கு எல்லாவிதப் பிரச்னையும் ஏற்படும். ஏன், கம்ப்யூட்டர் இயக்கமே நின்று போகலாம். உங்கள் விஷயத்தில் இதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.
1. டிஸ்க் முழுவதும் பைல்கள்: ஏறத்தாழ முழுமை அடையும் அளவிற்குப் பைல்கள் இருக்கலாம். தேவையற்ற புரோகிராம்கள், பைல்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும். அடிக்கடி பயன்படுத்தாத பைல்களை, இணைத்துப் பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றி, கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் ட்ரைவை சிறிது சுதந்திரமாக இயக்கவிடலாம்.
2. வைரஸ் இருக்கலாம்: கம்ப்யூட்டரைப் பாதிக்கும் வைரஸ் புரோகிராம்கள் இது போல செய்தி தரலாம். செய்தியுடன், இந்த இடத்தில் கிளிக் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் கிளீன் செய்யப்படும் என ஏதேனும் லிங்க் ஒன்றைத் தரலாம். அந்த லிங்க்கில் கிளிக் செய்தால், மேலும் பல வைரஸ்கள் கம்ப்யூட்டரில் இறங்கலாம்.
3. ஹார்ட் ட்ரைவ் : சேதமாகிறது: ஹார்ட் ட்ரைவ் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப் படுவதால், அதன் வாழ்நாள் பயன்பாடு தன்மை குறையலாம். இறுதியில் இயங்காமல் நின்றுவிடலாம். தன் செயல் தன்மையை இழக்கும் ஹார்ட் டிஸ்க்குகள், இது போல தவறான செய்தியை அனுப்பலாம். ஹார்ட் டிஸ்க் ஒன்று அதிக பட்சம் ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் மட்டுமே நன்றாகச் செயல்படும். பத்து ஆண்டுகளுக்கு மேல் செயல்படுவது என்பது அதிர்ஷ்டமே. இதனைக் கணக்கிட்டு பாதுகாப்பான நடவடிக்கை எடுப்பதே நல்லது.

கேள்வி: ஜிமெயில் அக்கவுண்ட்டில், மொத்தமாக குறிப்பிட்ட மெயில்களை அழிக்க இயலவில்லை. நூறு நூறாகத் தேர்ந்தெடுத்தே அழிக்க முடிகிறது. எனக்கு 2010க்கு முந்தைய அனைத்து மெயில்களையும் அழிக்க வேண்டும் எனில் என்ன செய்திடலாம்? வழி உள்ளதா?
என். செல்வராணி, கல்லுப்பட்டி.
பதில்: மிக எளிதாக அழிக்கலாம். இதற்கான வழி பில்டர் (filter) அமைப்பதில் உள்ளது. கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. உங்கள் பிரவுசரைத் திறந்து ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழையவும்.
2. மேலாக உள்ள Search the Web பட்டனை அடுத்துக் கிடைக்கும் Create a filter என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு உள்ள “Has the words” என்ற பீல்டில் before:2010/01/01 என டைப் செய்திடவும். இதைப் போல எந்த நாளையும் குறிப்பிட்டு அமைக்கலாம். ஆனால், பார்மட் YYYY/MM/DD என்ற வகையில் இருக்க வேண்டும்.
4. அடுத்து Next என்பதில் கிளிக் செய்திடுக.
5.தொடர்ந்து Delete it என்ற பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்துக. அடுத்து Also apply filter to ### conversations below. என்ற பாக்ஸிலும் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். மெயில்களை இன்பாக்ஸில் இருந்து நீக்கிவிடும், அதே நேரத்தில், அவற்றை எங்காவது வைத்துக் கொண்டால் தேவலாம் என்று நீங்கள் விரும்பினால்,முந்தைய பாக்ஸுக்குப் பதிலாக, Skip the inbox (Archive it) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
6. இறுதியாக, Create Filter என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் உருவாக்கிய பில்டருக்கேற்றபடி எத்தனை மெயில்கள் என்பதைப் பொறுத்து, அவற்றை நீக்குவதற்கான நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.
ஒரு சின்ன குறிப்பு: ஜிமெயில் அக்கவுண்ட்டில் மெயில்களை வைத்துக் கொள்ள 7 ஜிபி அளவில் இடம் தரப்படுகிறது. எனவே இந்த அளவை நெருங்கினாலே, மெயில்களை அழிக்கவும். இல்லை எனில், வைத்துக் கொள்ளலாமே. அப்படியும் நீக்க வேண்டும் என எண்ணினால், அதனை archiveக்குக் கொண்டு சென்று விடலாம்.

கேள்வி: வேர்ட் புரோகிராமில் நான் அதிகமாக டேபிள்களைப் பயன்படுத்துகிறேன். இவற்றில் செல் ஒன்றின் அகலத்தை எப்படி மெனு மூலம் அமைக்கலாம்? மவுஸ் மூலம் அமைக்கையில் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன.
தி. செல்வநாயகி, தாம்பரம்.
பதில்: மெனு மூலம் அமைப்பதும் எளிதுதான். இந்த வகையில் நம் தேவைப்படி சரியான அளவில் அமைக்க முடியும். நீங்கள் வேர்ட் 2000 அல்லது வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்க்கண்டவாறு செட் செய்திடவும்.
1. எந்த நெட்டு வரிசை அகலத்தினை மாற்ற வேண்டுமோ, அதனை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. இனி Table மெனுவில் இருந்து Table Properties தேர்ந்தெடுக்கவும்.
3. இதில் Preferred Width control என்பதன் அருகில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், வரிசை எவ்வளவு அகலத்தில் இருக்க வேண்டும் என்பதனை அமைப்பதற்கு, கீழ் விரி மெனுவில் அளவு காட்டப்படும். இதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
4.பின்னர், Previous Column / Next Column என்பவற்றைப் பயன்படுத்தி அடுத்தடுத்த வரிசைகளின் அகலத்தையும் அமைக்கலாம்.
5. இதே போலத் தேவையான வரிசைகளுக்கு அகலத்தினை அமைத்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. எந்த நெட்டு வரிசை அகலத்தினை மாற்ற வேண்டுமோ, அதனை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Display Layout டேப் தேர்ந்தெடுக்கவும்.
3. டேபிள் குரூப்பில் Properties ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் Table Properties டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4.இதில் Column டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
5. Preferred Width பயன்படுத்தி, வரிசையின் அகலத்தை அமைக்கவும்.
6. இதே போல, அடுத்தடுத்த வரிசைகளில் அமைக்க Previous Column / Next Column ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.
7. அனைத்தும் பயன்படுத்திய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: பிகாசா வெப் ஆல்பம் குறித்து கொஞ்சம் விளக்கவும். இதில் போட்டோக்களைப் பதிந்து சேமித்து வைத்தால், பாதுகாப்பாக இருக்குமா?
தா. பிரகாஷ், கல்லுப்பட்டி.
பதில்: Picasa Web Albums என அழைக்கப்படும் இந்த தளம், கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்குத் தரும் அருமையான பல வசதிகளில் ஒன்றாகும். இதில் பதிந்து வைக்கப்படும் போட்டோக்களை, நீங்கள் அனுமதிக்கும் பட்சத்தில், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். போட்டோ எடிட்டிங், ஆல்பம் அமைத்தல், வீடியோ ஸ்டோரேஜ், போட்டோக்களை நிர்வகிக்க ஒரு டெஸ்க் டாப் அப்ளிகேஷன் ஆகியவை கிடைக்கின்றன. 2,048x2,048 என்ற பிக்ஸெல் அளவிலான டிஜிட்டல் போட்டோ பைல்களை எவ்வளவு வேண்டுமானாலும் இதில் ஸ்டோர் செய்திடலாம். இதற்கு மேலான பிக்ஸெல் எனில், 1 ஜிபி அளவில் மட்டுமே ஸ்டோர் செய்திட முடியும். மேலும் இடம் வேண்டும் எனில், கட்டணம் கட்டிப் பெற வேண்டும். 25 ஜிபிக்கு 2.50 டாலர் செலுத்த வேண்டும். மற்ற போட்டோ சேமிப்பு தளங்கள் போல் இல்லாமல், இந்த தளத்தில் பல பார்மட்களில் உள்ள போட்டோக்களை சேவ் செய்திடலாம். பாதுகாப்பாக இருக் கும். முழு ஆல்பத்தையும் மீண்டும் உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திட முடியாது.

கேள்வி: பெரும்பாலான தளங்களில் இருந்து படங்களை டவுண்லோட் செய்திடுகையில், அவை பி.எம்.பி. பைலாகவே கிடைக்கின்றன. இவற்றை ஜேபெக் பைலாக டவுண்லோட் செய்திட என்ன செய்திட வேண்டும்? சில படங்களை டவுண்லோட் செய்திட முடியவில்லை. இவற்றை எப்படி ஜேபெக் பார்மட்டில் காப்பி செய்திடலாம்?
சி. ராணி கமலேஷ், செங்கோட்டை.
பதில்: தாங்கள் அப்லோட் செய்திடும் படங்கள் நல்ல தன்மையுடன் காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக, பி.எம்.பி. பார்மட்டை இணைய தள அமைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். இவற்றை ஜேபெக் பார்மட்டில் நாம் டவுண்லோட் செய்திடலாம். படத்தின் மீதாக, ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Save As என்பதில் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் இதனை சேவ் செய்திட எக்ஸ்புளோரர் விண்டோ கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் ட்ரைவ் மற்றும் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். இனி, பைல் பெயர் புதியதாகத் தர விரும்பினால் பெயரைத் தரலாம். அதன் பின்னர், பைல் பார்மட் உள்ள இடத்தில் உள்ள அம்புக் குறியினை கிளிக் செய்தால், அனைத்து பார்மட்களும் காட்டப்படும். இதில் ஜேபெக் பைல் தேர்ந்தெடுத்து Save என்பதில் கிளிக் செய்திடலாம். காப்பி செய்திட முடியாதபடி அமைக்கப்பட்ட போட்டோக்கள் இருந்தால், அவை திரையில் நன்றாக, முழுமையாகத் தெரியும்படி வைத்துக் கொண்டு பிரிண்ட் ஸ்கிரீன் (Print screen) பட்டனை அழுத்தவும். பின்னர் பெயின்ட் அல்லது வேறு போட்டோ எடிட்டிங் புரோகிராமினைத் திறந்து, எடிட் பட்டனை அழுத்தி, பேஸ்ட் தேர்ந்தெடுக்கவும். இப்போது முழுப் பக்கமும் காட்டப்படும். எடிட்டிங் டூலைப் பயன்படுத்தி, போட்டோவினை மட்டும் கட்டம் கட்டித் தேர்ந்தெடுத்து,காப்பி செய்து, மீண்டும் கிளிக் செய்து பேஸ்ட் செய்திடவும். இப்போது போட்டோ மட்டும் கிடைக்கும். இனி பார்மட் மற்றும் சேவ் செய்திட வேண்டிய போல்டர் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரிசெல்வம் - tiruvarur,இந்தியா
19-ஜூலை-201222:47:32 IST Report Abuse
திரிசெல்வம் என்னுடைய கம்ப்யூட்டர் இல் Avg Antivirus பயன்படுத்தி வருகிறேன் முதலில் அது இன்டர்நெட் இல் அனைத்து இடங்களிலும் கிரீன் சிகனல் வரும் இப்போது அது கேள்வி குறி வருகிறது (were are the web page safety ரைடிங்) அது மீணடும் கிரீன் சிகனல் வர என்ன செய்ய வேண்டும். இதற்கு சரியான பதில் கொடுக்கயும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X