எக்ஸெல் தொகுப்பினை வசமாக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
00:00

வேர்ட் தொகுப்பினை நம் வசமாக்க என்ற கட்டுரையைப் படித்த பல வாசகர்கள், எக்ஸெல் தொகுப்பில் இது போல மாறா நிலையில் உள்ள அம்சங்களை மாற்றி அமைக்கலாமே! அவற்றில் முக்கியமானவற்றைப் பட்டியலிடுங்களேன் என்று தொலைபேசி வழியாகவும், கடிதங்கள் மூலமாகவும் கேட்டுள்ளனர். நிச்சயமாக, எக்ஸெல் தொகுப்பிலும் சில மாறா நிலை அம்சங்களை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்து வைத்துக் கொள்ளலாம். இதனால், எக்ஸெல் புரோகிராமில் செயல்படுவது முற்றிலும் நம்முடைய விருப்பப்படியே இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். நம் விருப்பப்படி ஒவ்வொரு எக்ஸெல் ஒர்க்புக்கினையும் மாற்ற வேண்டியதில்லை. நாமே நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கும் மாற்றங்கள் படி, ஒர்க் புக்குகள் அமையும்.
1. பைல் அமையும் இடம்: பல பயனாளர்கள், அவர்களின் பைல்கள் சென்றடையும் இடம் My Documents ஆக இருப்பதனை ஏற்றுக் கொள்வதில்லை. இதனை மாற்றி, நீங்கள் விரும்பும் போல்டரிலேயே, பைல்களைப் பதியும்படி செய்து கொள்ளலாம்.
File டேப் கிளிக் செய்து Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2007 புரோகிராமில், Office பட்டன் கிளிக் செய்து பின்னர் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், டூல்ஸ் மெனு சென்று ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இடது பக்க பிரிவில், Save தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2003ல் General டேப் கிளிக் செய்திடவும். பின்னர், Save Documents செக்ஷனில் Default File Location பீல்டில் பைல் எங்கு சென்று சேவ் செய்யப்பட வேண்டுமோ, அதற்கேற்ப path ஐ மாற்றவும். அல்லது அந்த ட்ரைவ் மற்றும் போல்டர் பிரவுஸ் செய்து காட்டி அமைக்கவும். இவை அனைத்தும் செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
2. ஷீட்களின் எண்ணிக்கை: ஒவ்வொரு புதிய எக்ஸெல் ஒர்க் புக்கும் மூன்று ஷீட்களுடன் கிடைக்கும். இதன் பின்னர், நீங்கள் ஒர்க்ஷீட்டுகளை இணைக்கலாம் அல்லது நீக்கலாம். அதே நேரத்தில், மாறா நிலையில் உள்ள ஒர்க்ஷீட்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம்.
File டேப் கிளிக் செய்து, பின்னர் ஹெல்ப் பகுதியில் Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007ல், Office பட்டன் கிளிக் செய்து, அதன் பின்னர், Excel Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல், Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். இடது பிரிவில் General கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல் ஜெனரல் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு When Creating New Workbooks என்ற பிரிவில், எத்தனை ஷீட்கள் மாறா நிலையில் அமைக்கப்பட வேண்டுமோ, அந்த எண்ணை Include This Many Sheets என்ற பீல்டில் அமைக்கவும். எக்ஸெல் 2003ல், Sheets In New Workbook என்பதைப் பயன்படுத்தி இந்த எண்ணை அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
3. குறிப்பிட்ட ஒர்க்புக்குடன் திறக்க: எக்ஸெல் புரோகிராம் திறக்கும்போது, சிலர் ஏதேனும் ஒரு ஒர்க்புக்கினை எப்போதும் திறந்து அதிலிருந்து தங்கள் பணியினைத் தொடங்குவார்கள். இவர்களுக்கு எக்ஸெல் புரோகிராம் திறக்கும்போது அந்த குறிப்பிட்ட ஒர்க்புக்குடன் திறந்தால், பல வேலைகள் மிச்சமாகும். இதனையும் நாம் செட் செய்துவிடலாம். அந்த குறிப்பிட்ட ஒர்க்புக்கினை XLStart போல்டரில் சேவ் செய்து விட்டால், எக்ஸெல் புரோகிராமினைத் திறக்கையில், அந்த ஒர்க்புக்குடனே திறக்கப்படும். நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில், இந்த போல்டரைக் கீழே குறிப்பிட்ட வகையில் காணலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி: C:\Documents and Settings\user name\Application Data\Microsoft\Excel\XLStart
விண்டோஸ் விஸ்டா: C:\Users\user name\AppData\Local\Microsoft\Excel\XLStart
விண்டோஸ் 7: C:\Program Files\Microsoft Office\Office\XLStart எப்போதும் ஒரு பைலை சேவ் செய்வது போல, அதனை இந்த XLStart போல்டரில் சேவ் செய்துவிடவும்.
4. கர்சர் செல்லும் முறை: நீங்கள் என்டர் தட்டினால், எக்ஸெல் புரோகிராமில் கர்சர் கீழாக ஒரு செல் செல்லும். ஆனால், நீங்கள் வலது பக்கம் உள்ள செல்லில் டேட்டா அமைக்க விரும்பினால், என்டர் தட்டியவுடன், வலது பக்கம் உள்ள செல்லுக்குச் செல்லும் வகையில் அமைக்கலாம்.
File டேப் கிளிக் செய்து, பின்னர் ஹெல்ப் பகுதியில் Options கிளிக் செய்திடவும்.
எக்ஸெல் 2007ல், Office பட்டன் கிளிக் செய்து, அதன் பின்னர், Excel Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல், Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். இடது பிரிவில் Advanced கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல் Edit டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். Editing Options பிரிவில் Direction என்ற கீழ்விரி மெனுவில், After Pressing Enter Move Selection என்பதன் கீழ் Right என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு எந்த திசையில் வேண்டுமானாலும் கர்சர் செல்லும்படி அமைக்கலாம். அதற்கென Right, Left, Up, மற்றும் Down ஆக நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். எக்ஸெல் 2003ல் இது Move Selection After Enter எனக் கொடுக்கப்பட்டிருக்கும். கர்சர் நகர்த்தப்படக் கூடாது என எண்ணினால், இங்கு ஆப்ஷன் கட்டத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். இவ்வளவும் செட் செய்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
5. எழுத்தும் அளவும்: ஒவ்வொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் தாங்கள் விரும்பும் எழுத்திலும், குறிப்பிட்ட சைஸிலும் எக்ஸெல் ஒர்க்புக்கை அமைக்க விரும்புவார்கள். இதற்கென எக்ஸெல் புரோகிராமினைத் திறந்த பின்னர், அதற்கு மாற்றிக் கொள்வார்கள். அப்படி மாறா நிலையில் திறக்கப்படாமல், நீங்கள் விரும்பும் எழுத்து வகையினையும் அதன் அளவையும் மாறா நிலையில் இருக்குமாறு மாற்றி அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும்.
File டேப் கிளிக் செய்து Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2007 புரோகிராமில், Office பட்டன் கிளிக் செய்து பின்னர் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், Tools மெனு சென்று Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இடது பக்க பிரிவில், Save தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2003ல் General டேப் கிளிக் செய்திடவும். When Creating New Workbooks என்ற பிரிவில், Use This Font என்பதில், நீங்கள் விரும்பும் எழுத்து வகையினையும், Font Size options என்பதில் அந்த எழுத்து என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதனையும் நிர்ணயம் செய்திடவும். இனி ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
6. டெம்ப்ளேட் மாற்றம்: வேர்ட் புரோகிராம் போலவே, எக்ஸெல் புரோகிராமும், ஒவ்வொரு புதிய ஒர்க்புக்கினை ஒரு டெம்ப்ளேட் பைல் மீது தொடங்கி உருவாக்குகிறது. இந்த பைல் பெயர் Book.xltx. இந்த பைலில் மாற்றங்கள் செய்வதன் மூலம், நீங்கள் விரும்பும் வகையில் அடிப்படை பைலை அமைத்துக் கொள்ளலாம். டெம்ப்ளேட் பைலில் மாற்றங்களை மேற்கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு வழிகளில் ஒன்றைப் பின்பற்றலாம். டெம்ப்ளேட் பைலை உங்களுக்கேற்றபடி மாற்றங்களை மேற்கொண்டால், அதனைத் திறந்தால், மாற்றங்களுடன் ஒர்க்புக் அமைக்கலாம். மாற்றப்படாமல் இருந்தால், காலியாக உள்ள ஒர்க்புக்கிலிருந்து (blank workbook) பணியைத் தொடங்கலாம்.
டெம்ப்ளேட் பைல் அளவிலேயே மாற்றங்களை மேற்கொண்டு விட்டால், அதனை யே டெம்ப்ளேட் பைலாக சேவ் செய்துவிடவும். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல் படவும். பைல் டேப் கிளிக் செய்து அதில் Save As என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2007ல் ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து Save As தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2003ல், பைல் மெனுவில் இருந்து Save As தேர்ந்தெடுக்கவும். அடுத்து, Save As Type என்பதனை கீழ்விரி மெனுவிலிருந்து தேர்ந்தெடுக்கவும். இதில் எக்ஸெல் 2003ல், டெம்ப்ளேட் பைல் .xlt என்பதைப் பைல் துணைப் பெயராகக் கொண்டிருக்கும். Save In கண்ட்ரோல் பயன்படுத்தி XLStart போல்டரைக் கண்டறியவும். பின்னர் Save அழுத்தினால், மாற்றங்கள் அனைத்தும் சேவ் செய்யப்படும். XLStart போல்டரைக் காண இயலாவிட்டால், எக்ஸெல் தொகுப்பின் விசுவல் பேசிக் எடிட்டர் மூலம் இதனைக் கண்டறிந்து பெறலாம். இதற்கு Alt + F11 கீகளை அழுத்தி, எக்ஸெல் விசுவல் பேசிக் எடிட்டரைத் திறக்கவும். Immediate விண்டோ கிடைக்கவில்லை என்றால், Ctrl + G கீகளை அழுத்தவும். Immediate விண்டோவில் application.StartupPath என டைப் செய்து என்டர் அழுத்தவும். ஒர்க் ஷீட் லெவலில் மாற்றங்களை ஏற்படுத்த விரும் பினால், அவற்றை ஏற்படுத்தி, ஒர்க்ஷீட்டினை Sheet.xltx என்ற பெயரில் சேவ் செய்திடவும். இந்த பைலை கிரிட்லைன் போன்றவற்றை மாற்றுவதற்கும் பயன்படுத்தலாம். இன்னும் சில மாற்றங்கள் குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthik - ஊட்டி,இந்தியா
30-ஜூலை-201213:48:25 IST Report Abuse
karthik வணக்கம் ஊட்யியல் இருந்து கார்த்திகேயன் எழுதுகிறேன். நான் கம்ப்யூட்டர் மலர் பல ஆண்டுகாலம் படித்து வருகிறேன். இவை மிக சிறந்ததாக இருக்கின்றது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X