கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
00:00

கேள்வி: பிளாட்டர் என அழைக்கப்படுவது எது? மதர்போர்டில் எங்கு அமைந்துள்ளது?
சி. சல்மா, திண்டிவனம்.

பதில்: platter எனப்படுபவை ஹார்ட் டிஸ்க்கில் அமைந்துள்ளவை. இதில் தான் அனைத்து டேட்டாக்களும் பதியப்படுகின்றன. வட்ட வடிவத்தில் மெல்லிதாக அமைந்திருக்கும் இந்த வட்ட தகடுகள் வேகமாகச் சுழற்றப்பட்டு ரீட்/ரைட் ஹெட் எனப்படும் ஹேண்டில் மூலம் டேட்டா அதில் எழுதப்படும். இவை நிமிடத்திற்கு 5,000 முதல் 20,000 சுழற்சிகள் அளவில் சுழலும். இவை ஹார்ட் ட்ரைவின் மெட்டல் டப்பாவிற்குள்ளாக இருக்கும். ஒரு ஹார்ட் ட்ரைவில் அதன் கொள்ளளவினைப் பொறுத்து பல பிளாட்டர்கள் வைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பியில்,இன்டர்நெட் எக்ஸ்புளோரைத் திறந்தவுடனேயே அது மைக்ரோசாப்ட் வெப் தளத்தில் நுழைகிறது. ஏன்? எனக்கு வேண்டிய முகவரியை நான் டைப் செய்திடும் வரை பிரவுசர் பொறுக்காதா? இதனை மாற்ற முடியுமா?
என்.நிரஞ்சன், 7ஆம் வகுப்பு மாணவர், உசிலம்பட்டி.
பதில்
: அதான? நாம் கட்டளை கொடுக்காமல், தானாக எப்படி தளம் திறக்கப்படலாம்? இதனை மாற்றுவோமா? இன்டர்நெட் எக்ஸ்புளோரை திறந்து கொள்ளுங்கள். Tools=>Internet options ஆகியவற்றை கிளிக் செய்யுங்கள். Use Blank என்பதை கிளிக் செய்து Ok கிளிக் சொல்லுங்கள். இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இயக்கும்போதெல்லாம் அது பேசாமல் நிற்கும். எந்தத் தளத்தையும் உங்கள் முகவரி கிடைக்காமல் திறக்காது. சரியா?!

கேள்வி: சில இணைய தளங்களைத் திறக்க முயற்சிக்கையில் 401 Unauthorized Request என்று ஒரு எர்ரர் மெசேஜ் காட்டப்பட்டு மேற்கொண்டு அந்த தளம் திறக்கப்படாமல் நிற்கிறது. ஏன்?அந்த தள சர்வரில் பிரச்னையாக இருக்குமோ?
என்.கமலேஷ் குமார், நத்தம்.
பதில்:
நீங்கள் பார்க்க விரும்பும் தளத்திற்கு உங்களுக்கு அனுமதி இல்லை. அதனைப் பார்க்க முயன்றால் இது போல் தான் செய்தி கிடைக்கும். நீங்கள் அனுமதிக்கப்பட முடியாத இணைய தளத்தை நீங்கள் பெற முயன்றால் இந்த பிழைச் செய்தி கிடைக்கும். அல்லது இந்த தளத்திற்குள் நுழைய ஒரு பாஸ்வேர்ட் தேவைப்படலாம். இந்த தளத்தினை உங்கள் சர்வரே உங்களுக்குக் கிடைக்காத வகையில் சில வரையறைகளை வகுத்திருக்கலாம். அதன் காரணமாகவும் இந்த செய்தி கிடைக்கும். சரி என்ன செய்யலாம்? எனக் கேட்கிறீர்களா? இந்த தளத்தை அணுகும் முயற்சியைக் கைவிட வேண்டியதுதான்.

கேள்வி: நான் தயாரித்த டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்கையில், ஒவ்வொரு பக்கத்திலும் கீழாக என் பெயர் அச்சாக வேண்டும். அதற்கான செட்டிங் எது?
நீ. கமலா, மதுரை.
பதில்
: எம்எஸ் வேர்டில் View => Header and Footer கட்டளையைக் கொடுங்கள். ஹெடர் தெரியும். அங்குள்ள டூல்பாக்ஸில் உள்ள Switch between Header and Footer டூலைக் கிளிக் செய்து புட்டருக்கு மாறிக் கொள்ளுங்கள். உங்கள் பெயரை டைப் செய்து கொள்ளுங்கள். Close என்ற டூல் பட்டனை அழுத்துங்கள். இனி டாகுமெண்ட்டை அச்சடிக்கையில் உங்கள் பெயர் தானாக அச்சடிக்கப்படும். இதனை தனியொரு பாண்ட் மற்றும் நீங்கள் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். அமைத்தபடி அச்சாகும்.

கேள்வி: ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் மற்றும் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் என்று கூறுகிறீர்கள். இரண்டில் எது சிறந்தது? ஏன்?
தி. சஹானா, சென்னை.
பதில்:
கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி, போன்கள், ரிமோட் சாதனங்கள் ஆகியவற்றில் இந்த டச் ஸ்கிரீன்கள், இடுகை சாதனங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பிள் ஐபோன் வரும் முன் ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் வகைதான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. காற்று குமிழ்கள் இடையே இருக்க, உணர்வினைக் கடத்தும் தகடுகள் இணைக்கப்படும்.
நாம் தொடும்போது அழுத்தம் பெறப்பட்டு சர்க்யூட் இணைக்கப்படும். இது குறிப்பிட்ட சிக்னலை சாதனத்திற்கு அனுப்பும். இது விலை மலிவானது. கையுறை அணிந்தும் ஸ்டைலஸ் அல்லது அது போன்ற சாதனம் கொண்டும் இதனைக் கையாளலாம்.
ஆனால், இவை ஒரு முனையை மட்டுமே எடுத்துக் காட்ட முடியும். எனவே விரல்களைக் குவித்து பிஞ்ச் செய்து விரிக்க முடியாது. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. கிளாஸ் கொண்டு அமைக்கப்படுகிறது. மிக மெல்லிய அளவில் மின்சக்தி திரையின் நான்கு முனைகளுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். தொடு உணர்வு ஏற்படுத்தப்படுகையில், வோல்டேஜ் குறைந்து, அந்த அளவில் சிக்னல் அனுப்பப்படும். பல்வேறு முனைகளின் வழி சிக்னல்களை அனுப்ப இயலும் என்பதால், திரையின் மீது தேய்த்து பயன்படுத்துதல், விரல்களைக் குவித்து சிக்னல்களை அனுப்புதல் ஆகியனவற்றை மேற்கொள்ளலாம். இதன் விலை சற்று அதிகம்.

கேள்வி: நான் ஒரு பள்ளி ஆசிரியை. என் மாணவர்களுக்கு அறிஞர்கள் கூறியவற்றை எடுத்துக்கூறி அறிவுரை கூற விரும்புகிறேன். மேற்கோள் உரைகளாக இவை எந்த தளத்தில் கிடைக்கும்?
என். ஈஸ்வரி, மேலூர்.
பதில்
: கூகுள் சர்ச் இஞ்சின் சென்று, தேவையான பொருள் குறித்த மேற்கோள் தேடினால் கிடைக்குமே! இருப்பினும் மேற்கோள் உரைகள் நிறைந்ததாக ஓர் இணைய தளம் உள்ளது. இதன் முகவரி http://www.quotealbum.com/. இந்த தளத்தில் நமக்கு வேண்டிய பொன்மொழிகளை பல வகைகளில் தேடிப் பெறும் வசதிகள் தரப்பட்டுள்ளன. அறிஞர்கள், குறிப்பிட்ட சொற்கள், உரைகள், நம் தேவைகள் எனப் பலவகைகளில் தேடி அறியும் வகையில் பொன்மொழிகள் கிடைக்கின்றன. நிச்சயம் நீங்கள் மகிழ்ச்சி அடைந்து உங்கள் மாணவர்களையும் பயன் பெறச் செய்வீர்கள்.

கேள்வி: மினி கால்குலேட்டர் குறித்த தகவல் பயன் உள்ளதாய் இருந்தது. இணையத்திலேயே இயங்கும் கூடுதல் வசதிகள் கொண்ட சயின்டிபிக் கால்குலேட்டர் ஒன்றைக் கூறவும்.
என்.ஜஸ்டின் செல்வராஜ், தேவாரம்.
பதில்
: http://www. ecalc.com/ என்ற தளத்தில் கிடைக்கும் கால்குலேட்டர் உங்கள் தேவைகளை நிறைவேற்றும். மிகத் தெளிவான நல்ல கால்குலேட்டர் பல வசதிகளுடன் அமைந்துள்ளது. இதில் சைட் பார் ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் வெவ்வேறு அலகு இணைகளுக்கிடையேயான மாற்று உடனுடக்குடன் தரப்படுகிறது. செல்சியஸ் கொடுத்தால் பாரன்ஹீட் மற்றும் வேறு இரண்டு அலகுகளைக் காட்டுகிறது. 32 அடி எனக் கொடுத்தால், எத்தனை மிமீ, செ.மீ., கடல் மைல் என ஒரு பட்டியலே தருகிறது. இந்த சைட் பார் மிக மிக பயனுள்ளதாய் இருக்கிறது. அவசியம் இதனை புக் மார்க் செய்து வைத்து பயன்படுத்தலாம்.

கேள்வி: இன்டர்நெட் இணைப்பினைப் பெற்றுத் தருவதில் ஹப் எங்கு இடம் பெறுகிறது?
சா. உத்தமராஜன், ஒத்தக்கடை.
பதில்
: ஹப் என்பது கம்ப்யூட்டருடன் பயன்படுத்தக் கூடிய ஒரு மின்னணு துணை சாதனம். கீ போர்டு, மவுஸ், டிஜிட்டல் கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்களை இதன் மூலம் கம்ப்யூட்டருடன் இணைக்கலாம். இந்த ஹப்பினை, கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துவிட்டு, பின்னர், ஹப்பில் உள்ள போர்ட்களில், மேலே குறிப்பிட்ட சாதனங்களை இணைக்கலாம். இன்டர்நெட் இணைப்பில் மட்டும் பயன்படும் சாதனம் அல்ல இது. ஒரு மின் ப்ளக்கிலிருந்து இணைப்பு எடுத்து, அதனை பல ப்ளக்குகள் அடங்கிய ஒரு போர்டுடன் இணைத்துப் பயன்படுத்துவதனைப் போன்றது இது.

கேள்வி: வேர்ட் புரோகிராமில், காப்பி செய்த டெக்ஸ்ட்டை டாகுமெண்ட்டில் ஒட்ட, இன்ஸெர்ட் கீயினை எப்படிப் பயன்படுத்துவது? என் கீ போர்டில் ஒட்ட மறுக்கிறது?
என். ஜகனாதன், கோவை.
பதில்
: மெனு பாரில் Tools கிளிக் செய்து பின் விரியும் மெனுவில் இறுதியாக உள்ள Options என்பதனைக் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் பல டேப்களில் Edit டேபினைக் கிளிக் செய்தால் பல செக் பாக்ஸ் கிடைக்கும். அதில் “Use the INS key for paste” என்ற செக் பாக்ஸ் முன் டிக் அடையாளத்தை ஏற்படுத்திப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஏதாவது காப்பி அல்லது கட் செய்த டெக்ஸ்ட் அல்லது படத்தை ஒட்ட வேண்டுமானால், இன்ஸெர்ட் கீயைக் கிளிக் செய்தால் போதும். கிளிப் போர்டில் உள்ள படம் அல்லது டெக்ஸ்ட் ஒட்டப்படும்.

கேள்வி: டாகுமெண்ட்டில் டேபிள் அமைக்கையில் அது இடது புறம் அமைகிறது. இதனை எப்படி டாகுமெண்ட் பக்கத்தின் நடுவே அமைக்கலாம்?
கரு. அழகப்பன், பள்ளத்தூர்.
பதில்:
நடுவே வைத்திட விரும்பும் டேபிளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கிளிக் செய்திடவும். Table மெனு சென்று Select என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதிலிருந்து கிடைக்கும் மெனுவில் Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது டேபிளை செலக்ட் செய்திருக்கும். அடுத்து Ctrl+E கீகளை அழுத்தவும். டேபிள் உங்கள் டாகுமெண்ட்டில் நடுவில் சென்று அமர்ந்துவிடும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X