மினி தொடர் - வீரம் தந்த சாது (1)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 ஆக
2012
00:00

ஒரு ஊரில் வீரன் என்ற வியாபாரி இருந்தான். அவன் வியாபாரத்தில் கஷ்டப்பட்டு, இருந்த கைப்பொருளை எல்லாம் இழந்து, ஓட்டாண்டி ஆகிவிட்டான். எனவே, அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல், தன் மனைவி மற்றும் மூன்று குழந்தை களுடன், வேறொரு ஊரை நோக்கிச் சென்றான்.
வழியில் ஒரு சாது அவனைக் கண்டு, ""நீ வீரன் தானே? நீ நல்வாழ்வு வாழ்ந்த போது சாது, சன்னியாசிகளைப் பூஜித்துப் வழி பட்டவன். இப்போது உன்னைப் பார்த்தால், உன்நிலை திருப்திகரமாக இல்லாதது போல் தெரிகிறது. என்ன நடந்தது என்று சொல்,'' என கேட்டார்.
தன் துரதிர்ஷ்டம் பற்றிக் கூறினான் வீரன்.
""உனக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்க வேண்டாம். சரி... இனி உன் வாழ்க்கையில் அதிக சிரமப்படாமல் நீ இருக்க வழி உண்டு. ஆனால், நீ உழைக்க வேண்டும்,'' என்றார் சாது.
""சுவாமி! நானும் உழைப்பது என்ற தீர்மானத்துடன் போகிறேன். விறகை வெட்டி விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தலாம் என்றே, வேறு ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்,'' என்றான் வீரன்.
""சரி! நீ அதிக சிரமப்படாமல் வேலை செய்ய ஒரு வரம் தருகிறேன். மற்றவர்கள் உழைத்து ஒரு வேலையை முடிப்பதில், நீ பத்தில் ஒரு பங்கு உழைத்தாலே போதும், அந்த வேலை முடிந்துவிடும்,'' என்று கூறினார்.
வீரனும் அவருக்கு நன்றி தெரிவித்து, வணங்கி விடைபெற்றுக் கொண்டு சென்றான்.
ஒரு சிற்றூரை அடைந்து ஒரு கோடாரியை வாங்கிக் கொண்டு, அங்கே அருகில் இருந்த காட்டிற்குச் சென்றான் வீரன். ஆனால், அவ்வூரில் ஏகப்பட்ட விறகு வெட்டிகள் இருந்தனர். அவர்கள் வீரனை காட்டிற்குள் போய் விறகு வெட்டக் கூடாது என்று தடுத்தனர்.
வீரன் அவர்களிடம் பணிவாக, ""ஐயா! என் மனைவி, மக்களைக் காப்பாற்ற இதைத்தவிர வேறு வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். அதைச் செய்து பிழைக்கிறேன்,'' என்றான்.
அவர்களும், ""இங்கிருந்து ஐந்து மைல் தூரத்தில், "மகாரண்யம்' என்ற காடு உள்ளது. அங்கு நிறைய மரங்கள் உள்ளன. அங்கு போய் நீ விறகை வெட்டி வரலாம். ஆனால், அந்த காட்டிற்குள் போனவர்கள் யாரும் இதுவரை திரும்பி வரவே இல்லை,'' என்றனர்.
வீரனும், தன் மனைவி, மக்களோடு அந்தக் காட்டின் எல்லையை அடைந்தான். அவன் தன் மனைவியிடம், ""நீ குழந்தையோடு இங்கேயே இரு. காட்டிற்குள் வரவேண்டாம்,'' என்றான்.
""வேண்டாம்... வாழ்வோ, சாவோ எதிலும் உங்களோடு நாங்களும் பங்கேற்கிறோம். காட்டிற்குள் நீங்கள் தனியாகப் போகக் கூடாது. நாங்களும் துணைக்கு வருகிறோம்,'' என்றாள்.
அவர்களை அழைத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றான். அங்கே நன்கு அடர்ந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தை வெட்ட தன் கோடாரியை உயர்த்தினான். அப்போது யாரோ பயங்கரமாக சிரிப்பதை அவன் கேட்டான்.
மறுநிமிடமே, அந்த மரம் பயங்கர உருவில் அவன் முன்வந்து, ""என்னை வெட்டாதே... வெட்ட முயன்றால், உன்னையும் உன் குடும்பத்தாரையும் விழுங்கி விடுவேன்,'' என்றது.
""நீ எங்களை விழுங்குவதால் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. நான் இங்கே விறகு வெட்ட வந்தேன். நான் உழைத்துப் பிழைக்க முயல்வதை நீ தடுப்பது மிகவும் தவறானது,'' என்றான்.
மறுவினாடியே அந்த பயங்கர உருவம், முன் போலப் பெரியமரம் ஆகிவிட்டது. அதுகண்டு ஆச்சரியப்பட்டவனாய் மறுபடியும் தன்கோடாரியை உயர்த்தி, அந்த மரத்தை வெட்டப்போனான்.
அப்போது, ""வீரனே! வெட்டாதே,'' என்ற குரல் ஒலித்தது.
வீரன் தலை நிமிர்த்திப் பார்த்தபோது, தன் முன் ஒரு தேவதை நிற்பதைக் கண்டான்.
""நான் வனதேவதை. இந்தக் காட்டிலுள்ள மிருகங்களையும், மரங்களையும் நான் பாதுகாத்து வருகிறேன். இங்குள்ள மரங்களில் பலவகைப்பட்ட பட்சிகளும், பிராணிகளும் வாசம் செய்கின்றன. உன்னிடம் சக்தி வாய்ந்த கோடாரி இருப்பதால், உன்னை எந்த மிருகத்தாலும் தாக்க முடியவில்லை. மரம் பயங்கர உருவில் வந்து உன்னை பயமுறுத்திய போதிலும் நீ அஞ்சவில்லை. அதனால், நானே நேரில் வந்தேன். நீ இந்தக் காட்டில் எதையும் வெட்டாமல் திரும்பிப் போய்விடு,'' என்றது.
""தாயே! நீ சொல்வது என்னவோ நன்றாக இருக்கிறது. ஆனால், எனக்கு ஒரு சிறு குடும்பம் இருக்கிறதே... நான் அவர்களை வளர்த்துக் காப்பாற்ற வேண்டுமே? இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்,'' என்றான்.
""நீ என்ன செய்ய வேண்டும் என்பதை இந்நாட்டு மன்னன் உனக்குச் சொல்வான். அவன் இடும் கட்டளையை நானும், நீயும் மற்றும் எல்லாரும் மதித்துக் கீழ்படிய வேண்டும். அவன் எனக்கு என்ன கட்டளை இட்டாலும் அதன்படி நடப்பேன்,'' என்றது.
""நீ சொல்வது சரி. ஆனால் நான் எப்படி மன்னனைக் கண்டு பேச முடியும்? அதற்கு என்ன வழி?'' என்று கேட்டான்.
தேவதை அவனைக் கண்ணை மூடிக் கொள்ளச் சொன்னது. அவன் கண்களை மூடிக் கொண்டான். ஓரிரு நிமிடங்களுக்குப் பின், அவன் தன் கண்களைத் திறந்து பார்த்தபோது, தான் மன்னனின் தர்பாரில் இருப்பதைக் கண்டான். திடீரென ஒருவன் தன் மனைவி, மக்களுடன் தர்பாரில் வந்து நின்றது கண்டு அங்குள்ளவர்கள் ஆச்சரியப்பட்டனர். கனகசபை மன்னனிடம் தன் கதையைக் கூறினான்.
""நீ என் குடிமகன்... உன்னையும், உன் குடும்பத்தையும் காக்க வேண்டியது என் கடமை. உன் தகுதிக்கு ஏற்ப ஒரு உத்தியோகம் போட்டுக் தருகிறேன்,'' என்றார் மன்னன்.
ஆனால், வீரனோ அதற்கு மறுப்பு தெரிவித்து, ""அரசே! சாது எனக்கு ஒரு வரம் கொடுத்திருக்கிறார். நான் உழைத்துத்தான் சம்பாதிக்க வேண்டும். அப்போதுதான், நான் முன்பு புரிந்த தப்பிதங்களுக்கு பிராயச்சித்தம் செய்தது போலாகும். மரங்களை வெட்டக்கூடாது என சொல்ல வனதேவதைக்கு என்ன அதிகாரம் உள்ளது? நீங்கள் வனதேவதைக்கு கட்டளையிடுங்கள். நான்போய் விறகு வெட்டிப் பிழைக்கிறேன்,'' என்றான்.
மன்னனுக்கு வீரன் கூறியதில் நியாயம் இருப்பதாகத் தோன்றியது.
மன்னன் வீரனின் கோடாரியை வாங்கிக் கொண்டு, வனதேவதையை காண காட்டிற்குச் சென்றான். அவன் வனதேவதையைக் கூப்பிடவே அதுவும் அவன்முன் வந்து நின்றது.
""மன்னா! நீ உன் குடிமக்களை காப்பதுபோல, நான் இக்காட்டில் பிராணிகளையும், மரங்களையும் காத்து வருகிறேன். நீ காட்டில் மரங்களை வெட்டுவதற்கு முன், முதலில் இதைப் போல ஓர் காட்டை தயாரிக்க வேண்டும். அதில் இது போன்ற மரங்களை வளர்த்தபின், இங்குள்ள பிராணிகளை அங்கே வசிக்க செய்துவிட்டு, பிறகு இந்தக் காட்டு மரங்களை வெட்டலாம். இந்த இரண்டாவது காடு தயாராகும்போதே, மூன்றாவது காடு ஒன்றையும் தயாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால், இப்போதுள்ள மரங்களின் எண்ணிக்கை குறையாமல் அப்படியே இருந்து கொண்டிருக்கும். இப்படி செய்தால்தான் நாடு பசுமையாக இருக்கும். இல்லாவிட்டால் நாடே பாழாகிவிடும்,'' என்றது.
மன்னன் பதில் எதுவும் கூறாமல், தன் நகருக்குத் திரும்பி வந்தான்.
""நீ ? உன் கோடாரி கொண்டு, அந்தக் காட்டிலுள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்றால், இன்னமும் சில வருடங்களுக்கு பிறகு தான் செய்ய முடியும். மேலும், இப்போது இந்த நாட்டில் எவ்வளவோ விறகு வெட்டிகள் வேறு இருக்கின்றனர். அவர்கள் வெட்டுவதற்கே போதிய மரங்கள் இல்லை. நம் நாட்டிற்குத் தேவைப்படும் விறகுக் கட்டைகளை நான் அண்டை நாட்டிலிருந்து வரவழைத்துக் கொள்ளவும் தீர்மானித்திருக்கிறேன். அதனால், நீ வேறு ஏதாவது ஒரு தொழில் செய்,'' என்றான் மன்னன்..
அதுகேட்டு வீரன் தன் குடும்பத்தோடு அண்டை நாட்டு காட்டிற்கு போய்விட்டான்.
- தொடரும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X