கம்ப்யூட்டர் சில புதிய தகவல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2012
00:00

கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்து நமக்கு வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்கள், ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ், புதிய இணைய தளங்கள், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் என இன்றைய நாட்களில் வெளிவரும் புதியன பற்றி அதிகமான எண்ணிக்கையில் இருக்கும். சில வாசகர்கள், தாங்கள் கம்ப்யூட்டர் குறித்து படிக்கும் நூல்களில் காணப்படும் தொழில் நுட்பச் சொற்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் கேட்டு எழுதுகின்றனர். பெரும்பாலான இக்கடிதங்கள் பொறியியல் மற்றும் அறிவியல் மாணவர்களிடம் இருந்து வருகின்றன. ஒரு சில, கம்ப்யூட்டர் குறித்து தாங்களாகவே அதிக நூல்களைப் படிக்கும் வாசகர்களிடமிருந்தும் வருகின்றன. இவற்றில் சிலவற்றைத் தொகுத்து, அவற்றிற்கான விளக்கங்கள் இங்@க அளிக்கப்படுகின்றன. வரும் நாட்களில் இங்கே விளக்கப்பட்டுள்ள தொழில் நுட்பங்கள் பயன்பாட்டில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால், அனைவருக்குமே இவை உதவியாக இருக்கும்.
1. யு.இ.எப்.ஐ. (UEFI): யூபை எனச்சுருக்கமாக அழைக்கப்படும் இந்த தொழில் நுட்பச் சொல், புதியதாய் இனி கம்ப்யூட்டர் இயக்கத்தில் இணைக்கப்பட இருக்கும் இடைமுகம் ஒன்றைக் குறிக்கிறது. இதனை Unified Extensible Firmware Interface என விரித்துக் கூறலாம். தற்போது கம்ப்யூட்டர்களில் நீக்கமற இடம் பெற்றிருக்கும் BIOS (Basic Input Output System) interfaceக்குப் பதிலாக இது பயன்படுத்தப்பட இருக்கிறது.
நீங்கள் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்தவுடன், உங்கள் கம்ப்யூட்டரில் என்ன என்ன ஹார்ட்வேர் சாதனங்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்று இந்த UEFI இடைமுகம் ஒரு ஸ்டாக் எடுக்கும். தன் சோதனையில் அறியப்படும் அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களும் நன்கு இயங்கும் தன்மையில் உள்ளனவா எனக் கண்டறியும். எல்லாம் சரியாக இருக்கிறது என அறிந்தவுடன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஆன் செய்து பெர்சனல் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டினை அதனிடமும் (கூடவே உங்களிடமும்) கொடுத்துவிடும்.
இதைத்தானே பயாஸ் (BIOS)இப்போது செய்து வருகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? UEFI பலவகை சிப் கட்டமைப்பினை சப்போர்ட் செய்கிறது.(இதில் 32 மற்றும் 64 பிட் ப்ராசசர்களும் அடக்கம்) விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களில் அமைய இருக்கும் ARM சிப்களும் இதில் அடக்கம். ஆனால், பயாஸ் இத்தனை வகை ப்ராசசர்களை சப்போர்ட் செய்திடாது. மேலும் இது 16 பிட் ப்ராசசர்களுடன் மட்டுமே இணைந்து செயல்படும்.
புதிய UEFI இடைமுகம் பல வகைகளில் செயலாற்றுவதுடன், பழைய பயாஸ் செய்திடும் வேலைகளையும் செய்கிறது. எனவே, பயாஸ் உள்ள பழைய மதர்போர்டினை, புதிய இடைமுகத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.
2. 32 பிட் , 64 பிட் விண்டோஸ் ஆக உயருமா? முடியாது. இது தீர்வு கிடைக்காத ஒரு பிரச்னை. 32 பிட் ஹோம் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, 32 பிட் புரபஷனல் சிஸ்டமாக அப்கிரேட் செய்துவிடலாம். ஆனால் 64 பிட் பதிப்பிற்கு உயர்த்த வேண்டும் என்றால், புதியதாகத்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டும். அப்கிரேட் செய்திட முடியாது.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், தன்னிடம் வரும் தகவல்களை நாம் பயன்படுத்தும் (32/64 பிட் பதிப்பு) சிஸ்டத்திற்கேற்பவே கையாள்கிறது. பொதுவாகச் சொல்வதென்றால், ஒரு 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், டேட்டாவினை ஒரே நேரத்தில் அதிகமான எண்ணிக்கையில் எடுத்து இயக்கும். 32 பிட் சிஸ்டம் அந்த அளவு டேட்டாவினை ஒரே நேரத்தில் கையாள இயலாது. இதனால் தான், விண்டோஸ் சிஸ்டம் தரும் Easy Transfer பயன்பாட்டின் மூலம், பைல்கள் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, 32 மற்றும் 64 பிட் சிஸ்டங்கள் இடையே மாற்ற முடியாது. இவற்றை அனுப்பும் மற்றும் பெறும் சாதனங்களில் உள்ள சி.பி.யு.க்கள் அடிப்படையில், மாறுபாடு கொண்ட டேட்டா கட்டமைப்பினைப் பயன்படுத்துகின்றன.
32 பிட் விண்டோஸ் சிஸ்டத்திலிருந்து 64 பிட் சிஸ்டத்திற்கு மாறுகையில், உங்களுடைய அப்ளிகேஷன் புரோகிராம்களையும் அந்த வேகத்திற்கேற்றதாக மாற்ற வேண்டும். 64 பிட் சிஸ்டத்திற்கு மாறுவதற்குக் காரணமே, கம்ப்யூட்டரில் உள்ள 64 பிட் ப்ராசசரின் இயக்க வேகத்தின் அனுகூலங்களைப் பெறுவதற்காகத்தான். (இப்போது வரும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் பெரும்பாலும் 64 பிட் ப்ராசசர்களையே கொண்டுள்ளன.) இவற்றின் ராம் மெமரியும் 4 ஜிபி மற்றும் அதற்கு மேலான அளவில் உள்ளது. அந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரி இல்லை எனில், 64 பிட் சிஸ்டத்திற்கு மாறுவது தேவையற்ற ஒன்றாகும்.
3. அது என்ன ஐ.பி.எஸ்.? புதியதாக மானிட்டர் ஒன்று வாங்கப் போகிறீர்களா? இரண்டு வகையான டிஸ்பிளே தரும் மானிட்டர்களைப் பார்க்கலாம். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் Twisted Nematic பேனல்கள் காட்டும் டிஸ்பிளே மற்றும் புதியதாய் வந்திருக்கும் InPlane Switching (IPS) பேனல்கள் கொண்ட டிஸ்பிளே என இரண்டு வகைகளைக் காணலாம். இதில் எது சிறப்பானது? நிச்சயமாய் இரண்டாவது வகை தான். ஏன் என்று இங்கே காணலாம்.
ஐ.பி.எஸ். பேனல்களால், முந்தைய டி.என். பேனல்களைக் காட்டிலும் அதிக வண்ணங்கள் மற்றும் ஒளி வெளிப்பாட்டு மதிப்புடன் படங்களைக் காட்ட முடியும். நாம் அதிகமான கோணங்களில் பார்க்க முடியும். டி.என். பேனல்களைச் சற்று அழுத்தினால் வண்ணம் வெளிர ஆரம்பிக்கும். ஐ.பி.எஸ். பேனல்களில் இந்த பிரச்னை இல்லை. எனவே டச் ஸ்கிரீன் போன்றவற்றிற்கு ஐ.பி.எஸ். பேனல்களே உகந்தவையாகின்றன. ஐ.பி.எஸ். பேனல்கள், சென்ற 1996 ஆம் ஆண்டிலேயே வடிவமைக்கப்பட்டாலும், இத் தொழில் நுட்பம் இன்னும் தர நிர்ணயம் செய்யப்படாததால், வர்த்தக ரீதியாக இது வளரவில்லை.
ஐ.பி.எஸ். பேனல் திரைகளில், சூப்பர் ஐ.பி.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். ப்ரோ (Super IPS மற்றும் IPS Pro) என சில வகைகள் உள்ளன. அடிப்படையான ஐ.பி.எஸ். பேனல்களில் கூடுதல் அம்சங்களுடனும், சிறப்பான டிஸ்பிளேயுடனும் இந்த வகைகள் உள்ளன.
டி.என். பேனல்கள் தயாரிப்பது செலவு நோக்கில் மிகவும் குறைவு என்பதால், இவற்றைக் கொண்டிருக்கும் மானிட்டர்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன. மேலும் டி.என். பேனல்கள், ஐ.பி.எஸ். பேனல்களைக் காட்டிலும் கூடுதல் பிரைட்னஸ் காட்ட முடியும்; அதிகமான எண்ணிக்கையில் ரெப்ரெஷ் ரேட் கொள்ள முடியும். எனவே இவை முப்பரிமாண ஸ்டீரியோஸ்கோபிக் அப்ளிகேஷன்களுக்கு உகந்தவையாக உள்ளன.
4.தண்டர்போல்ட் போர்ட் (Thunderbolt port): இன்டெல் நிறுவனம் தயாரித்த புதிய மிக அதிக வேகத்தில் இயங்கும் இன்டர்பேஸ் தான் தண்டர்போல்ட் போர்ட். 2011 ஆம் ஆண்டிலேயே, ஆப்பிள் நிறுவனம் தன் மேக் புக் ப்ரோ கம்ப்யூட்டர்களில் இதனைப் பயன்படுத்தியது. விண்டோஸ் சிஸ்டத்தினைப் பொறுத்தவரை, இப்போதுதான் தண்டர்போல்ட் போர்ட் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்கள் சந்தைக்கு வரத் தொடங்கி உள்ளன. தண்டர்போல்ட் போர்ட்கள் கொண்ட சாதனங்கள் நாம் வாங்கும் விலைக்குக் கிடைத்தால் நல்லதுதான்.
கூடுதல் வேகத்தில் சாதனங்களுக்கிடையே டேட்டாக்களைக் கடத்த முடியும். தண்டர்போல்ட் இடைமுகத்தில், high speed PCI Express interface மற்றும் DisplayPort interface ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு, ஒரே இன்டர்பேஸாகக் கிடைக்கிறது. இது சீரியல் டேட்டா மாற்றத்தை சப்போர்ட் செய்கிறது. இதனால், வெகு தொலைவிற்கு டேட்டாவினை வேகமாகக் கடத்தலாம். தண்டர்போல்ட் இடைமுகத்தில், ஒரே ஒரு கேபிள் மூலம் டேட்டா, ஆடியோ, வீடியோ மற்றும் மின்சக்தியை வேகமாகக் கொண்டு செல்ல முடியும். இதனால், ஹார்ட்வேர் தயாரிப்பவர்கள், மற்ற சாதனங்களை இணைக்க, கேபிள் மற்றும் போர்ட்களின் எண்ணிக்கையைக் குறைவான எண்ணிக்கையில் தரலாம்.
சந்தையில் தண்டர்போல்ட் கேபிள்கள் மற்றும் போர்ட்கள் அரிதாகவே கிடைக்கின்றன. இவற்றைப் பெற்றுப் பயன்படுத்தினால், இதன் கூடுதல் பயன் விளங்கும்.
5. யு.எஸ்.பி.3 என்ன அவ்வளவுஒசத்தியா? யு.எஸ்.பி.3 போர்ட் உன்னிடம் இல்லையா? என ஏளனமாக உங்கள் நண்பர்கள் கேட்கிறார் களா? அவர்கள் நகர்ந்து போன பின்னர், அது என்ன அவ்வளவு ஒசத்தியா? என்ற முணுமுணுப்பு உங்களிடமிருந்து வருகிறது, இல்லையா? ஆம், யு.எஸ்.பி. 3 உசத்திதான். அதன் டேட்டா பரிமாறும் வேகம், விநாடிக்கு 5 கிகாபிட்ஸ். யு.எஸ்.பி.2ன் வேகம் என்ன? விநாடிக்கு ஜஸ்ட் 460 மெகாபிட்ஸ் தான்.
நாம் மாற்றிக் கொள்ளும் டேட்டாவின் அளவு அவ்வளவு இல்லை என்றாலும், வேகத்தைப் பொறுத்தவரை யு.எஸ்.பி.3 மிக அதிக வேகம்தான். யு.எஸ்.பி,3 இரு வழிப்பாதை போன்றது.
இரு பக்கங்களில் இருந்தும் டேட்டா வினை ஒரே நேரத்தில் மாற்றலாம். ஆனால், யு.எஸ்.பி. 2 ஒரு வழிப் பாதை மட்டுமே. ஆனால், யு.எஸ்.பி.3ன் வேகத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால், அதற்கேற்ற கேபிள் உங்களிடம் இருப்பது அவசியம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBBU - COIMBATORE,இந்தியா
15-ஆக-201214:20:37 IST Report Abuse
VENKATASUBBU Becaus eof your computer malar only I learnt many things about latest informations. Please keep it up it will be helpful for others like me.
Rate this:
Share this comment
Cancel
nagabala - madurai,இந்தியா
12-ஆக-201200:07:25 IST Report Abuse
nagabala நான் இப்பொழுது விண்டோஸ் 7 ஹோம் பெசிக் 64 பிட் ஓஎஸ் பயன்படுத்தி வருகிறேன், அதற்கு பதிலாக 32 பிட் ஓஎஸ் போற்று கொள்ளலாமா ?முடியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X