கூகுள் பைபர்: மின்னல் வேக இன்டர்நெட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2012
00:00

கூகுள் அண்மையில் ஓர் அட்டகாசமான திட்டம் ஒன்றை அமெரிக்க மக்களுக்குத் தந்துள்ளது. இன்டர்நெட் வரலாற்றில் இது அடுத்த கட்டமாக அமைய உள்ளது.
இது வெற்றிகரமாகச் செயல்பட்டால், உலகின் அனைத்து இடங்களிலும், கூகுள் இதனைச் சாத்தியப்படுத்தலாம். கூகுள் பைபர் (Google Fiber) என்ற பெயரில், அதி வேக, மின்னல் வேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பினை வழங்கும் திட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளது.
2011 ஆம் ஆண்டில் இந்த திட்டம் குறித்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டது. பைபர் ஆப்டிக் வழி தகவல் தொடர்பினை இணைய தொடர்பிற்குத் தருவதே இந்த திட்டம். உலகிலேயே அதிக வேகத்தில் இன்டர்நெட் இணைப்பினை இதன் மூலம் பெறலாம். மின்னல் வேக டேட்டா பரிமாற்றம் என்பது நிஜமாகவே இதன் மூலம் நடைபெறும். ஒரு நொடியில், ஒரு கிகாபிட் பிட்ஸ் டேட்டா பரிமாறப்படும். ஆப்டிகல் பைபர் மூலம் இது சாத்தியமாகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நெட்வொர்க்கினை இதற்கென அமைத்து வெற்றிகரமாக செயல்படுத்த கூகுள் சோதனை நடத்தியுள்ளது. இன்டர்நெட் மட்டுமின்றி, வீடியோ, தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவையும் இதன் மூலம் வழங்கப்பட இருக்கின்றன. ஆனால், தொலைபேசி சேவை இதில் சேர்க்கப்படவில்லை.
தொடக்கத்தில் கேன்சாஸ் நகரத்தில் இது அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1,100 இல்ல வளாகங்கள் முதல் சந்தாதாரர்களாக விண்ணப்பித்தன. சென்ற ஜூலையில் இவை பதியப்பட்டன. மூன்று வகைகளில் இது கிடைக்கும். இலவச இன்டர்நெட் இணைப்பு, மாதம் 70 டாலர் செலுத்துவோருக்கான ஒரு கிகா பிட் வேக இன்டர்நெட் இணைப்பு மற்றும் 120 டாலருக்கு, தொலைக்காட்சி சேவை இணைந்த இன்டர்நெட். தொலைக்காட்சி இணைந்த சேவையில், ஒரு டெராபைட் அளவிலான கூகுள் ட்ரைவ் வசதி தரப்படுகிறது. அத்துடன் ஒரு டெராபைட் டி.வி.ஆர். ரெகார்டிங் வசதியும் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் எட்டு தொலைக் காட்சி சேனல் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைத்து, பின்னர் வேண்டும் போது பார்த்துக் கொள்ளலாம். இந்த வகை சேவை பெறுவோருக்கு நெக்சஸ் 7 டேப்ளட் பிசி ஒன்று தரப்படுகிறது. இதனை ரிமோட் கண்ட்ரோல் போல பயன்படுத்தலாம். இலவச இன்டர்நெட் வகையில், இன்ஸ்டலேஷன் கட்டணமாக 300 டாலர் கட்டிவிட்டால், ஏழு ஆண்டுகளுக்கு நொடிக்கு 5 மெகா பைட் டவுண்லோட் மற்றும் நொடிக்கு ஒரு மெகா பைட் அப்லோட் இன்டர்நெட் சேவை, அப்லோட் மற்றும் டவுண்லோட் பிரிவில் எந்த விதக் கட்டுப்பாடும் இன்றிக் கிடைக்கும். இந்த 300 டாலர் கட்டணத்தை, ஓராண்டு காலத்தில் தவணை முறையில் செலுத்தலாம். மாதம் 70 டாலர் கட்டணம் செலுத்துவோருக்கு, இன்ஸ்டலேஷன்
கட்டணம் இல்லை. நொடிக்கு ஒரு கிகா பிட் வேகத்தில் அப்லோட் மற்றும் டவுண்லோட் இருக்கும். கூகுள் ட்ரைவில் ஒரு டெரா பைட் அளவு இடம் இலவசம்.
கேன்சஸ் நகர வாசிகள் முன் கூட்டியே பதிவு செய்திட, இணைய தளப் பக்கம் ஒன்றை கூகுள் திறந்துள்ளது. வரும் செப்டம்பரில் வீடுகளுக்கான இணைப்பு தரப்படும். ஒரே நேரத்தில் இணையான இணைப்பினை அனைவரும் பெறுவார்கள். குறிப்பிட்ட ஏரியாவில், எதிர்பார்க்ப்படும் எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் சேர்ந்த பின்னரே, பைபர் நெட்வொர்க்கினை அமைத்து, கூகுள் மின்னல் வேக இன்டர்நெட் சேவையைத் தரத் தொடங்கும். இந்த சேவையில், நொடிக்கு ஒரு கிகா பிட் டேட்டா கிடைக்கும். தற்போது அமெரிக்காவில் கிடைக்கும் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தைப் போல, இது நூறு மடங்கு அதிகமானது. என்னதான், பெரிய அளவில் விளம்பரம் செய்தாலும், அமெரிக்க நகரங்களில் இன்டர்நெட் டவுண்லோட் வேகம் நொடிக்கு 4 மெகா பிட்ஸ் தான்.
கேன்சஸ் நகரம், அமெரிக்காவில் இரு மாநிலங்களில் அமைந்துள்ளது. இந்த இரண்டு பிரிவுகளிலும் தர கூகுள் முடிவெடுத்துள்ளது. இந்த நிகழ்வை ஒட்டி, முன்பு பிரபலமான "கிவ் அ லிட்டில் பிட்' (“Give a Little Bit”) என்ற பாடல் "கிவ் எ கிகாபிட்' (“Give a Giga Bit”) என ரீமேக் செய்யப்பட்டது. கேன்சஸ் நகரின் ஒரு பிரிவான டொபேகா (Topeka) என்ற பெயர் தற்காலிகமாக கூகுள் என மாற்றி அழைக்கப்பட்டது. ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள சரசோடா (“Sarasota”) என்ற தீவு தற்காலிகமாக கூகுள் தீவு என அழைக்கப்பட்டது.
கூகுள் பைபர் இன்டர்நெட் வெற்றி அடைந்தால், தற்போது இன்டர்நெட் சேவை வழங்கி வரும், இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை நிச்சயம் இழப்பார்கள். இந்த அளவிலான வேகத்திலும், வகைகளிலும் சேவையினை அவர்களால் தர முடியாது. கூகுள் தற்போது மக்கள் வசிக்கும் இல்லங்களுக்கு மட்டுமே இந்த இணைப்பினைத் தர இருக்கிறது. விரிவடையும் காலத்தில் வர்த்தக நிறுவனங்களுக்கும் இதனை நீட்டிக்கலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
daniel - chennai,இந்தியா
10-ஆக-201218:52:28 IST Report Abuse
daniel இது இந்தியாவில் வர இன்னும் 40 வருடம் ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
vijay - chennai,இந்தியா
09-ஆக-201222:45:25 IST Report Abuse
vijay இந்தியாவுக்கும் வரும்................ஆனா வராது.........................................................
Rate this:
Share this comment
Cancel
APPASVJ - UAE,இந்தியா
09-ஆக-201204:14:06 IST Report Abuse
APPASVJ ஏன் இது இந்தியாக்கு கிடையாதா இது இந்தியாக்கு வந்தால் நல்லாருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X