கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஆக
2012
00:00

கேள்வி: டாகுமெண்ட்டில் டேபிள் அமைக்கையில் அது இடது புறம் அமைகிறது. இதனை எப்படி டாகுமெண்ட் பக்கத்தின் நடுவே அமைக்கலாம்?
கரு. அழகப்பன், பள்ளத்தூர்.
பதில்
: நடுவே வைத்திட விரும்பும் டேபிளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கிளிக் செய்திடவும். Table மெனு சென்று Select என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதிலிருந்து கிடைக்கும் மெனுவில் Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது டேபிளை செலக்ட் செய்திருக்கும். அடுத்து Ctrl+E கீகளை அழுத்தவும். டேபிள் உங்கள் டாகுமெண்ட்டில் நடுவில் சென்று அமர்ந்துவிடும்.

கேள்வி: எக்ஸெல் 2007 பயன்படுத்துகிறேன். இதில் செல்களைச் சுற்றிக் கட்டம் இட எந்த செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்?
என். கிருஷ்ண குமார், திருப்பூர்.
பதில்
: ரிப்பன் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் ஹோம் டேப் சென்று இதனை மேற்கொள்ளலாம். இவையும் இல்லாமல் உடனடியாக மேற்கொள்ள ஒரு வழி உள்ளது. செல்களை ஒரு குரூப்பாகத் தேர்ந்தெடுத்தும் இதனை அமைக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களைச் சுற்றி, ஒற்றைக் கோட்டில் பார்டர்களை அமைக்க, Ctrl + Shift + 7 கீகளை அழுத்தவும். இந்தக் கோடுகளை நீக்க Ctrl + Shift + என்ற கீகளை அழுத்தவும். 7 மற்றும் குறியீடுகளை அமைக்க, நம்லாக் கீ பேடினைப் பயன்படுத்தாமல், மெயின் கீ போர்டில் மேலாக உள்ள கீகளையே பயன்படுத்த வேண்டும்.
பார்மட் மெனு சென்று நோ பார்டர்ஸ் தேர்ந்தெடுத்தால், அனைத்து பார்டர்களும் நீங்கிவிட வாய்ப்பு உண்டு. இந்த கீகளைப் பயன்படுத்தி, நாம் விரும்பும் செல்களில் மட்டும் பார்டர் கோடுகளை நீக்கலாம்.

கேள்வி: என் பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்து, பல வேளைகளில் பீப் ஒலி வருவதில்லை. அப்படி வராத போது சிஸ்டம் இயங்க மறுக்கிறது. பின்னர் பல முறை முயற்சித்த பின்னர், இயங்குகிறது. இது ஏன்? பிரசனை எங்கு உள்ளது?
சி. திருச்செல்வம், காஞ்சிபுரம்.
பதில்
: பெரும்பாலான மதர்போர்டுகள், தாங்கள் முறையாக இயங்கத் தொடங்கி விட்டோம் என்று அறிவிக்க, நல்ல சத்தமாக ஒரு பீப் ஒலியைக் கொடுக்கும். அதன் இயக்கத்தில் ஏதேனும் பிரச்னை இருப்பதாகத் தெரிய வந்தால், வித்தியாசமான அளவில் அடுத்தடுத்து பீப் ஒலிகள் வெளியிடப்படும். இவற்றிற்கான பொருளை, உங்கள் கம்ப்யூட்டருடன் தரப்படும் கையடக்கக் குறிப்பு நூலில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ற வகையில் பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிக்கலாம்.
உங்களுடைய கம்ப்யூட்டரின் மதர் போர்ட் எந்தவிதமான பீப் ஒலியும் எழுப்பாமலும், சரியாக இயங்காமலும் இருந்தால், அந்த மதர்போர்டு செத்துவிட்டது என்று அர்த்தம். மதர்போர்டு சரியான முறையில், அதற்கான சாதனங்களுடன் பொருத்தப்பட்டுள்ளதா என்பதனை சோதனை செய்து உறுதி செய்து கொள்ளவும். இதன் பின்னரும், பீப் ஒலி கிடைக்கவில்லை எனில், புதிய மதர் போர்டு உங்களுக்குத் தேவையாய் இருக்கும்.

கேள்வி:பிரிண்டருக்கான இங்க் ஏன் இந்த விலை விற்கிறது? விலையைக் கேட்ட பின்னர், நமக்கு பிரிண்டர் தேவையா? என்ற கேள்வி எழுகிறது. வகையான தீர்வு என்ன?
ஆ. நம்பெருமாள், சிவகங்கை.
பதில்:
பிரிண்டர் வாங்கிய எல்லாருக்கும், அதனுடன் வரும் இங்க் காட்ரிட்ஜ் அல்லது டோனர் தீர்ந்தவுடன், புதியதாய் இங்க் வாங்குகையில் தான், அதன் விலையின் விபரீதத்தினை உணர்கின்றனர். அந்த அளவிற்கு பிரிண்டர் இங்க் விலையிடப்படுகிறது? ஏன்? இங்க் இல்லை என்றால், உங்கள் பிரிண்டர் வெறும் பேப்பர் வெயிட் தான். பிரிண்டர் தயாரிக்கும் எச்.பி,, கேனன், லெக்ஸ் மார்க் போன்ற நிறுவனங்கள் இதனை நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். அதனால் தான், மிகக் குறைந்த விலையில் பிரிண்டரை விற்பனை செய்பவர்கள், அதிகமான விலையில் இங்க் விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனங்களிடம் இல்லாமல், தர்ட் பார்ட்டி அமைப்புகளிடம் இருந்து, இங்க் நிரப்பி அச்சடிக்கலாம் என்றாலும், அவை நிறுவன இங்க் கார்ட்ரிட்ஜ் பயன்பாட்டில் பெறும் தெளிவையும், அழகையும் தருவதில்லை.
இதற்கான விடிவு என்ன? நம் தேவைகள் என்ன என்பதனை வரையறை செய்து, அதற்கேற்றார்போல் செலவு வைத்திடும் பிரிண்டர்களை வாங்குவதே தீர்வாகும்.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில் யு.எஸ்.பி.2 போர்ட் உள்ளது. என்னிடம் எக்ஸ்டர்னல் யு.எஸ்.பி. 3 மல்ட்டி போர்ட் உள்ளது. இதனைக் கம்ப்யூட்டரில் இணைத்து டேட்டா மாற்ற பயன்படுத்தினால், டேட்டா செல்லும் வேகம் யு.எஸ்.பி. 3க்கான வேகமாக இருக்குமா?
கே. சிராஜுதீன், கோயம்புத்தூர்.
பதில்
: சிராஜுதீன், நிச்சயம் இருக்காது. யு.எஸ்.பி.2 போர்ட்டினை, யு.எஸ்.பி. 3 போர்ட்டாக மாற்ற வழியே இல்லை. ஆனால், யு.எஸ்.பி. 3 போர்ட், யு.எஸ்.பி. 2 போர்ட் சாதனங்களைக் கையாளும். அதாவது, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில், யு.எஸ்.பி.3க் கான, ஆட் இன் கார்ட் வாங்கிப் பொருத்தி, யு.எஸ்.பி. 3 போர்ட் அமைத்தாலும், அதில் பழைய யு.எஸ்.பி. 2 சாதனங்கள் இயங்கும். ஆனால், அந்த சாதனங்களின் வேகம் யு.எஸ்.பி. போர்ட் 2க்கான வேகமாகத்தான் இருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்துப் படிக்கையில், ஓ.இ.எம். (OEM) என்ற சுருக்குச் சொல் தரப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது?
டி.என். சந்தான லஷ்மி, திண்டுக்கல்.
பதில்:
Original Equipment Manufacturer என்பதன் சுருக்கமே அது. சில சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை இது குறிக்கும். இந்நிறுவனம் தயாரிக்கும் இந்த சாதனங்கள் வேறு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த விற்பனை செய்திடும் நிறுவனங்களை ValueAdded Resellers (VAR) என அழைக்கின்றனர். எடுத்துக் காட்டாக, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் ட்ரைவினை ஸீ கேட் அல்லது தோஷிபா நிறுவனம் தயாரித்திருக்கும். ஆனால், இதனை கம்ப்யூட்டர் ஒன்றில் இணைத்து, இன்னொரு நிறுவனம் விற்பனை செய்கிறது. VAR நிறுவனங்கள், OEM நிறுவனங்களுக்கு, இந்த சாதனம் இந்த வரைமுறையில், வடிவமைப்பில் தயாரிக்கப்பட வேண்டும் என வழிகாட்டுதல்களைத் தருகின்றன. அதாவது சில சாதனங்களைத் தயாரிப்பதில், சில குறிப்பிட்ட நிறுவனங்கள் சிறப்பாக இயங்குகின்றன. எனவே அவற்றிடமிருந்து அந்த சாதனங்கள் வாங்கப்பட்டு, இன்னொரு நிறுவனத்தால் மற்றவற்றுடன் இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக, OEM நிறுவனங்கள் அவ்வளவாக அறியப்படுவதில்லை. ஏனென்றால், அவை தயாரிக்கும் சாதனம் மட்டுமே உங்கள் தேவையை நிறைவேற்றப் போவதில்லை. ஒரு சில வேளைகளில், முழுமையான சாதனங்களில் மீண்டும் அவை தேவைப்படும்போது நீங்கள் அவற்றைத் தனியே விலைக்கு வாங்கிப் பயன்படுத்தலாம்.

கேள்வி: அண்மையில் எனக்கு தோஷிபா த்ரைவ் டேப்ளட் பிசி 32 ஜிபி ஒன்று பரிசாகத் தரப்பட்டது. பெர்சனல் கம்ப்யூட்டரில் நான் குக்கீஸ்களை அழிக்கிறேன்; ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்கிறேன். இதில் என்ன செய்திட வேண்டும்?
சி.மஹேந்திர ன், சென்னை.
பதில்:
டேப்ளட் பிசிக்கள், தகவல் தொழில் நுட்ப உலகில், முற்றிலும் புதிய சாதனங்களாகும். எனவே தான், பலரும் இதனை எப்படி பராமரிப்பது என்ற கேள்வியை எழுப்புகின்றனர். எனவே உங்களுடைய கேள்விக்கான பதில் மட்டுமின்றி, மேலும் சில தகவல்களையும் தருகிறேன். டேப்ளட் பிசிக்கள், பிளாஷ் மெமரியைப் பயன்படுத்துகின்றன. எனவே டிபிராக் செய்திடும் வேலை எல்லாம் வேண்டாம். மேலும், பெரும்பாலான டேப்ளட் பிசிக்கள், தங்களின் தற்காலிக பைல்களை, ஓரளவிற்கு அவை சேர்ந்தவுடன், தாங்களாகவே நீக்கிவிடும் நுட்பத்தினைப் பெற்றுள்ளன. பராமரிப்பு என்று பார்த்தால், கீழ்க்குறித்தவை முக்கியமானவைகளாகும்.
பயன்படுத்தாத அப்ளிகேஷன் புரோகிராம்கள், டேப்ளட் பிசியின் இயக்க வேகத்தினை மட்டுப்படுத்தாது என்றாலும், தேவையில்லாமல் இடத்தை எடுத்துக் கொள்ளும் அப்ளிகேஷன் புரோகிராம்களை நீக்கிவிடவும். மைக்ரோ பைபர் துணி மற்றுல் எல்.சி.டி. ஸ்கிரீன் கிளீனிங் சொல்யூசன் கொண்டு, டேப்ளட் பிசியின் திரையைச் சுத்தம் செய்திடவும். அனைத்து கனெக்டர்களையும் அவ்வப்போது மெல்லிய பிளாஸ்டிக் ஸ்டிக் கொண்டு சுத்தம் செய்திடவும்.
மிகக் குறைந்த மின் சக்தியுடன் வெகுநாட்கள், டேப்ளட் பிசிக்களின் பேட்டரியை வைத்திருந்தால், அவை கெட்டுப் போக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி அவற்றை ரீசார்ஜ் செய்து வைக்கவும்.
பெரும்பாலான டேப்ளட் பிசிக்களில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்படுகிறது.
இவற்றை வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் பற்றுவது எளிது என்பதால், நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திடவும். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கான இலவச ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திடவும். இதனைப் பெற https://play.google.com/store/apps/details?id=com.antivirus&hl=en என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.VENKATESAN - CHENNAI/SAIDAPET,இந்தியா
12-ஆக-201208:36:05 IST Report Abuse
M.VENKATESAN SIR / MADEM IAM VENKAT CHENNAI I WANT UBILSTATE 7C PLEASE HELP HOW TO PURCHASE ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X