கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2010
00:00

கேள்வி: இந்த கேள்வியை கம்ப்யூட்டர் மலர் பகுதிக்கு அனுப்பலாமா என்று தெரியவில்லை. ஆனால் கட்டாயம் பதிலளிக்க வேண்டுகிறேன். கருவுற்ற தாய்மார்கள் மொபைல் போனில் பேசுவதால், குழந்தைக்குப் பாதிப்பு இருக்குமா?
–ஆ.வேணி கிருஷ்ணன், சென்னை
பதில்:
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இது சாத்தியமே என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளின் மனநிலையில் மிகச் சிறிய அளவில் பாதிப்பு இருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் குழந்தைகளின் நலன் கருதி, மொபைல் போனைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்கலாம். அல்லது ஸ்பீக்கர் போட்டு தள்ளிவைத்துப் பயன்படுத்தலாம். ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் பேசுவதனைத் தவிர்க்கலாம்.


கேள்வி: ஒரு பைல் அல்லது போல்டர் குறித்த ப்ராப்பர்ட்டீஸ் தெரிய என்ன ஷார்ட் கட் கீ அழுத்த வேண்டும்?
–எம். திருமுருகன், மதுரை
பதில்:
அந்த பைல் அல்லது போல்டரைத் தேர்ந்தெடுத்து ஆல்ட்+என்டர் அழுத்தவும். உடன் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும்.


கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கிய திலிருந்து, ஏதேனும் இணைய தளம் சென்றால், அந்த பக்கத்தின் எழுத்துக்கள் மிகவும் சிறியனவாகக் காட்டப்படுகின்றன. இது எதனால் ஏற்படுகிறது? நான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பிரவுசர் பயன்படுத்துகிறேன்.
–டி.டி. வரதராஜன், சென்னை
பதில்:
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, உங்கள் இணையப் பக்கத்தினைப் பெரிதாக்கி, எழுத்துக்களையும் பெரிதாக்கும் பார்க்க வழிகளைக் கொண்டுள்ளதே. உங்கள் பிரச்னையை இரு வழிகளில் தீர்க்கலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் எழுத்து அளவைப் பெரிதாக்கலாம். இணைய உலா வருகையில், நீங்களாக ஸூம் செய்து பெரிதாக்கலாம். இவற்றில் இரண்டாவது ஆப்ஷன் மிக எளிதான ஒன்றாகும்.
இந்த இரண்டு வழிகளையும் இங்கு பார்க்கலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து, Tools  கிளிக் செய்து, Internet Options  தேர்ந்தெடுக்கவும். இதில் Appearance  என்ற பிரிவில்,  Fonts  என்பதில் கிளிக் செய்திடவும்.உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி, பெரிய அளவு ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்திடவும்.
அடுத்து ஸூம் செய்வது குறித்து பார்க்கலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளவும். பின்னர் கண்ட்ரோல் கீயினை அழுத்திப் பிடித்துக் கொள்ளவும். அடுத்து மவுஸின் ஸ்குரோல் வீலினை முன்னும் பின்னுமாக மெதுவாகச் சுழற்றினால், பக்கம் ஸூம் ஆகி, எழுத்துக்கள் பெரிதாவதனைக் காணலாம். அல்லது Control (Ctrl) பட்டனை அழுத்தியவாறு, ப்ளஸ் (+) அல்லது மைனஸ் (–) கீயினை அழுத்தலாம். இதற்கேற்ற வகையிலும், பக்கம் ஸூம் ஆகி எழுத்துக்கள், பெரிதாகவும், சிறியதாகவும் மாறுவதனைக் காணலாம்.


கேள்வி:இன்டர் நெட்டில் இலவசமாக நான் அனுப்பும் பைல்களை, வைரஸ் உள்ளதா என்று சோதித்தறிய தளம் உள்ளதா? அதற்கு எத்தனை நாள் காத்திருக்க வேண்டும்?
-எஸ். கமாலுதீன், கடலூர்
பதில்:
இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும், இதில் சிறப்பாகச் செயல்படுவது http://www.virustotal. com  என்ற முகவரியில் இருப்பதாகும். இந்த தளத்திற்கு நீங்கள் சந்தேகப்படும் பைலை அனுப்புங்கள். உங்கள் பைலை இந்த தளம் ஏறத்தாழ 40 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் சோதனை செய்து, அவற்றின் ரிப்போர்ட்களைக் காட்டுகிறது. அதிலிருந்து நீங்கள் அது வைரஸ் உள்ளதா என அறிந்து கொள்ளலாம். இதற்குக் கட்டணம் இல்லை. மேலும் உடனடியாக அறிந்து கொள்ளலாம்.


கேள்வி: ஸ்பேம் மெயில்கள் இந்தியாவில் தான் அதிகம் என்று படித்தேன். இது உண்மையா?
-டி.மாறன், மதுரை
பதில்:
இந்த வகையில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. உலக அளவில் உருவாக்கப்படும் ஸ்பேம் மெயில்களில் 15.2% அமெரிக்காவிலிருந்து வருகின்றன. அடுத்த இடத்தில் இந்தியா 7.7% கொண்டு உள்ளது. தொடக்கத்தில் ஸ்பேம் மெயில்கள் நாசம் விளைவிப்பதாகவோ, தொல்லை கொடுப்பதாகவோ இல்லாமல் இருந்தன. போனால் போகட்டும் என விட்டிருந்தோம். ஆனால் இப்போது இவை நம்மைச் சிக்க வைப்பதாகவே உள்ளன. குறிப்பாக பண ஆசை காட்டி ஏமாற்றும் மெயில்கள் ஏராளம். அண்மையில் தமிழ்நாட்டில் பல படித்தவர்கள் பல லட்சம் ஏமாந்த செய்தியை பத்திரிக்கை மற்றும் டிவி வழியாகத் தெரிந்து கொண்டிருப்பீர்களே. மெயில்கள் வழியாக வரும் விளம்பரங்களை நம்பாதீர். பணம் கிடைக்கும் என்று அறிவிக்கும் மெயில்களை அலட்சியப்படுத்துங்கள். உங்கள் நண்பரின் இமெயில் முகவரியிலிருந்து கூட இது போன்ற மெயில்கள் வந்தாலும் நம்ப வேண்டாம். உங்கள் நண்பரும் ஏமாந்திருக்கலாம். அல்லது அவருக்கே தெரியாமல், அவரின் மெயில் பாக்ஸிலிருந்து இது போன்ற மெயில் அனுப்பும் ஸ்பேம் மெயிலுக்கு அவர் இரையாகியிருக்கலாம்.


கேள்வி: வேர்டில் டாகுமெண்ட் எடிட் செய்வதற்காக டைப் செய்கையில், பல வேளைகளில், நான் டைப் செய்திடும் டெக்ஸ்ட் இடையே இடம் பிடிக்கிறது. சில வேளைகளில் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட்டை அழிக்கிறது. இதற்காக தனியே டைப் செய்து ஒட்ட வேண்டியதுள்ளது. இது எதனால்? வைரஸ் வேலையாக இருக்குமோ?
-நா. உ. மணி, தேவாரம்
பதில்:
வைரஸ் இல்லை. டைப் செய்கையில், தற்செயலாக இன்ஸெர்ட் கீயினை அழுத்தி விடுகிறீர்கள். இதனை அழுத்துகையில் ஏற்கனவே இருந்த, இடைச் செருகலாக டெக்ஸ்ட் அமைக்கப்படும் வசதி மாறி விடுகிறது. இதனால் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட் அழிக்கப்பட்டு புதிய டெக்ஸ்ட் அமைக்கப்படுகிறது. எனவே இது போல ஏற்படும் போது, மீண்டும் ஒரு முறை இன்ஸெர்ட் கீயினை அழுத்திவிடவும். கூடுமானவரை அடுத்த முறை இது போல அறியாமல் இன்ஸெர்ட் கீயினை அழுத்துவதைத் தவிர்க்கவும்.


கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். இதில் ஸ்டார்ட் மெனு மிகப் பெரிதாக எழுந்து வருவதற்குப் பதிலாகச் சிறியதாக வரும்படி அமைக்க முடியுமா? எனக்கு இது பிடிக்கவில்லை.
-கே. ஆஷா சந்தர், கோவை
பதில்:
உங்களைப் போல பல வாசகர்கள் இதனைக் கேட்டுள்ளனர். சிலருக்கு இது போன்று பாப் அப் ஆகிவரும் கட்டங்கள் எல்லாம், சிறியதாக இருந்தால் தான் பிடிக்கிறது. (எனக்கும் தான்). விண்டோஸ் தான், தானாகத் தந்துள்ள அனைத்து விஷயங்களையும் சிறியதாக அமைத்துக் கொள்ளும் வழிகளைக் கொண்டுள்ளது.
உங்களுடைய டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties  என்பதில் கிளிக் செய்திடவும். இனி Taskbar and Start menu Properties  என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் இரண்டு டேப்கள் இருக்கும். ஸ்டார்ட் மெனு டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் Customize  என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Customize Start menu என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் General என்ற டேப்பில் கிளிக் செய்து பின்னர் Small icons என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது மீண்டும் Taskbar and Start menu Properties  என்ற பாக்ஸ் கிடைக்கும். Apply என்பதில் கிளிக் செய்து, பின் ஓகேயில் என்டர் தட்டி வெளியேறவும். உங்கள் விண்டோஸ் இயக்கத்தில் கிளாசிக் வியூ வைத்திருந்தால், மேலே சொன்ன அனைத்தையும் பின்பற்றவும். ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் பாக்ஸில் Classic Start menu  என்பதில் கிளிக் செய்து தொடரவும். இங்கு Customize  கிளிக் செய்த பின், ஒரு வெள்ளை ஏரியா கிடைக்கும். இங்கு நீங்கள் கஸ்டமைஸ் செய்யக் கூடிய விஷயங்கள் குறித்த பட்டியல் ஒன்று கிடைக்கும். இங்கு Show Small Icons in Start menu  என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் முன்பு கூறியது போல முடித்திடவும்.


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanan - virudhunagar,இந்தியா
04-ஆக-201007:59:32 IST Report Abuse
saravanan ஆரகல் 8 எப்படி டவுன்லோட் செய்வது
Rate this:
Cancel
suresh - chennai,இந்தியா
03-ஆக-201012:55:39 IST Report Abuse
suresh எனது desktop இல் உள்ள my document open செய்தால் your current security settings do not allow this action என்று வருகிறது, இதை எப்படி சரி செய்வது
Rate this:
Cancel
S.Govindaswamy - Coimbatore,இந்தியா
03-ஆக-201004:04:17 IST Report Abuse
S.Govindaswamy ஐயா என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ் பீ o.s உள்ளது. அடிக்கடி M.S Feeds Synchronization has encountered a problem என்று பிழை செய்தி வருகிறது. எக்ஸ் பி ஓ எச் ஐ மறுபடியும் இன்ஸ்டால் செய்தாலும் இதே பிரச்சினை தொடர்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X