கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஆக
2012
00:00

கேள்வி: ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை, ப்ளாஷ் ட்ரைவிலிருந்து இயக்கலாமா? ஒரு சிஸ்டத்தில், ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தான் இயக்க வேண்டுமா? ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இயக்கினால் தான், அனைத்து வைரஸ்களையும் நீக்க முடியும் என ஒரு நூலில் படித்தேன். விளக்கம் தரவும்.
கே. ஷண்முகராஜ், கோவை.
பதில்:
ஒரு எக்ஸ்டர்னல் ட்ரைவ், சி.பி.யு.வில் வெளியே இருந்து இணைக்கப்பட்ட, ஒன்றிலிருந்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இயக்க முடியாது. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று இயங்க, ஹார்ட் ட்ரைவில் ஆங்காங்கே, சிறிய சப் ரொட்டீன் எனப்படும் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடும். இதனால் தான், அவற்றை முழுமையாக நீக்க முடிவதில்லை. உங்களுடைய ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஹார்ட் ட்ரைவில் நேரடியாகப் பதிக்கப்பட வேண்டும்.
இதற்குப் பதிலாக, சிறிய ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றிற்கான இன்ஸ்டாலர் புரோகிராம் ஒன்றினை (இலவசமாகக் கிடைக்கும் ஏ.வி.ஜி. இந்த வகையில் சிறந்தது) , ப்ளாஷ் ட்ரைவில் வைத்து இயக்கலாம். தொடர்ந்து பல்வேறு பெர்சனல் கம்ப்யூட்டர்களில் வைரஸ் சோதனையை அடிக்கடி மேற்கொள்பவர்கள் இது போல வைத்து இயக்கலாம். மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை ஒரே கம்ப்யூட்டரில் வைத்து இயக்குவதும் நல்லதல்ல. இவை கம்ப்யூட்டரில் ஒருங்கிணைந்த நிலையில் பதியப்படுவதால், ஒவ்வொன்றும் மற்றதனை வைரஸ் என மதிப்பிட்டு நமக்கு அறிவிக்கும். ஒரு புரோகிராமினால் காண இயலாத வைரஸ் புரோகிராமினை, இன்னொன்று கண்டறியும் என்பது உண்மைதான். இருப்பினும், AVG அல்லது Mcafee அல்லது Norton போன்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்துவோருக்கு இந்த சந்தேகம் வேண்டியதில்லை.
உங்கள் சந்தேகத்தினைப் போக்க, ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை சிகிளீனர், அட் அவேர் (Ccleaner /Adaware/Spybot Search and Destroy) போன்ற புரோகிராம்களுடன் (கிடைக்கும் இணைய தளங்கள்: (http://www.piriform.com/CCLEANER / http://www.lavasoft.com/products/ad_aware_ free.php/http://www.safernetworking.org/en/spybotsd/index.html) இணைந்து செயல்படுத்தலாம். இந்த புரோகிராம்களை நீங்கள் டவுண்லோட் செய்தவுடன், அண்மைக் காலத்தில் தரப்பட்ட மால்வேர் குறிப்புகளையும் டவுண்லோட் செய்து கொள்ளவும் என்ற செய்தி கிடைக்கும். அவற்றையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். மிக மிக அண்மையில் வந்த வைரஸ்களுக்கான குறியீடுகள் அடங்கிய புரோகிராம்கள் இவையாக இருக்கும். இவற்றையும் இணைக்கும்போது, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து வகையான வைரஸ்கள் மற்றும் கெடுதல் விளைவிக்கும் மற்ற வகையான புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்திலேயே, விண்டோஸ் 8 சிஸ்டம் கூடுதலாகப் பதிந்து இயக்க முடியுமா? அல்லது விண்டோஸ் 8 மட்டுமே தனியாக இன்ஸ்டால் செய்திட வேண்டுமா?
க. உதயகுமார், திருப்பூர்.
பதில்: விண்டோஸ் 8 கன்ஸ்யூமர் பிரிவியூ என்ற நுகர்வோருக்கான சோதனைப் பதிப்பு வந்ததிலிருந்து இது போன்ற கேள்விகள் நிறைய வருகின்றன. விண்டோஸ் 8 இன்னும் வர்த்தக ரீதியாக வெளிவராததால், விண்டோஸ் 7க்குப் பதிலாக விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்திட வேண்டாம். விண்டோஸ் 7 சிஸ்டம் இருக்கும்போதே, விண்டோஸ் 8 சிஸ்டத்தினையும் பதிந்து இயக்க வேண்டும். அதனால் விண்டோஸ் 7 சிஸ்டமும் பாதிக்கப்படக் கூடாது. அதற்கான வழிமுறை இதோ. இதற்கான பாதுகாப்பான வழி விர்ச்சுவல் மெஷின் (Virtual machine) என்ற வசதியைப் பயன்படுத்துவதே. இந்த வகையில் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இயங்குவது VirtualBox ஆகும். இதனை http://virtualbox.en. softonic.com/ என்ற முகவரியில் இருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது ஒரு ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர். இதனை இன்ஸ்டால் செய்து கொண்டால், இதில் உங்கள் கம்ப்யூட்டரில் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கினாலும், இன்னொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இதன் மூலம் பதிந்து இயக்கிப் பார்க்கலாம். லினக்ஸ், சோலாரிஸ், விண்டோஸ் புதிய பதிப்பு என எதனை வேண்டுமானாலும் பதிந்து இயக்கலாம். இதனை செட் அப் செய்வதும், இயக்குவதும் மிகவும் எளிது. உங்களிடம் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான ஐ.எஸ்.ஓ. இமேஜ் பைல் இருக்க வேண்டும். இல்லை எனில் அதனை மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து சிடி அல்லது பிளாஷ் ட்ரைவில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

கேள்வி: கேப்சா (CAPTCHA) டெஸ்ட் என்பது என்ன? எப்போதும் இதில் தவறு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க வழி இல்லையா?
சி. தென்றல் ராணி, சென்னை.
பதில்
: CAPTCHA என்பது, Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart” என்ற சொற்களின் சுருக்கம் ஆகும். நீங்கள் தரும் தகவல் உங்களால், விரும்பி தரப்படுகிறதா அல்லது கம்ப்யூட்டரே தானாகத் தரும்படி அமைக்கப்பட்டதா என்று சோதனை செய்வதே இந்த டெஸ்ட் ஆகும். புதிய அக்கவுண்ட் திறத்தல், நிதிப் பரிமாற்றம், இமெயில் யூசர் அக்கவுண்ட் தவறாகப் பயன்படுத்தும் முயற்சி போன்ற பாதுகாப்பு, பயனாளர் உறுதி அறியும் நிகழ்வுகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இதில் தரப்பட்டுள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களைச் சரியாக உணர்ந்து புரிந்து கொண்டு டைப் செய்திட வேண்டும். இல்லை எனில், புதியதாக இன்னொரு கேப்சா சொல் கேட்டுப் பெறலாம்.
நீங்கள் தவறு செய்தால், சரியில்லை என அறிவித்துவிட்டு புதிய கேப்சா தானாகவே தரப்படும். இது போன்ற டெஸ்ட் மேற்கொள்கையில் மிகக் கவனமாக கொடுக்கப்படும் சிறிய பெரிய எழுத்துக்களையும் எண்களையும் நன்கு தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். பலர் இந்த சோதனையில் முதல் சில முயற்சிகளில் தோல்வி அடைவதையே பழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் அவர்களின் அணுகுமுறைதான். ஆனால், இந்தச் சோதனை தரப்படுகையில், இதனை மேற்கொள்ளாமல் தொடர்ந்து செல்ல இயலாது.

கேள்வி: நான் ஆய்வுக் கட்டுரைகளை டாகுமெண்ட் பைலாக அடிக்கடி உருவாக்குபவன். வேர்ட் டாகுமெண்ட்டில், புட் நோட்களை அமைக்க, எண்களைக் கொடுத்து, பக்கத்தின் கீழாக புட் நோட் அமைக்கிறேன். பின்னர் இது மாறிவிடுகிறது. எண் மற்றும் புட்நோட்டில் பிரச்னை ஏற்படுகிறது. இதனை எப்படி சீர் அமைக்கலாம்? நான் வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன்.
என். கார்த்திக் சுந்தர், மதுரை.
பதில்
: நீங்கள் அமைத்திடும் முறை தவறு. டாகுமெண்ட் ஒன்றில், சிலவற்றை துணை விளக்கத்துடன் கூற புட்நோட் பயன்படுத்தப் படுகிறது. டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட்டில் எண் கொடுத்துப் பக்கத்தின் கீழாக மீண்டும் அதே எண் கொடுத்து புட்நோட்டை அமைக்கலாம். இதற்கு முதலில் எங்கு புட் நோட் அமைக்க வேண்டுமோ, அந்த டெக்ஸ்ட் வரியின் அருகே, கர்சரைக் கொண்டு செல்லவும். பின்னர் இன்ஸெர்ட் (Insert) மெனுவில் Reference என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Footnote and Endnote என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
இதில் புட்மார்க் எண் அல்லது எழுத்து, பக்கம் கீழாக, ஒவ்வொரு பக்கத்திலும் புதிய வரிசை எண் தொடக்கம் போன்றவற்றை, உங்கள் வசதிப்படி தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இப்போது புட்மார்க் ஒன்று டெக்ஸ்ட் அருகே கிடைக்கும். பக்கத்தின் கீழாக அதே எண் தரப்படும். இங்கு உங்கள் புட்மார்க்கை அமைக்கலாம்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்புக்கில் உள்ள படுக்கை வரிசையின் உயரத்தை அதிகப்படுத்த என்ன வழிகளை மேற்கொள்ளலாம்?
சி.மலர்விழி, கம்பம்.
பதில்:
பொதுவாக, எக்ஸெல் படுக்கை வரிசை ஒன்றின் உயரத்தை, அதில் பயன்படுத்தப்படும் எழுத்துவகையின் அளவைக் கொண்டு செட் செய்கிறது. ஆனால், நீங்கள் விரும்பினால், விரும்பிய அளவில் அதனை செட் செய்திடலாம். இதற்கு எளிதான வழி மவுஸ் கொண்டு அமைப்பது. மவுஸ் பாய்ண்ட்டரை, வரிசையின் ஹெடர் ஏரியாவிற்குக் கொண்டு செல்லவும். வரிசையின் இடது ஓரத்தில் இந்த ஏரியா தென்படும்.
இங்கு கர்சரை நகர்த்துகையில், அது இரண்டு தலை உள்ள அம்புக் குறியாக மாறும். இந்நிலையில், மவுஸின் இடது பட்டனை அழுத்திக் கொண்டு அப்படியே பார்டரை புதிய இடத்திற்கு இழுக்கவும். மவுஸ் பட்டனை விட்டுவிட்டால், அந்த இடம் வரை படுக்கை வரிசையின் உயரம் அமையும்.
இதற்கு இன்னொரு வழியும் உள்ளது.
1. எந்த வரிசையில் உள்ள செல்களின் உயரத்தை அதிகப்படுத்த எண்ணுகிறீர்களோ, அந்த வரிசையில் ஏதேனும் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக்கவும். பல வரிசைகளில் உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்தால், ஒரே நேரத்தில் அனைத்து வரிசைகளின் உயரத்தினை மாற்றலாம்.
2. தேர்ந்தெடுத்த பின்னர், Format மெனு சென்று Row என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் மேலும் ஒரு சின்ன மெனுவினைக் காட்டும்.
3. இந்த மெனுவில் Height ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Row Height டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இந்த டயலாக் பாக்ஸில், வரிசைக்கான நீங்கள் விரும்பும் உயரத்தினைத் தேர்ந்தெடுக்கலாம்.
4. தேர்ந்தெடுத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி குறிப்பிட்ட படுக்கை வரிசையில் செல்களின் உயரம் நீங்கள் தேர்ந்தெடுத்து அமைத்த வகையில் இருக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மேரவை . நாத் - சென்னை,இந்தியா
15-ஆக-201210:40:00 IST Report Abuse
மேரவை . நாத் அற்புதமாக உள்ளது. இ மலர் ஆக மட்டுமின்றி புத்தகமாகவும் வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ராவணம் - சென்னை,இந்தியா
14-ஆக-201211:37:57 IST Report Abuse
ராவணம் naarmal posision reinstall windows laptop c&39 folder and dvd drive மட்டும் காட்டும் நான் பூட் செய்தால் 2 folder c&39d உள்ளே கம்ப்யூட்டர் programme file save ஆகுது and cd and dvd drive win 7 நார்மலாக ஆகாது பின்னே எதாவது மிஸ்டேக் ஆக இருக்கலாம் தெளிவு செய்யவும் i try 2 ,3 computer .all same ..
Rate this:
Share this comment
Cancel
லக்ஷ்மண குமார் - புதுதில்லி,இந்தியா
13-ஆக-201206:55:41 IST Report Abuse
லக்ஷ்மண குமார் நான் எனது கம்ப்யுட்டரில் தமிழ் எழுத்துக்களை வைத்து உபயோகிக்க விரும்புகிறேன். அதை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது. உதவவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X