கலைக்கூடங்களாகும் குகைகள் | மஞ்சரி | Manchery | tamil weekly supplements
கலைக்கூடங்களாகும் குகைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஆக
2012
00:00

400 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஆக்டோவிலியன் காலத்தில் ஆழமில்லாத கடல் பரப்பில் ஒன்றன் மீது ஒன்றாக சுண்ணாம்பு பாறைகள் அடுக்காக ஏற்பட்டன. காலப்போக்கில் தண்ணீர் மட்டம் குறையக்குறைய, மேலே இருக்கும் சுண்ணாம்பு பாறைகள் அடுக்காக ஏற்பட்டன. காலப்போக்கில் தண்ணீர் மட்டம் குறையக்குறைய, மேலே இருக்கும் சுண்ணாம்பு பாறைகளின் நடுவில் காற்று புகுந்து இடைவெளி ஏற்பட்டது.
அந்த இடைவெளிகளில் பனிப்பொழிவுகள் விழுந்து கார்பன் டை ஆக்ஸைடு சேர்ந்து கார்பானிக் அமிலமாக மாறியது. இந்த கார்பானிக் அமிலம் கொஞ்சம் கொஞ்சமாக சுண்ணாம்பு பாறைகளை கரைத்து கொண்டே போனது. இந்த ரசாயன மாற்றத்தினால் சுண்ணாம்பு பவிவங்கள் கரைந்து மிகப்பெரிய வெடிப்புக்களை ஏற்படுத்தி, அதனால் ஏற்பட்ட இடைவெளிகள் குகைகளாக மாறின.

இந்த குகைள் பூமியின் கீழே பல நூறு அடிகள் விரிந்து காணப்படுகின்றன. நாட்பட நாட்பட மழைநீர் துளித்துளியாக உள்ளே இறங்கி, குகைகளின் உள்ளேயிருக்கும் காற்று, வாயுடன் கலந்து கிறிஸ்டல் எனப்படும் உப்பு போன்ற படிவங்களாக மாறுகின்றன.
இந்த உப்புடு படிகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து குகைளின் மேல்விதானத்திலிருந்து கம்பிகள் போன்ற ஊசிப்பாறைகள் உருவாகின்றன. இதற்கு ஸ்டாலக்டைட் என்று பெயர். சொட்டுசொட்டாக விழும் நீர் சில இடங்களில் கீழே இருந்து மேலாகவும் வளருகின்றன. அதற்கு றூரநரகலடாம என்று பெயர். இந்த பவிவங்கள் கைதேர்ந்து சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான சிற்பங்கள், சிலைகள் போலக் காணப்படுகின்றன. சில அழகான தூண்கள் பேளூர் ஹளேபீடு, சாளுக்கியர் பாணி தூண்களை போலக் காட்சியளிக்கின்றன.
காணக்கிடைக்காத, மனிதனின் கற்பனைக்கு எட்டாத இந்த அதிசய குகைகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. ஆனால் விஞ்ஞான பூர்வமான மேலே சொன்ன விவரங்கள் தவிர கதைகள் எதுவும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு, விஸ்கான்ஸின் (வடஅமெரிக்கா) மாகாணத்தின் மாடிஸன் எனும் ஊரிலிருந்து 20 மைல் தூரம் பயணித்து, மேற்கு திசையில் நெடுஞ்சாலை 18ல் அமைந்திருகு“கும் இந்த குகைகளை காணும் பேறு எனக்கு கிடைத்தது. கேவ்ஸ் ஆப் தி மவுண்ட்ஸ் என்பது இதன் பெயர். மிகவும் அருமையாக பராமரித்து வருகின்றன. புøகீப்படங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் எதுவும் இன்றி எடுத்து கொள்ளலாம். ஆனால் இந்த பாறைகள் படிவுகளை தொட மட்டும் அனுமதி இல்லை. தொட்டால் நமது கைகளில் இருக்கும் பிசுக்கு, அழுக்கு இவைகளினால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதாம். ஒரு ப்க்யூபிக் இஞ்ச் வளர்ச்சியடைய 100 லிருந்து 200 வருடங்கள் பிடிக்கும்.
இதே போன்ற குகைகள் அந்தமான் தீவுகளிலும் போரா காங் ஆந்திராவின் விசாகப்பட்டிணத்தில்ம் ஓரிஸ்ஸாவிலும் இருக்கின்றன. விசாகாப்பட்டினத்தில் இருகு“கும் போரா குககைள் மிகவும் புகழ் பெற்றவை. ஆனால் இந்தியாவில், அந்தமானில் இருக்கும் குகை உருவங்களுக்கு சிவன், ரிஷிகள், காமதேனு, பிரம்மா என்று தம்மிஷ்டப்படி கதைகள் சொல்லுகின்றனர். அறிவியலுக்கும், புராணங்களுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உண்டு. எல்லாமே அவரவர்களின் நம்பிக்கைகளை பொருத்திருக்கின்றன. நம்மவர்களுக்கு தான் கற்பணைவளம் அதிகமாயிற்றே.
இந்த விசாகப்பட்டினம் போரா குகையின் ஆழத்தில் ஒரு சிவலிங்கமும் அதன் மேலே ஒரு பசு (காமதேணுவின்) உருவமும் காணப்படுகின்றன. பசுவின் பால் மடியிலிருந்து தான் கோஸ்தானி ஆறு மீறிட்டு கிளம்புகிறது. குகையிலிருந்து பெருகும் கோஸ்தானி நதி ஒரிஸா மாநிலம் வரை போகிறது. குகை வாயிலுக்கு சற்று தொலைவிலிருந்து பார்த்தால் கிழக்கு தொடர்ச்சி மலையிருந்து மெல்லிய நீர் வீழ்ச்சிபோல் உருவாகும்.
கோஸ்தானி ஆறு போரா குகைகயில் அடிவாரத்தை வந்தடைவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். இங்கு உற்பத்தியாகும் இந்த மிகச்சிறிய ஓடை தான் விசாகப்பட்டினம் நகரின் மக்களுக்கு குடி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. 1807 ஆம் வருடம் ஜியாலாஜிகல் சர்வே ஆப் இந்தியாவை சேர்ந்த வில்லியம் கிங் ஜார்ஜ் என்பவரால் தான் இந்த போரா குகைகள் இருப்பது தெரியவந்தது. போரா ஒரு சிறிய கிராமம்.
இது விசாப்பட்டினத்திலிருந்து 90கி.மீ. தூரத்தில் அனந்தகிரி மண்டலம் மலைகளில் நடுவே சிருங்கவரபுகோட்டா தாலுகாவில் அமைந்துள்ளது. விசாகப்பட்டினத்திலிருந்து ரயில் மூலம் 5. அல்லது 6 மணி நேரப்பயணத்தில் போரா குகைகளை அடையலாம். வழியில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அழகையும் கண்டு களிக்கலாம். வழியில் முப்பது குகைகள் வழியாக ரயிலில் பயணம் ஒரு இனிய அனுபவம். மரங்கள் அடநர்த் காட்டுப்பாதை, தியோடா ரயில் குகைப்பாதை, தமுக்கு வியூ பாய்ண்ட், அனந்தகிரி காப்பித்தோட்டம், பத்மபுரம் தோட்டங்கள், அரசு பள்ளத்தாக்கு ஆகிய கண்களை கவரும் இயற்கை அழகுகள் போராகுகைகளை தரிசிப்பதற்கு முன்னாலேயே கிடைக்கும் கக்ஷýடுதல் அனுபவங்கள், அரசுக்கு பள்ளத்தாக்கு இங்கிருந்து 29 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த குகைகளை பற்றி கர்ணபரம்பரை கதைகள் உள்ளன. ஒரிஸ்ஸாவின் ஜெய்ப்பூரை ஆண்ட ம்னன் ஒரு மானை துரத்தி கொண்டு வேட்டையாட வந்தபோது அது இந்த குகைகள் புகுந்து கொண்டதாகவும், கோண்ட்ஸ் பழங்குடி மக்களின் துணையுடன் அரசன் இந்த குகைக்குள் நுழைந்தபோது அங்கு மான் காணப்படவில்லை. மாறாக, குகையின் நடுவே ஒரு சிவலிங்கமும் அதை குடைபிடித்து கொண்டிருந்த ஒரு ஐந்து தலை நாகமும் காணப்பட்டனவாம். இந்த சிவன் தான் மான் வடிவில் அரசன் முன்பு வந்ததாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு சிவராத்தியன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடுகின்றன. இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு இது ஒரு முக்கியமான திருவிழா.
ஆந்திர பிரதேச சுற்றுலாத்துறையினர் குகைப்பகுதியில் அறுபதுக்கும் மேற்பட்டமெர்குரி, சோடியம் வாயு, ஹாலோஜன் விளக்குகளை ஆங்காங்கே அமைத்திருக்கின்றனர். காலையில்ஏழரை மணிக்கு விசாகப்பட்டினத்திலிருந்து கிளம்பும் ரயில், நண்பகல் ஒரு மணியளவில் போராகுகை நிலையத்தை அடைகிறது. அதை பார்த்துவிட்டு சிறிய வேன்கள் மூலம் அரக்கு பள்ளத்தாக்கையும் காணலாம். பின்னர் மாலை ஐந்தரை மணிக்கு அதே ரயிலில் திரும்பி விடலாம். அரக்கு பள்ளத்தாக்கு இயற்கை எழில் கொஞ்சும், அவசியம் காணவேண்டிய இடம், போரா குகைகளில் சுற்று வட்டாரத்தில் மைக்காவும், ரூபிகற்களும் அபரிமிதமாக கிடைக்கின்றன. அமெரிக்காவின் விஸ்கான்ஸின் குகைகளில் இருக்கும் பாதுகாப்பு, கட்டுப்பாடு, ஒழுங்கு இங்கு இல்லை.
அமெரிக்காவின் விஸ்கான்ஸின் ஓர் அமைதியான சூழல் என்றால் போராகுகை சந்தடிகளுக்கிடையே காணப்படும் சூழலாக அழகுடன் விளங்குகிறது. ஆண்டிற்கு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் போரா குகைகளை தரிசித்து செல்கின்றனர்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X