கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஆக
2012
00:00

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், பின்னங்களை அமைக்கும் போது 1/2 என்று தோன்றுகிறது. இதற்குப் பதிலாக சிறிய அளவில், வேர்ட் தானாக அமைக்கும் வகையில் செட் செய்வது எப்படி? நான் வேர்ட் 2003 மற்றும் வேர்ட் 2010 பயன்படுத்துகிறேன்.
க.தேன்மலர், பொள்ளாச்சி.
பதில்
: நல்ல கேள்வி. முதலில் வேர்ட் 2003 தொகுப்பிற்குண்டான செட் செய்திடும் வழிகளைத் தருகிறேன். டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு Tools கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Auto Correct Options கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் Auto Correct as you type என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு மூன்றாவதாக, Fractions (1/2) with fraction character என ஒரு ஆப்ஷன் கிடைக்கும். இதன் தொடக்கத்தில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் விரும்பிய வகையில் சிறிய அளவில் பின்னம் கிடைக்கும்.
அடுத்து வேர்ட் 2010 தொகுப்பில் என்ன செய்திட வேண்டும் எனப் பார்ப்போம். “File” டேப் கிளிக் செய்து தொடர்ந்து “Options” டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், “AutoFormat as You Type” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு “Replace Fractions With Fraction Characters” என்று இருக்கும் வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இந்த ஆப்ஷன் வேர்ட் 2010 தொகுப்பில் மாறா நிலையில் தரப்படுகிறது. எனவே நீங்களாக மாற்றியிருந்தால் தான், பெரிய அளவில் பின்னம் காட்டப்படும்.

கேள்வி: கூகுள் நிறுவனம் தான் தொடங்கிய, வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் வசதி தரும் திட்டங்களை மூடிவிட்டதாகவும், கைவிட முடிவெடுத்திருப்பதாகவும் எழுதி இருக்கிறீர்கள். இதன் காரணம் என்ன? ஐந்து திட்டங்கள் தான் கைவிடப்பட்டுள்ளனவா?
எஸ். ஆர்ம்ஸ்ட்ராங், சென்னை.
பதில்
: சரியான காரணம் கூகுள் நிறுவனம் தான் சொல்ல வேண்டும். கூகுள் எப்போதும் தன் ஆராய்ச்சிப் பிரிவிலிருந்து, புதிய புதிய வசதிகள் தரும் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. சில வேளைகளில் அவற்றைப் பின்பற்ற வாடிக்கையாளர்கள் முன் வருவதில்லை. சில தொழில் நுட்ப காரணங்களால் தொடர்ந்து இயலாமல் போய்விடுகின்றன. புதிய திட்டங்கள் சில கூடுதல் வசதிகள் தருவதாயும், அல்லது ஏற்கனவே தரப்படும் வசதிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றன. இப்படி பல காரணங்களுக்காக இவை கைவிடப்படுகின்றன. ஐந்து திட்டங்கள் இல்லை; இன்னும் அதிக எண்ணிக்கையில் தன் திட்டங்களைக் கைவிட்டுள்ளது கூகுள். சிலவற்றை நிறுத்திவிட முடிவெடுத்துள்ளது. எனக்குத் தெரிந்த அவற்றின் பெயர்களை இங்கு கூறுகிறேன்.
Google Wave, Google Buzz, Google’s “Plus”, Google Sync for BlackBerry, Google Desktop, Google Notebook, Google Friend Connect, Picnik, Needlebase, Social Graph API, One Pass, Google Related, Google Video,Google Talk Chatback மற்றும் iGoogle.

கேள்வி: நீண்ட நாட்கள், ஏன் ஆண்டுகள், நம் டேட்டாவினைப் பாதுகாக்க எந்த நிறுவனத்தின் சிடி/டிவிடிக்களை வாங்கலாம்?
என். சங்கமித்ரன், கோவை.
பதில்
: நீண்ட ஆண்டுகள் டேட்டாவினைப் பாதுகாத்து வைக்க, சிடி/டிவிடிக்கள் உகந்தது அல்ல. இருப்பினும், தங்கள் கேள்விக்கான பதிலைத் தருகிறேன். இந்த வகையில் எந்த ஒரு நிறுவனத்தையும் பரிந்துரைக்க விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, எந்த பொருள் கொண்டு, இந்த சிடி/டிவிடிக்கள் தயாரிக்கப்பட்டால், அவை பல ஆண்டுகள்(!) டேட்டாவைக் காப்பாற்றி வைத்திருக்கும் என்பதனைப் பார்க்கலாம்.
1. அழித்து மீண்டும் எழுதும் வசதி கொண்ட சிடிக்களில் வெகுநாட்கள் டேட்டாவைப் பத்திரமாக வைத்திருக்க இயலாது.எனவே CDR/+R அல்லது DVDR/+R ஆகியவற்றையே பயன்படுத்தவும்.
2. சிடி/டிவிடிக்களை காற்று மற்றும் சூரிய ஒளியில் படும்படி வைக்கக் கூடாது.
3. காகித உறை அல்லாத வேறு பாதுகாப்பான பெட்டிகளில் வைத்துப் பாதுகாக்கவும்.
4.லென்ஸ் டிஷ்யூ, மைக்ரோ பைபர் துணி கொண்டு, டேட்டா எழுதப்படும் பகுதியில் உள்ள சிறு தூசுகள் மற்றும் படிந்த விரல் ரேகைகளைச் சுத்தம் செய்திடவும்.
5. சிடி/டிவிடிக்களில் எழுதினாலும், அவற்றிற்கு இன்னொரு காப்பி பேக் அப் எடுத்து வைப்பது நல்லது.
பல ஆண்டுகள் டேட்டாவைப் பாதுகாக்க இவற்றைப் பயன்படுத்த எண்ணினால், இவற்றில் ஒளி பிரதிபலிக்க என்ன வகையான பொருளும், வண்ணப் பூச்சும் பயன்படுத்தப்படுகிறது என்பதனை, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து அறிந்து கொண்டு முடிவெடுக்கவும். பளபளக்கும் பகுதியில் தங்கம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டால், அவையே உங்கள் முதல் விருப்பமாக இருக்கட்டும். 300 ஆண்டுகள் வரை இவை டேட்டாவினைக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்படுகிறது.
இரண்டாவதாக, தங்கம் மற்றும் வெள்ளி கலந்த கலவையை இதற்குப் பயன்படுத்துவது. இவை அடுத்த நிலையில் தரம் கொண்டவை. வெள்ளி மட்டும் பயன்படுத்தப்படுவது, மூன்றாவது தர நிலையைக் கொண்டிருக்கின்றன.
பிரதிபலிக்கும் நிலையைத் தர, சில வண்ணப்பூச்சுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் என்ன வகையான வண்ணப் பூச்சினைப் பயன்படுத்துகின்றன என்று அறியலாம். இதில் மிகச் சிறந்தது
Phthalocyanine என்ற வண்ணப் பூச்சாகும். அடுத்த நிலையில் அத்ணி என்ற வண்ணப் பூச்சு வருகிறது. மூன்றாவது தர நிலையில் Cyanine என்பது பயன்படுகிறது.
வெகுநாட்கள் உழைக்கும் என்ற வகையில் சிடிக்கும் டிவிடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. டேட்டா கொள்ளளவு தான் வேறுபடும். இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். டேட்டா பதிவு செய்த டிவிடி, கெட்டுப் போய்விட்டால், அதிக அளவில் டேட்டா இழப்பு ஏற்படும். சிடி எனில் டேட்டா இழப்பு கொஞ்சம் தான். எனவே எது உங்களுக்கு நல்லது எனத் தெளிந்து பயன்படுத்தவும்.

கேள்வி: விண்டோஸ் இயக்கத்தில் 16, 32 மற்றும் 64 பிட் இயக்கம் என்றும், எண் உயருகையில் அது கூடுதல் வேகத்தில் செயல்படும் என்றும் கூறுகின்றனர். இது எனக்கு புரியவில்லை. விளக்கவும்.
ஆ.கிருஷ்ணன், நூலகர், செய்யாறு.
பதில்:
நல்ல கேள்வி தான். தகவல்கள் பிட்களில் சேமிக்கப்படுகின்றன; தன் ஒரு நிலையில் எத்தனை பிட்களை ப்ராசசர் படிக்கிறதோ, அதனைத்தான் இது குறிப்பிடுகிறது என்று கூறி மேலும் தெளிவற்ற நிலையை உங்களுக்குத் தரவில்லை. உங்களுக்குப் புரியும்படி சொல்கிறேன். உங்கள் நூலகத்தில் பல ஷெல்புகள் இருக்கின்றன. அவற்றில் அழகாக புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறீர்கள். இவற்றை புதிய ஷெல்புகளில் மாற்றி அடுக்க விரும்புகிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஒரு புத்தகமாக எடுத்து வைக்க மாட்டீர்கள். ஒரே நேரத்தில் எட்டு புத்தகங்களை, இரு கைகளுக்கிடையே வைத்து மாற்றுகிறீர்கள். இதையே 16 அல்லது 32 புத்தகத்தை ஒரு நேரத்தில், கைகளுக்கிடையே இறுக்கி எடுத்து அடுக்கினால், விரைவில் வேகமாக புத்தகங்கள் இடம் மாறும் அல்லவா? இப்படித்தான் பிட் முறையும். நாம் பிட்களில் பதிந்து வைக்கும் தகவல்களை, சில ப்ராசசர்கள் 32 பிட்களிலும், சில 16 பிட்களிலும் எடுத்துப் படிக்கின்றன. ஒரு விநாடியில் பல்லாயிரக்கணக்கான முறை படிக்கின்றன. நமக்கு வேலை முடிகிறது. அதனால் தான் பிட் எண்ணிக்கை அதிகரிக்கையில், வேலை முடியும் நேரமும் குறைகிறது.

கேள்வி: கம்ப்யூட்டர் மலரில் சொல்லியதாக, என் நண்பன் கூறிய டிப்ஸ் படி, வேர்ட் டாகுமெண்ட்டில் ஆல்ட்+ஷிப்ட்+டி கொடுத்தேன். அன்றைய தேதி இணைக்கப்படுவதற்குப் பதிலாக, நேரம் இணைக்கப்படுகிறது. நண்பர் தனக்கு சரியாகக் கிடைக்கிறது
என்கிறார். நாள் இணைக்க என்ன செய்திட வேண்டும்.
கா. மனோஜ் குமார், சென்னை.
பதில்
: உங்கள் கேள்வியிலேயே நீங்கள் செய்த தவறு இருக்கிறது. ஆங்கிலத்தில் இரண்டு எழுத்துக்களை “i” என உச்சரிக்கிறோம். அவை D மற்றும் T ஆகும். உங்கள் நண்பர் சொன்னது Alt + Shift + D. நீங்கள் கொடுத்ததோ Alt + Shift + T. அதனால் தான் இந்த மாற்றம். சற்று சிந்தித்திருந்தால், தவற்றை உணர்ந்திருப்பீர்கள்.
இன்னும் ஒரு கூடுதல் தகவல் தரட்டுமா? பவர்பாய்ண்ட் ஸ்லைடில் Alt + Shift + D அல்லது Alt + Shift + T என்ற கீ தொகுப்புகளைக் கொடுத்தால், டைம் மற்றும் டேட் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் இருந்து நீங்கள் எதனை இடைச் செருக வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து கொள்ளலாம்.
இன்னொன்றும் சொல்லட்டுமா? எக்ஸெல் தொகுப்பில் Ctrl + ; (semicolon)கொடுத்தால் அன்றைய தேதி ஒர்க்ஷீட்டில் அமைக்கப்படும். Ctrl + Shift + : (colon) கொடுத்தால் அப்போதைய நேரம் செருகப்படும். இனிச் சரியாக கீகளை அழுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

கேள்வி: டூயல் பூட் என்று ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் திறன் குறிப்பிடப்படுகிறதா? அல்லது இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டமா? இரண்டு சிஸ்டங்களில் ஒரு கம்ப்யூட்டரை ஏன் பூட் செய்திட வேண்டும். நோட்ஸ் தரவும்.
எஸ். ராமகிருஷ்ணன், விருதுநகர்.
பதில்:
நல்ல கேள்வி. நன்றி. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றில், இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பதிந்து இயக்கும் வசதியையே டூயல் பூட் என்று அழைக்கிறோம். இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க விரும்புகிறீர்கள் என்று நீங்களே கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது தீர்மானிக்கலாம். எடுத்துக் காட்டாக உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டா என இரண்டு மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நிறுவிப் பயன்படுத்தலாம். Boot loader என்ற புரோகிராம் மூலம் நீங்களே இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை பதிந்து இயக்கலாம். என்ன செய்யப் போகிறோம் என்பதனை நன்கு உணர்ந்து படித்து அறிந்து கொண்டு செய்வது நல்லது.
எதற்காக இந்த டூயல் பூட் வசதி? நல்ல கேள்விதான். வேலியில் போற ஓணான் கதையாக இது ஆகக் கூடாது அல்லவா! எனவே இதனையும் தெளிவு செய்து கொள்வது நல்லது. நீங்கள் ஏற்கனவே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி அதனுடன் நல்ல பரிச்சயம் கொண்டிருக்கிறீர்கள். அதுவே உங்களுக்குப் போதும். ஆனால் புதியதாக ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வருகிறது.
அதற்கு உடனே மாறுவதற்குத் தயங்கலாம். ஆனாலும் அது எப்படி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்க்க ஆவல்.
இந்த வேளையில் தான் டூயல் பூட் உங்களுக்குப் பயனபடுகிறது. எடுத்துக் காட்டாக விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தில் பல ஆண்டுகள் பழகி இருக்கலாம். விண்டோஸ் 7குறித்து கேள்விப்பட்டு அதனையும் இயக்கிப் பார்க்க ஆவலாக இருக்கும். அதே நேரத்தில் விஸ்டாவினையும் முழுமையாக விட்டுவிடக் கூடாது. இரண்டையும் கம்ப்யூட்டரில் பதிய வைத்து டூயல் பூட் முறையில் இயக்கலாம். அப்ளிகேஷன் புரோகிராம்கள் எந்த சிஸ்டத்தில் சிறப்பாகவும் முழுமையாகவும் இயங்குகின்றன என்று கண்டறியலாம்.
கூடுதலாக விண்டோஸ் 7 மட்டுமின்றி, விண்டோஸ் இயக்கத்துடன் லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் பதித்து டூயல் பூட் முறையில் இயக்கலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prathap - Madurai,இந்தியா
25-ஆக-201215:16:47 IST Report Abuse
Prathap ஐயா, நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். எனது prive ஐ வேறு சிஸ்டத்தில் பயன்படுத்தும்போது சரியாக உள்ளது. ஆனால் என் சிஸ்டத்தில் பயன்படுத்தும்போது மட்டும் அடிக்கடி எல்லா files , folder எல்லாம் shortcut ஆக தானாக மாறிக்கொள்கிறது . அதற்கு என்ன செய்வது ?
Rate this:
Share this comment
Cancel
hariharan - karur,இந்தியா
25-ஆக-201213:38:43 IST Report Abuse
hariharan வணக்கம் என் பெயர் ஹரிஹரன் நான் தமிழக அரசு வழங்கிய லெனோவா கணினி பயன்படுத்தி வருகிறேன் . என் போன்ற மாணவர்களுக்கு கணினி பயன்பாடு மற்றும் பாதுகாப்பு பற்றிய ஒரு தொடர் விளக்கம் வேண்டும் . தினமலர் மற்ற உபயோகமான பதிவுகளைப்போல இதனையும் செய்யும் என எதிர்பார்க்கிறேன் .
Rate this:
Share this comment
Cancel
kasi - dindigul,இந்தியா
23-ஆக-201212:28:58 IST Report Abuse
kasi hello sir enaku ms office 2010 fulla tamil la padikanum nu aasai inayathalathil eppadi padikalam enna mugavariyil padikalam arivurai koorungal
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X