கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஆக
2012
00:00

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். இதன் பேக் கிரவுண்ட் கலரை, என் வால் பேப்பருக்கேற்றவாறு மாற்றும் வழி எது? சற்று விரிவாக விளக்கவும்.
ஆ. பசுபதி பாண்டியன், மதுரை.
பதில்:
பலருக்கு இது ஒரு பிரச்னை. அழகாய் சில வண்ணங்களில், மிக அருமையான படம் ஒன்றை வால் பேப்பராக எடுத்து அமைத்திருப்பார்கள். ஆனால், சிஸ்டத்தின் பின்புற வண்ணம் இதனோடு இணைந்து செல்லாமல், படத்தின் அழகைக் கெடுக்கும். எனவே பேக் கிரவுண்ட் வண்ணத்தை மாற்றினால்தான், இது சரியாகும். எப்படி மாற்றுவது என இங்கு பார்க்கலாம். முதலில், டெஸ்க்டாப்பில் காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Personalize என்பதற்குச் செல்லவும். அடுத்து, கீழாக Desktop Background என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோவில், Change background color என்பதில் கிளிக் செய்திடவும். இது Picture position என்ற தலைப்பின் கீழ் இருக்கும். இங்கு நீங்கள் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்க வண்ணங்கள் நிறைந்த கட்டம் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த அல்லது உங்கள் வால் பேப்பருக்கு அழகூட்டும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, உங்கள் மனது பதைபதைக்காமல் வால் பேப்பரைக் கண்டு சந்தோஷப்படலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க் கிட்டத்தட்ட நிறைந்துவிட்டதாகக் காட்டப்படுகிறது. நான் எந்த புதிய புரோகிராமினையும் இன்ஸ்டால் செய்திடவில்லை. சிலவற்றை அழித்த பின்னரும், அதே எச்சரிக்கை செய்தி வருகிறது. டிஸ்க் கிளீன் அப் புரோகிராமினையும் இயக்கிப் பார்த்தேன். அதன் பின்னரும் எச்சரிக்கை செய்து வருவது நிற்கவில்லை. என்ன பிரச்னை? தீர்வு என்ன?
என். நிரஞ்சன் தாஸ், சென்னை.
பதில்:
ஹார்ட் ட்ரைவ் நிறைந்துவிட்டால், அதனால் பல பிரச்னைகள் ஏற்படலாம். கம்ப்யூட்டரின் செயல்பாடு மிக மெதுவாக மாறலாம். இறுதியில் ஹார்ட் டிஸ்க் போச்சு என்ற நிலை ஏற்படலாம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றை இங்கு பட்டியலிடுகிறேன். நீங்கள் அந்தக் காரணங்கள் உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் உள்ளனவா என்று பார்க்கவும்.
1. ஹார்ட் டிஸ்க் நிறைந்திருக்கும். பல புரோகிராம்களையும் பைல்களையும் கொண்டு ஹார்ட் டிஸ்க்கினை நிறைத்திருப்பீர்கள். இந்தச் சூழ்நிலையில், உங்கள் பெர்சனல் பைல்களை வேறு ஒரு போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றவும். Clean up ஒரு சிறந்த புரோகிராம் என்றாலும், அது தேவையற்ற புரோகிராம்களையும் பைல்களையும் மட்டுமே நீக்கும்.
2. அடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கலாம். இவை கம்ப்யூட்டரைப் பாதிப்பதுடன், ஹார்ட் டிஸ்க்கில் பலவாகப் பெருகி இடத்தை அடைக்கும். நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு இவற்றைக் கண்டறிந்து நீக்கவும். தயவு செய்து, இன்டர்நெட்டில் உலா வருகையில், உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கிறது. இலவசமாக கிளீன் செய்ய இங்கு கிளிக் செய்திடவும் என்ற செய்தியும் லிங்க்கும் கிடைத்தால், உடனே அதனை அலட்சியம் செய்துவிடுங்கள்.
3. ஹார்ட் டிஸ்க் அதன் தன்மையை இழக்கிறது. வயதானால், நாம் நம் செயல் திறனை இழக்கிறோம் இல்லையா! அதே போல தொடர்ந்து பயன்படுத்தப்படும் ஹார்ட் டிஸ்க் அதன் செயல் தன்மையை இழக்கும். எனவே ஆண்டுகள் சில (அதிகம் ஐந்து ஆண்டுகள்) ஆகிவிட்டால், வேறு ஒரு புதிய ஹார்ட் டிஸ்க்கினைப் பயன்படுத்தவும்.

கேள்வி: என் மகன் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். அவருக்கு கம்ப்யூட்டர் வாங்க வேண்டும். லேப்டாப் நல்லதா? டெஸ்க்டாப் நல்லதா?
சி. அய்யனார், சிவகாசி.
பதில்:
உங்கள் மகன் என்ன சொல்கிறார்? அவர் உங்கள் வீட்டில் தங்கி இருந்து கல்லூரிக்குச் செல்கிறாரா? அல்லது கல்லூரி மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கிறாரா? கல்லூரிப் பாடங்களுக்குப் பயன்படுத்துவதுடன், வேறு எங்காவது எடுத்துச் சென்று கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டி உள்ளதா? இந்த தகவல்களின் அடிப்படையில் தான் நீங்கள் எந்த வகைக் கம்ப்யூட்டரை வாங்க வேண்டும் என்பதனை முடிவு செய்திட வேண்டும். இருப்பினும் சில வேறுபாடுகளையும் அம்சங்களையும் கூறுகிறேன்.
இரண்டையும் ஒப்பிடுகையில், டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் விலை குறைவு. இதில் இயங்கும் சாதனங்களின் திறனை எளிதாகவும், குறைந்த விலையிலும் உயர்த்திக் கொள்ளலாம். இதற்கான சர்வீஸ் கட்டணம் குறைவு. ஆனால், பெரியதாக இருக்கும்; எடுத்துச் சென்று பயன்படுத்துவது மிக மிகக் கடினம். மானிட்டர், கீ போர்ட், மவுஸ் தனியே இணைத்துப் பயன்படுத்த வேண்டும். இவற்றைத் தனியாக வாங்கலாம்.
லேப்டாப் கம்ப்யூட்டரை எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்; விலை சற்று அதிகம். மானிட்டர், கீ போர்ட், மவுஸ், வெப் கேமரா, ஸ்பீக்கர், மைக் ஆகியவை இணைந்தே இருக்கும். சர்வீஸ் செய்யப் போனால், கட்டணம் சற்று அதிகமாக இருக்கும். அளவில் சிறியதாக இருப்பதால், கம்ப்யூட்டர் இயங்கும் போது வெப்பம் உண்டாகும். இது தொடர்ந்து அதிகம் உண்டாவது நல்லதல்ல. எனவே, உங்கள் மகன் வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வார் என்றால், வீட்டில் வைத்து மட்டுமே கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டும் என்றால், டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை வாங்கித் தரவும். இல்லை எனில், சற்று விலை அதிகமாக இருந்தாலும், லேப்டாப் கம்ப்யூட்டரையே வாங்கவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டர் பூட் ஆக வெகு நேரம் ஆகிறது. பூட் ஆகும் போது தேவைப்படாத புரோகிராம்கள் இயங்கத் தொடங்குவதால் இது ஏற்படலாம் என ஒரு கட்டுரையில் படித்தேன். எந்த புரோகிராம்ள், பூட் ஆகும்போது இயக்கப்பட வேண்டும்?
என். சிந்தியா டேவிட், சென்னை.
பதில்:
ஆம். பூட் ஆகும்போது தாமாக இயங்கத் தொடங்கும் புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால், நிச்சயம் பூட் ஆகும் நேரம் அதிகமாகும். பொதுவாக கம்ப்யூட்டர் ஒன்று பேக்டரியிலிருந்து வெளியேறி வருகையிலேயே நிறைய ஆட்டோ லோட் எனப்படும் தாமாக இயங்கும் வகையில் செட் செய்யப்பட்ட புரோகிராம்களுடனேயே வருகின்றன. மேலும் பயன்படுத்துபவர்களும் நிறைய புரோகிராம்களை அவ்வப்போது இன்ஸ்டால் செய்கின்றனர். அவ்வாறு இன்ஸ்டால் செய்திடுகையில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே அந்த புரோகிராமினைப் பூட் செய்திடவா? என்ற கேள்வி கேட்கப்படும். இதனைச் சரியாகப் படிக்காமல், யெஸ் எனப் பதிலளிப்பதால், அவையும் பூட் ஆகும்போது இயக்கப்படும் பட்டியலில் சேர்ந்து விடுகின்றன. எனவே எவை எல்லாம் நாம் கட்டாயம் பயன்படுத்துவோமோ மற்றும் பாதுகாப்பான கம்ப்யூட்டிங் செயல்பாட்டிற்குத் தேவையோ அவற்றை மட்டும் தானாக இயக்கப்படும் வகையில் அமைக்க வேண்டும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், பயர்வால், லேப்டாப் கம்ப்யூட்டராக இருந்தால் பவர் மேனேஜ்மெண்ட் மற்றும் பேட்டரி மானிட்டரிங் புரோகிராம் ஆகியவை கட்டாயம் நமக்குத் தேவை. நீங்கள் தமிழில் ஆவணங்களைத் தயாரிப்பவர் என்றால், அதற்கான புரோகிராம்கள் மற்றும் ட்ரைவர்கள் ஆகியவற்றை இந்த பட்டியலில் வைத்துக் கொள்ளலாம்.
தேவைப்படாதவற்றை நீக்க, ரன் விண்டோவில் msconfig கட்டளை கொடுத்து, சிஸ்டம் கான்பிகரேஷன் யுட்டிலிட்டி (System Configuration Utility) விண்டோ பெற்று, ஸ்டார்ட் அப் (Startup) டேப்பினை அழுத்தினால் கிடைக்கும் விண்டோவில், பூட் ஆகும்போது தாமாக இயக்கப்படும் புரோகிராம்கள் பட்டியல் கிடைக்கும். இதில் தேவையற்ற புரோகிராம்களின் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை எடுத்துவிட்டு, Apply கிளிக் செய்து வெளியேற வேண்டும். மாற்றத்தினை அமல்படுத்த, சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும்.

கேள்வி: அண்மையில் என் நண்பரின் கம்ப்யூட்டரில் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்தினேன். அதில் போல்டர் ஒன்றில் இருக்கையில், Back, Up என இரு பட்டன்கள் இருந்தன. இவற்றின் செயல்பாட்டில் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
டி.சுந்தரேஷ், திருப்பூர்.
பதில்:
இந்த இரண்டில் Up பட்டன், விஸ்டா மற்றும் விண்டோஸ் 7ல் கைவிடப்பட்டது. எக்ஸ்பியில் போல்டர் மற்றும் சப் போல்டர்களுக்கிடையே நீங்கள் செல்கையில், Back பட்டன் அழுத்தினால், நீங்கள் கண்ட கடைசி போல்டருக்கு செல்வீர்கள். Up பட்டன் (பச்சை நிறத்தில் சிறிய மேல் நோக்கிய அம்புக்குறியுடன் கூடிய போல்டர் ஐகான்) அழுத்தினால், நீங்கள் வந்த வரிசையில் மேலாக ஒரு போல்டர் செல்லும். இது அதே போல்டராக இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.
விஸ்டாவிலும் விண்டோஸ் 7லும், Up பட்டன் இல்லாததால், அந்த செயல்பாட்டிற்கு வேறு ஒரு வழியை மேற்கொள்ள வேண்டும். அட்ரஸ் பாரில் போல்டர் பெயர்கள் இருக்கும். தேவைப்பட்ட போல்டரில் கிளிக் செய்தால் போதும். பெயரின் வலது பக்கம் உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், துணை போல்டர்கள் பட்டியலும் கிடைக்கும். இந்த இரண்டு சிஸ்டத்திலும் “up” செயல்பாட்டினை மேற்கொள்ள ஆல்ட் + அப் ஆரோ கீயை அழுத்தி பெறலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-201213:55:28 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க எனது லேப்டாப்பில் 5 செகண்டுகளுக்கு ஒரு முறை desktop background இல் அதுவாகவே காட்சிகள் மாறும்படி என்ன செய்ய வேண்டும். windows 7 பயன்படுத்துகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
ponniyan - doha,கத்தார்
30-ஆக-201216:54:56 IST Report Abuse
ponniyan எனது லேப்டாப் அடிக்கடி தானாக ஆப் ஆகிவிடுகிறது.மெயின் பவரில் இருக்கும்போதும் இப்படியே.இதை எப்படி சரி செய்வது
Rate this:
Share this comment
Cancel
வித்யா - திருப்பூர்,இந்தியா
29-ஆக-201209:27:27 IST Report Abuse
வித்யா சார், எனது கம்ப்யூட்டர் கேள்விகளை எப்படி பதிவு செய்வது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X